கரை மீறிய கடல்!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 2,169
அது ஒரு குழந்தைக்குப் பேர் வைக்கும் வைபவம். ஆசிகூற பெரியவர்கள் கூட்டம் அழைக்கப்பட்டு வந்திருந்தாலும், அழையா விருந்தாளிகளாய் சின்னஞ்சிறுகள்! எல்லாம் ‘நான்கு, ஐந்து’ வயதுக்குள்ளாக அதிகம். அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாய் ஒரே களேபரம் விழாவே ரெண்டு பட்டதுன்னா பாத்துக்குங்களேன்.
முன்வரிசையில் உட்காருந்திருந்தார் முனுசாமி. வயதில் மூத்தவர் என்பதாலும் குடும்பத்தில் முதியவர் என்பதாலும் அவருக்கு முன் வரிசையில் இடம்..!
ஓடியாடும் குழந்தைகளை என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் விழா ஏற்பாட்டாளர் வித்வநாதன். பிள்ளைகளைத் திட்டினால் பெரியவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டிவரும். யோசனையில் இருந்தார்.
பிறந்த குழந்தைக்கு நாமகர்ணம் சூட்டும் வரை யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆளாளுக்கு ஆசி வழங்கி கவர் கொடுத்து கவனித்தார்கள்.
அந்தப் பெண் மட்டும் கூடியிருந்த எல்லாக் குழந்தைகளையும் அருகே அழைத்தாள்.. ‘இந்தா..! இந்தா!’ என்று ஆளுக்கொன்றாய் கையில் நீல வண்ண பந்துகளைத் திணித்து அனுப்பினாள். குழந்தைகளில் ஆணும், சரி பெண்ணும் சரி, பந்துகிடைத்த பரவத்தில் ஹாலில் அவை தனித்து ஆடத் தொடங்கின. விழா டிஸ்டிரபில்லாமல் தொடர்ந்தது!
அந்தப் பந்து பிளாஷ்டிக்கினாலான, ‘உலக உருண்டை’ பொறிக்கப்பட்ட ஒரு பந்து!. அவள் அதை அங்கு பிள்ளைகள் வந்தால் கொடுப்பதற்கென்றே வரும் வழியில் கடையில் வாங்கி வந்திருக்கிறாள்.
அதைப் பார்த்து நெகிழ்ந்து போன அவன் அவளிடம் கேட்டான். “என்ன நீங்க டீச்சரா?! குழந்தைகளுக்குப் பயன்படறாமாதிரி உலக உருண்டை படம் பொறிக்கப்பட்ட இதை வாங்கி வந்திருக்கீங்களே?!”’ என்றதும்.
அவள் சொன்னாள், “நான் ஆசிரியை அல்ல…! ஆனால் கல்வித்துறையில் வேலை பார்க்கிறேன். மாதச் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கல்விக்கு காணிக்கையாய் பரிசுப் பொருளுக்குச் செலவு செய்வேன்!. அதூம், இப்படி வளரும் பிள்ளைகளுக்கு!” என்றாள்.
கல்வி கரையில என்பது படிப்பதற்கு வயது இல்லை., எல்லை என்பதை மட்டும் குறிக்கவில்லை., படிப்புக்காக பணத்தைப் பயன்படுத்துவதையும் சேர்த்தே குறிக்கிறது.
கல்விக்காக உதவுபவர் டீச்சராகத்தான் இருக்கணும்னு இல்லை. கல்வியில் ஆர்வமிருப்பவராய் இருந்தாலே போதும்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
