சாமியும் வேணாம் – ஒண்ணும் வேணாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்டுல – ஒரு நரி இருந்திச்ச. அந்த நரி, அங்க வர்ற ஆட்டுக்கெடாயப் புடுச்சுத் திங்கறது வழக்கம். ஒருநா, ஆட்டுக்காரன் சுதாரிக்சுக்கிட்டா. வக்காலோளி நரி, தெனக்கிம் ஆட்டப் புடுச்சு திண்ணுது. ஒரு நாளைக்காவது, ஆட்டப் புடிக்கயில, நல்லா மாட்டணும்ணடு, வம்மம் வச்சுக்கிட்டிருக்கர். 

ஒருநாத் தேதில், இவ, ஆட்டப் பத்திக்கிட்டுப் போறா. போகயில, இந்த நரி போற வழில பதுங்கி வழில பதுங்கி இருக்கிறதப் பாத்துப்பிட்டா. பாத்திட்டு, கம்ப ரெடியா வச்சுக்கிட்டு ஆட்டுக்குள்ளயே நடந்துபோறா. கண்டாரோளி நரி, அவனப் பாக்கல. ஆட்டு மேலயே குறியா இருக்கு. கிட்ட வரவும், பெரிய கெடா மேல தாவிப் புடுச்சுச்சோ இல்லயோ, கம்ப வச்சு மாட்டிட்டா. மாட்டுண்டாலும் செம்மையான மாட்டு, முக்கி மொனங்கிக்கிட்டு நரி ஓடுது. ஓடியாந்து, சக நரிகள் கூப்ட்டு, இந்த ஆட்டுக்காரன் என்னய அடிச்சுப்பிட்டா. நம்ம ஒண்ணு சேந்து, அவனப் பழி வாங்கணும்ண்டு கூட்டம் போட்டுப் பேசுதுக. இத, ஒழிஞ்சிருந்து ஆட்டுக்காரன் கேட்டுக்கிட்டா. இப்டியா பேசுறீங்க. இருங்க, ஒங்களண்டு பேசாம இருந்துகிட்டா. 

நம்மளுக்கு நேரஞ் சரியில்ல. காட்டுல இருக்ற காளியம்மாளக் கும்பிடணும். கும்பிட்டா, அந்தக் காளி, அந்த ஆட்டுக்காரனுக்கு கண்ணுத் தெரியாம செய்யும். நம்ம, தெனக்கிம் ஒரு ஆட்டப் புடுச்சுத் திங்கலாம்ண்டு, மொதல்ல அடிவாங்கின நரி சொல்லுச்சு. மத்த நரிங்களாம் அதுக்கு ஆமா சாமி  போட்டுச்சுக. 

நரிங்க சந்தைக்குப் போகுதுங்க. கடல, பொறி, அவுலு, பழம் தேங்காயெல்லாம் வாங்கிக்கிட்டு வந்து, வச்சிட்டு ஒரு கெடையில போயி, பெரிய கெடா ஒண்ணப் புடுச்சுட்டு வந்து கெட்டி வச்சிருக்குக. 

அப்ப: இந்த ஆட்டுக்காரன் என்னா செஞ்சாண்டா, மேலுகாலெல்லாம் சந்தனத்தைப் பூசி, செந்துருக்கத்த நெத்தில் வச்சு, அம்மங்காப்புக் கொளைய ( வேப்ப இலை ) மேலுல கட்டி, கட்டக் கம்பு ஒண்ணக் கையில் புடுச்சு, கோயிலுக்குள்ள போயி, காளீஸ்வரி மாதிரி ஒத்தாந்துட்டா இத, ஒரு கெழட்டு நரி பாத்துக்கிட்டே இருக்கு. அதுனால, அந்தக் கெழட்டு நரி கூட்டத்துக்குள்ள போகாம, கூட்டத்த விட்டு ஒதுங்கியே இருக்கு. 

ரெம்பத் தடபுடலா நரிங்க வந்து, அடுப்பக் கூட்டி சோறக் காச்சுதுக. தண்ணி எடுத்துட்டு வாரது – தண்ணி எடுத்திட்டு வருது. அரிசி அரிக்கிறது ஒரு பக்கம் அரிசி அரிக்குது. தீ பொங்க எறிக்கிறது – தீ தீ எறிக்குது. பொங்கல் வைக்கிறது வைக்குது. ரெண்டு நரி கொடயப் புடுச்சுட்டு வந்து ரெடியா நிக்குதுக. இதெல்லாம் பாத்துக்கிட்டு, வாங்கடி இண்ணக்கி ஒங்களப் பேசிக்கிறேண்ட்டு, கம்ப வச்ச வாக்குல ஒக்காந்திருக்கா. 

பொங்கப் பொங்கவும், கெடாய வெட்டி, உறிச்சு, கரியச் சுட்டுச் சாமிக்குப் படைக்குதுக. பொங்கலுஞ், சுட்ட கரியும் நல்லாத் திண்டா. வகுறு நெறயவும், லேசாத் தலைய ஆட்னா. ஆட்டவும், சாமிக்கு வகுறு நெறஞ்சிருச்சுடா, வாங்கடா! போயி – நம்ம சாப்புடலாம்ண்ட்டு கோயிலுக்குள்ள பந்தி போடுதுக. வெளிய இருக்கிற கெழட்டு நரி, போங்கடி நல்லா சாத்தப் போறாண்டிண்டு சொல்லுது. பந்தி வேகத்துல, அது பேச்ச, எந்த நரியுங் கேட்டுக்கல. 

உள்ள பந்தி நடக்குது. விரு விருப்பா எல்லா நரிங்களும் சாப்பிடுதுக. லேசா வெளிய வந்து, கோயில் கதவ சாத்திட்டு, போட்டானாம் அடி. சும்மா! காளு காளுண்டு கத்திக்கிட்டு அங்ஙிட்டும் இங்ஙிட்டும் ஓடுது. பெறகும், இவ் அடிய நிறுத்தல, அடி பொறுக்க மாட்டாம, சும்மா, கழிஞ்சு குமுச்சிறுச்சுக. 

அப்ப வெளிய நிக்கிற கெழட்டு நரி, ‘சொல்லுறவ் சொன்னாக் கேப்பிங்க! நாஞ் சொன்னாக் கேப்பீங்களா? இப்ப பெறுங்கடி – பெறுங்கண்ட்டு ஓடிப் போச்சாம். காலு போனதும் கையி போனதுமா, முக்கிக்கிட்டும் – மொனங்கிக்கிட்டும். இழுத்துக்கிட்டும் – பரிச்சுக்கிட்டும் ஓடுச்சுங்களாம். நல்லாச் சாமி கும்புட்டோம்டா! சாமியும் வேணாம். ஒண்ணும் வேணாம்ண்டு சொல்லிட்டு, ஆளுக்கொரு பக்கமா ஓடுச்சுங்களாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *