கண்ணீரில் பிரதிபலித்த முகம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: February 2, 2026
பார்வையிட்டோர்: 2,938 
 
 

அந்தக் டீக்கடையில் அமர்ந்துக்கொண்டு ரீல்ஸை ஸ்க்ரோல் செய்துக்கொண்டிருந்தவாறு ‘டீ அருந்திக் கொண்டிருந்தவனுக்கு ‘டிங்’ என்ற ஓசையுடன் அந்த வாட்சப் வீடியோ மெசேஜ் வந்தது.

அதனை கிளிக் செய்துப்பார்த்தபோது,அவனது முகம் வியர்த்துக் கொட்டியது,அப்படி அவன் அந்த வீடியோவில் பார்த்தது…

அவனது உயிர் நண்பன் சந்தோஷின் வீடியோவைத்தான்.

அந்த வீடியோவில் சந்தோஷ், பல நாள் தூங்காததற்கான அறிகுறியாக கண்கள் சிவந்திருந்தன, கையில் உள்ள போனின் வழியாக அவன் வீடியோவை ரிக்கார்ட் செய்துக்கொண்டிருந்தான்.

“டே! விஷ்ணு, இது தான் நான் உனக்கு பண்ற கடைசி மெஸேஜ். இனி நீ என்னை பாக்கும் போது, நான் பிணமா இருப்பேன்.” என்று சொல்லும்போது அவனது கண்ணில் கண்ணீர் வழிந்தது.

“இது ஒன்னும் நான் எடுத்த திடீர் முடிவு கிடையாது, நீ மட்டும் என் வாழ்க்கையில் வராம இருந்திருந்தா நான் எப்பவோ செத்துருப்பேன், நான் செய்த கொலைகள் பாவமாக வந்து என்னை ஒவ்வொரு நாளும் சாவடிச்சிட்டிருக்கு. அதிலிருந்து என்னை விடுவிச்சிக்கத்தான் இந்த முடிவு எடுத்துருக்கேன், என் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களால ஒரு சைக்கோவா மாறி, ஒவ்வொருத்தரையும் கொன்னேன். அதுக்கான தண்டனையை அனுபவிச்சு, திருந்தி வெளியே ஒரு நல்ல மனிதனாக வாழனும்னு ஆசையோட தான் நான் ஜெயிலிலிருந்து வெளியே வந்தேன், ஆனாலும் என்னை ஒரு கொலைகாரனாகத்தான் இந்த ஊர் பாத்துச்சு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நீ என் வாழ்க்கைக்குள்ள வந்த, எல்லோரும் என்னை கொலைகாரனாக பாத்துக்கிட்டிருந்தப்ப, நீ மட்டும் என்னை மனுஷனா மதிச்ச. உன்னோட பிரெண்டா என்னை ஏத்துக்கிட்ட. இன்னமும் சொல்லப்போனா எனக்கே நான் யார்னு? நீதான் புரியவெச்சே, ஆனாலும் நான் ஒவ்வொருத்தரையா கொலை செஞ்சுக்கிட்டிருந்தப்ப, அவங்க “என்னை விட்ரு,என்னை விட்ரு”ன்னு அவங்க கதறுன சத்தம் இன்னும் என் காதில் ஒலிச்சுக்கிட்டே இருக்கு. இனி என்னால இந்த பின்தொடர்கிற பாவத்தோடயும் சத்தத்தோடயும் வாழ முடியாது. சட்டம் எனக்கு வழங்கியிருக்குற வேண்டிய தண்டனையை நானே எனக்கு கொடுத்துக்குட்றேன், அண்ட் கடைசியா நான் உனக்கு ஒன்னு சொல்ல விரும்புறேன் “தாங்க்ஸ்”.

என்று கூறுவதோடு அந்த பதிவு முடிந்தது.

வீடியோ முடிந்திருந்தும், அந்தத் திரையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவின் கண்களில் நீர் குளம்போல் தேங்கியிருந்தது.

அந்த நீரில் சூழ்நிலையால் கொலைகாரனாய் மாறி, அவன் கொடுத்த அன்பு என்னும் அரவணைப்பால் மனிதனாய் மாறிக்கொண்டிருந்த சந்தோஷின் முகம் தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *