கூடாது




“ஏய்..குடா.”
“முடியாது!”
“இப்போ கொடுக்க போறியா இல்லியா நீ..?” குளித்துவிட்டு முடியை ஒதுக்கிக் கொண்டிருந்த கன்யா சீப்பை தன் உச்சி தலையில் உட்கார வைத்துவிட்டு திரும்பினாள். “மரியாதையாய் கொடுத்திரு!”
“போடி! உகனக்கென்ன மரியதை” அவளது தம்பியும் எட்டாங்கிளாஸ் படிப்பவனுமாகிய விஷ்ணு வைக்கிள் சாவியை கண்ணுக்கு நேரே ஜாலம் காட்டி இடுப்பை வளைத்து ஆட்டம் போட்டான்.
அந்த ஆட்டத்தில் ஒரு இறுமாப்பிருந்தது. உன்னால் என்ன செய்ய முடியும் என்கிற எகத்தாளம். போதும் போதாதிற்கு விசில் வேறு!
கன்யாவிற்கு அதற்கு மேலும் பொறுமையில்லை. உட்கார்ந்திருந்த ஸ்டூலை ஒதே தள்ளாய்க் தள்ளிவிட்டு எழுந்தாள். முடியை அள்ளி முதுகில் பரப்பிட்டுவிட்டு நாலே தப்படியில் தம்பியைப் பிடிக்க முனைய. அதற்குள் அவன் ஹாலை விட்டு வாசலுக்குள் போயிருந்தான்.
அவள் வாசலுக்கு ஓட அந்தப்பாக்கம் போக்கு காட்டிவிட்டு அறைக்குள் ஒடிவந்து கொடிக் கயிற்றிலிருந்து சட்டையை எடுத்துத் திணிப்பதிற்குள்ளேயே பிடித்துக் கொண்டாள்.
“விஷ்ணு விளையாடாதே!”
“உன்கிட்ட எனக்கென்ன விளையாட்டு” என்று சாவியை உள்ளங்கையில் வைத்து கெட்டியாய் மூடிக் கொண்டான்.
அவளுக்கு அவனது விரல்களை விடுவிக்கவே முடியவில்லை. “சரியான காட்டான்! கையை இது மரக்கட்டை!”
“நா மரக்கட்டைன்னா நீ மரவட்டை!” என்று உதறிக் கொண்டு ஓடினவனை வீட்டிற்குள்ளேயே துரத்தினாள். ஒரு மூலையில் மாட்டிட்க கொண்டவள் இனியும் அக்காவிடமிருந்து தப்பிக்க முடியாது என்று தோன்றவே தந்திர்றேன் நகரு.”
“தா!” என்று மார்பு விம்ம மூச்சு வாங்டகனாள். கழுத்து வியர்வையை துடைத்துக் கொண்டாள்.
“முதலில் நகரு!”
“சீக்கிரம் கொடுடா ரிகார்ட் எழுதணும்.”
“இந்தா” என்று நீட்டினான். அவள் கப்பென்று பிடுங்க முனையவே கையை உள்வாங்கிக் கொண்டு, “ஏமாந்தியா! ஏமாந்தியா!’
“விஷ்ணு! எனக்கு கெட்ட கோபம் வரும்.”
“கெட்டவங்களுக்கு கெட்ட கோபம்தான் வரும்.”
‘அப்பாட்ட சொல்வேண்டா!”
“சொல்லேன். உனக்கு அப்பாசப்போர்ட்டுன்னா எனக்கு அம்மா!”
“சீ! குடுடா!”
“இந்தா.” என்று திரும்ப நீட்டிவிட்டு, அவள் நெருங்கவே குனிந்து, நிமிர்ந்து. இடது, வலாது, மேலே, கீழே என போக்குக் காட்டி வெறுப்பேற்றினான். கடைசியில் பைக்கென வாயில் போட்டுக் கொண்டு “இந்தா இந்தா” என்று வெறும் கையை மூடிக்கொண்டு நீட்ட அவளுக்குக் கோபம் அதிகமாயிற்று.
“உனக்கு அவ்ளோ திமிரா?” என்று பளாரென அறைந்தாள்.
அவனும் சும்மாயிருக்காமல் அவளை அறைந்து, அவள் பதிலுக்கு அறைந்து, அவன் அவளது முடியைப் பிடித்து இழுக்க-
“ஆ.. அம்மா!” என்று அவள் முழுங்கால் போட்டுக் கொண்டு குனிந்த நேரத்தில் அம்மா காய்கறிப் பையுடன்உள்ளே பிரவேசித்தாள்.
“ஏய் என்னடி இங்கே ரகளே!”
“ரகளை நானா பண்றேன்? எல்லாம் உன் சீமந்திரபுத்திரன்தான்! என் முடியைப் பிடித்து இழுத்து என்று சொல்லி முடிப்பதிற்குள் கன்யாவின் கண்கள் கலங்கிப் போயின. தலையில் வின்வின்!
“விஷ்ணு!”
“எங்கிட்ட வம்புக்கு வந்தால் அப்படித்தான் இழுப்பேன்!’
“யாரா உங்கிட்ட வந்தது. நான் மரியாதையாய்த் தானே தானே கேட்டேன். தர வேண்டியதுதானே?”
“கேட்டதும் உடனே தந்துவிட வேண்டுமா? சைக்கிள் உனக்கு மட்டும்தான் சொந்தமா…? எனக்கும்தான்!” என்று பலிப்புக் காட்டிவிட்டு. “எங்கிட்ட மோதாதே…” என்று பாட ஆரம்பிக்க ஆத்திரம் தாங்காமல் பவுடர் டப்பாவையும் சீப்பையும் அவன் மேல் விட்டெறிந்தாள்.
“..ம்கும்!. எம்மேல பட்டதா.. எம்மேல பட்டதா..!”
“பாரும்மா அவனை!”
அவன்தான் இனம் தெரியமல் நடந்துக்கிறான்னா, காலேஜ் போகிற உனக்கு கூடவாடி தெரியலே?”
‘ஆமா! ஆச் ஊச்சுன்னா உடனே காலேஜ் பொட்டைப் பிள்ளைன்னு எம்மேல தான் பாய்வீங்க!”
“ஆமா பொட்டப்புள்ளை நீதான் அனுசரித்துப போகனும்!”
“நான் எதுக்கு அனுசரிக்கணும்?”
“அவன் உன் தம்பி இல்லையாடி!”
“தம்பியா அவன். எமன். எனக்கு கெட்ட பெயர் வாங்கித் தரதுக்குன்னே அவதரித்தவன்.“
அதற்குள் விஷ்ணு செருப்பை மாட்டிக் கொண்டு “நான் வரேம்மா! வரேண்டி உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்” என்று சைக்கிளில் தொற்றினான்.
“அவனது திமிரைப் பார்த்தியாம்மா… எல்லாம் நீ கொடுக்கிற இடம்.”
“சின்ன பையன்தானே போனாப் போகட்டுமே! உனக்கெதற்கு சைக்கிள்?”
“லைப்ரரி போகணும். நோட்ஸ் எடுக்கணும்!”
“இதுக்கா இத்தனை சண்டை தெருக்கோயில இருக்கிற லைப்ரரிக்கு நடந்து போகக்கூடாதா நீ?”
“லைப்ரிக்கு நான் நடந்து போகணும். விளையாடப் போறவன் சைக்கிளில் போகணுமா? இது எந்த ஊர் நியாயம்.”
“நியாயமெல்லாம் அப்புறம் கிடக்கட்டும. தலையைச் சீவிட்டு போய் தண்ணீர் எடுத்துவா.”
“முடியாது.”
“போடி அப்புறம் நின்னிரும்.”
“உன் செல்லப் புத்திரனையே போய் எடுத்து வரச்சொல்” என்று அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டான்.
அவர்களுக்குள் நடக்கும் புத்தம் யுத்தம் ஒன்றும் புதிதில்லை. விபரம் தெரிந்த நாள் முதலே இருவருக்கும் ஆகாது.
இரண்டு பேத்தையே சாமாளிக்க முடியல்லை. ஆறும் ஏழும் குழந்தைகள் உள்ளவர்கள் என்ன செய்வார்களோ? என்று தாய் சலித்துக கொள்வாள்.
இன்ன விஷயத்திற்குதான் அவர்களிடம் போர் மூளும் என்று சொல்ல முடியாது.
காலையில் எழுந்ததுமே டாய்லெட்டிற்கு போராட்டம். கன்யா பல்விளக்கிக் கொண்டிருக்கும் போதே விஷ்ணு ஓடிப்போய் கதவை மூடிக்கொள்வான் என்னப் பண்ணுவானோத் தெரியாது. அரைமணி நேரம் தபஸிற்குப் பிறகுதான் வெளியே வருவான்.
பிறகு பேனா, பென்சில் தகறார். சாப்பிடுவதில்! கிளம்புவதில் டிபன்பாக்ஸில்! செருப்பு! ராத்திரி டி.வியிலும் கூட பிரச்னை. கன்யா முதல் அலைவரிசை என்றால் அவன்
இரண்டாவது அலைவரிசையை வேண்டுமென்று போடுவான்.
“ஏய் நியூஸ்டா…!”
“சரியான நியூஸென்ஸ்! மெட்ரோ பார்க்கலாம்!“
“பெரிய மெட்ரோ! சினிமா சினிமான்னு உயிரை எடுக்கறான்!”
“நீ சினிமாவே பார்க்கமாட்டியாமே…?”
“பார்ப்பேன் அதுக்காக இருபத்து நான்கு மணிநேரமும் அதேதானா?”
இரண்டு பேருமே விட்டுக்கொடுக்காமல், அப்பா கோபப்பட்டு டி.வி.யை நிறுத்த வேண்டிவரும். பெருமபாலான சமயங்களில் தவறு விஷ்ணு வினுடையதாய் தானிருக்கும். ஆனாலும் அவன் கடைகுட்டி விபரம் தெரியாதவன் என்கிற போர்வை போர்த்தி கன்யாவிற்கே திட்டு கிடைக்கும்.
பெண்பிள்ளை அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும். விட்டுக்கொடுததுப் போகவேண்டும் என் உபதேசங்கள் கிளம்பும். கண்டிப்பும் தண்டிப்பும் அவளுக்கு மட்டும் தான்.
விஷ்ணுவிற்கு அதுவே லைசென்ஸ் கொடுததது போலாகி விடும். தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவளை சீட்டிக் கொண்டேயிருப்பான்.
அன்று-
அப்பாவும் அம்மாவும் அவசரமாய் வெளியூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். நெருங்கிய உறவுக்காரர் தவறிவிட்டதாய்த் தகவல் வர அதற்குத்தான் அந்தப் புறப்பாடு.
“ஏய் பசங்களா… போய்ட்டு ரெண்டு நாள்ல திரும்பிடறோம். வீட்டை பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்.”
“சரிப்பா!”
“வீட்டை பார்த்துக கொள்வது இருக்கட்டும். ஒருத்தருக்கொருததர் அடிச்சுக்காம இருப்பீங்களா? “
“உன் பிள்ளையாண்டான்ட்ட நல்லா சொல்லிவிட்டு போ!”
“ஏன் நான் தான் இளிச்சவாயனா?”
“ஏய்! போதும் போதும். இப்பரே ஆரம்பிச்சிராதீங்க!” என்று தாய் பதறுவாள். “இதுங்களை நம்பி எப்படி விட்டுட்டுப் போறது! பேசாம நீங்க மட்டும் போயிட்டு வந்திருங்களேன்!”
“அதெல்லாம் பார்த்தால் முடியுமா நீயும் வரலென்னா நல்லா இருக்காது. வாப் போவோம்!”
இருவரும் கிளம்பிப் போய் அரை நாளிற்கு எந்தப் பிரச்சனையுமில்லை. உடன்பிறப்பு இருவரும் ஒன்றாய் சாப்பிட்டனர். செஸ் விளையாண்டனர்.
“பத்து மணிக்கு விஷ்ணு நான் சினிமாவிற்கு போறேன்க்கா” என்றது பிரச்சனை ஆரம்பமாயிற்று. அவள் மறுக்க அவன் மீற, கன்யா டவல் எடுத்துக் கொண்டு பர்ஸையும் எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் போய் கதவை மூடிக் கொண்டாள்.
தன்னை விடாத அக்காவை எப்படி பழி தீர்க்க வேண்டும் என்று விஷ்ணு தருணம் பார்த்துக கொண்டிருந்தபோது தான் – அடுத தெருவிலிருந்து பாஸ்கரன் வந்தார்.
அவர் அப்பாவின் அலுவலகத்தில் வேலை செய்பவர் சற்று சபலக்கார். “விஷ்ணு! அப்பாயில்லை…”
“இல்லை ஊருக்குப் போயிருக்கார்.”
“அம்மா.”
“அம்மாவும்தான். ” என்று வீட்டு ஜன்னலை வெறிக்க ஆரம்பித்தான்.
“ஏண்டா அம்பி ஒரு மாதிரி இருக்கே.”
“எல்லாம் அக்காவாலதான்.”
“அக்காவிற்கு என்னவாம்.”
“திமிர்பிடிச்சவள். பொறாமைக்காரி. ராங்கிக்காரி. பாருங்க அங்க்கிள். சினிமாவுக்கு போகணும்னு சொல்லவே காசை எடுதது வச்சுக்கிட்டா.”
“அக்கா தானேப்பா அட்ஜஸ்ட் பண்ணிக்கோயேன்.”
“அக்காவா இவள் சண்டாளி. அவளை நான் வீழ்த்தணும். “
“எப்படி?”
“எப்படியாவது, எந்த வழியிலாவது அவளை அழவைக்கணும்.”
அப்போது கன்யாவிற்குச் சோதனையான நேரம் போலும். டாங்கில் தண்ணீர் நின்று போக.
“ஏய் விஷ்ணு மோட்டரைப் போடு.” என்று கத்தினாள்.
“முடியாது.”
“கண் எரியுதுடா.”
“எரியட்டும். நன்றாக எரியட்டும்.”
“ப்ளீஸ்டா.
பாஸ்கரன், “நான் வேணுமானால் மோட்டார் போடட்டுமாப்பா” என்க. “வேண்டாம் அங்க்கிள்! நீங்க சும்மா இருங்க!” என்று தடுத்தான்.
கடைசியில் கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்து முடியாமல் போகவே கன்யா டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்து மோட்டர் போட்டு செல்ல-
அவளின் அரைகுறை ஆடையையும், தழுதழு உடலையும் பார்த்த பாஸ்கரனிற்கு உணர்ச்சிகள் துளிர்விட ஆரம்பித்தது. உடலில் ஜிவ்வென ரத்தம் பாய்ந்தது.
வீட்டில் யாருமில்லை. இருக்கிற தம்பியும் சினிமாவிற்காக தவமிருப்பவன். இவன் எப்படியாவது அனுப்பிட்டால்…அனுப்பிவிட்டால் கன்யாவை டாய்லட்டில் வைத்தே…
யாருக்குத் தெரியப் போகிறது?
அவளாக வெளியே சொல்ல முடியாது. அது அவளுக்குத்தான் அவமானம்! நிச்சயம் சொல்லமாட்டாள். மறைத்து விடுவாள்.
சிந்தை சிதிலமடைந்தது. கண்ணாபின்னாவென்று ஓட ஆரம்பித்தது.
“விஷ்ணு நீ படத்துக்குத் தானே போகணும்.”
“ஆமாம்.”
“என்ன படம்…?”
“ரஜினி.“
“போயிட்டு வா. உங்கக்காட்ட நான் சொல்லிக்கொள்கிறேன்.”
“பணம்.”
“இந்தா. வாங்கிட்டு ஜாலியாய்ப் போயிட்டு வா.”
“வேணாம் அங்க்கிள். அப்பா வந்ததும் வத்தி வைப்பாள்.
“அதெல்லாம் நான் பார்த்துககொள்கிறேன், கிளம்பு”
விஷ்ணு வேறு எதுபற்றியும் யோசிக்கவில்லை. அவனுக்கு யோசிக்கத் தோன்றவில்லை. அவனுடைய சிந்தையெல்லாம் சினிமாவின் மேலேயேயிருந்தது. ரஜினி! அவரது ஸ்டேயில்! சண்டை!
‘தலைவா! இதோ வருகிறேன். ‘மணி பார்த்தான் பத்து பத்து! இந்நேரம் படம் ஆரம்பித்திருப்பான். ‘ஓடு. சீக்கிரம் ஓடு!’
சைக்கிளை எடுத்தான்.
பறந்தான்.
மூச்சிறைக்க டோக்கன் வாங்கி, டிக்கட் வாங்கி தியேட்டருககுள் பிரவேசித்த போது படம் ஓடிக்கொண்டிருந்தது. கண்களை இருட்டு கவ்விற்று. கண்கள் பழக்கப்படும்வரை இப்படியே ஓரமாய் நின்று பார்ப்போம் என்று நின்று கொண்டான்.
திரையில்
குடிசை ஒன்றில் பெண் ஒருத்தி அலறிக் கொண்டிருந்தாள். பதினறு வயது மதிக்கத் தக்க அவளை வில்லன் குடித்துவிட்டு வந்து கற்பழிக்க முனைய. அவள் எதிர்த்துத் தோற்று அலற அந்த அலறல் கேட்டு அவளது தம்பி ஒடிவந்து, அதிர்ந்து வில்லனை எதிர்க்க முனைந்து, முடியாமல் போகவே அழுது கடைசியில் வேறு வழியில்மல் கையில் கிடைத்த கல்லெடுத்து வில்லனின் மண்டையைக் குறிபார்த்து எறிய-
வில்லன் ரத்தம் சிந்தி “அம்மா” எனத் தலையை பிடித்துக கொண்டு சரிய, தியேட்டரில் பெருத்த விசில் சத்தம் கைதட்டல் (இருக்காதாப் பின்னே அந்த பையன் தானே பின்னால் ரஜினியாய் வளரப் போகிறான்!).
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க, திரையில் எழுத்து ஒட ஆரம்பித்தது. அதுவரை நின்று பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கு ஏனோ அந்தக் காட்சிகளை ரசிக்க முடீயவில்லை. மனதிற்குள் ஏதோ ஒரு உறுத்தல்.
தப்பு செய்துவிட்ட பாவனை. படத்தில் கவனம் போகவில்லை. கன்யாவின் ஞாபகம் வந்தது. தொடர்ந்து பாஸ்கரன்!
அந்தாள் மோசமானவன் என்று குடித்துவிட்டுப் பெண்களிடம் கலாட்டா செய்வான் என்றும் அவனும் எப்போதோ கேள்விப்பட்டிருந்தான்.
வீட்டின் அப்பா அம்மா இல்லை. அக்கா மட்டும் தனியாய் இருக்கிறாள். அப்படியிருக்கும் போது அந்தாளை வீட்டில் வைத்துவீட்டு வந்திருக்கலாமா? அது ஆபத்தில்லையா?
உள்ளுணர்வு உணர்த்த. சட்டென கதவைத் திறந்துக் கொண்டு வெளியே பாய்ந்தான். சைக்கிளை எடுக்க “ஏய் தம்பி படம் பார்க்கலே.”
“இல்லை.”
“டோக்கன் எங்கே…?”
“இந்தா!” என்று விசிறிவிட்ட வேகவேகமாய் மிதித்து வீட்டை அடைந்தபோது. எது நடக்கக் கூடாது என்று பயந்தானோ அதை நடத்திவிட பாஸ்கரனும் துடிப்பதும், அறைக்குள்ளிருந்து அக்காள் அலறுவதும் கேட்டது.
அந்த அலறல் அவனுக்குள் ஆவேசத்தைக் கிளப்பிற்று. சைக்கிளை போட்டுவிட்டு கதவை இடித்து பார்த்தான். உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.
“அக்கா! அக்கா!” என்று கத்திக்கொண்டு வீட்டைச்சுற்றி வந்தான். ஜன்னலை இடிக்க திறந்துக் கொண்டது.
உள்ளே – கன்யா பாதி ஆடை கிழிந்த நிலையில் போராடிக் கொண்டிருக்க, பாஸ்கரன் மிருகமாய் அவள் மேல் கவிழ முயல அதைப்பார்க்கப் பார்க்க விஷ்ணுவின் ரத்தம் சூடாயிற்று “அங்க்கிள்… அங்க்கிள்… ! அக்காவை விட்டிருங்க.”
“யாரு… விஷ்ணுவா… நீ கண்டிக்காம போயிரு!”
“முடியாது. அவளை மரியாதையாய் விட்டுவிடுங்கள். இல்லையென்றால்.”
7″சர்தான் போடா! உன்னால்தான் இவளை ஜெயிக்க முடியலை பழி வாங்க முடீயலை நான் ஜெயிக்கறேன். பழிவாங்கறேன். டிஸ்டர்ப் பண்ணாமல் போயிருப்பா!”
பழியா…அக்காவையா… நீயா…? அவனுக்கு கப்னெ வியர்த்து எங்களுக்குள் ஆயிரம் இருக்கும். நாங்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வோம். யுத்தம் நடத்துவோம். அது எங்களுக்குள் நடக்கும் உரிமை. எங்களது விளையாட்டு, நாங்கள் ஓரே ரத்தம். உடன்பிறப்புக்களுக்குள். எத்தனையோ இருக்கும். எத்தனையோ போட்டி பொறாமையிருக்கும்.
அதற்காக…
அதற்காக? எங்களது மனஸ்தாபத்தை பயன்படுத்தி அந்நியன் ஒருவன் அக்காவை பழிவாங்குவதா. அதற்கு நானும் உடந்தையாக இருப்பதா…
கூடாது!
அவன் ஒரு முடிவிற்கு வந்தான் ஜன்னல் அசைத்துப பார்த்தான். முடியவில்லை உள்ளே கன்யாவின் கோலமும அலறலும் மனதை கசக்கி பிழிய தெருப் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
அங்கே கொட்டிக்கிடந்த சரளைக் கற்கள் அவனது கவனத்தை ஈர்த்தன. சட்டேன குனிந்தான். எடுத்தான். ஜன்னல் வழி ஆவேசத்துடன் பாஸ்கரனின் தலையை குறிவைத்தான்.
அவனது குறி தப்பவில்லை, பாஸ்கரன் ரத்த்துடன் சரிய கன்யா, “தம்பி!” என்று கண்களாலும் வார்த்தைகளாலும் நன்றி பொங்கினாள்.
– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)