சூட்சுமம் – ஒரு பக்க கதை






”உங்க மருமகள் சொல்றதுக்கு நேர்மாறாகத்தான் எதையும் செய்வேன்னு போன தடவை வந்திருந்த போது சொன்னீங்க. இப்ப அவள் இன்னும் கொஞ்ச நாள் தங்கிட்டு போங்கங்கறா, நீங்களும் கிளம்பறா மாதிரி தெரியலையே…?”
பக்கத்து வீட்டு பாகியம் தன் பங்குக்கு ,தனியாக பங்கஜத்திடம் தனியாக வம்பு வளர்த்தாள்.
”சீரியல் பார்க்காம எனக்கு தூக்கமே வராதுன்னும் உன்னிடம் சொல்லியிருக்கேன்ல. நான் இருக்கிற ஊரில அரசு கேபிள் டி.வி வந்த பிறகு,சீரியல்களை
தொடர்ச்சியா பார்க்க முடியலை. இப்ப இருக்கிற நிலைமையில, சென்னையில் மட்டும் தான் சீரியல் பார்க்க முடியும்னு புரிஞ்சுகிட்டேன். ஆகையினால், இந்த தடவை, என் மருமகள் சொல்லை தட்டறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்”
மாமியாரின் கொள்கை மாற்றத்தை அறியாமல், அவர் ஏன் இன்னும் ஊருக்கு கிளம்பவில்லை என்று மருமகள் குழம்பிக் கொண்டிருந்தாள்
– ஏப்ரல் 2012