எல்லாம் நன்மைக்கே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 3,217 
 
 

குப்பம்மாவிற்கு இது நான்காவது பிரசவம். இதற்கு முன் பிறந்த மூன்றும் பெண் குழந்தைகள். சே.. என்ன இந்த கடவுள் நமக்கு ஆண் வாரிசைக் கொடுக்காமல் கொடுக்காமல் பெண்ணாகப் பிறந்து விட்டதே என்று சுப்பனும் குப்பம்மாவும் புலம்பாத நாளே இல்லை. இருந்தபோதிலும் மீண்டும் கருத்தரித்தாள் சுப்பம்மா.

கடவுளே பிறக்கின்ற குழந்தையையாவது ஆணாகப் பிறக்க வை என்று வேண்டாத தெய்வமில்லை. போகாத கோவிலில்லை. ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக விரும்பத்தகாத குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதைப் பார்த்து அவர்களின் வாழ்க்கையே வெறுத்துப் போனது.

இனிமே குழந்தையே வேண்டாம் என்று முடிவு செய்து அந்தக் குழந்தைக்கு வேண்டா என்று பெயரிட்டனர். மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவள் மீது அதிக வெறுப்பு ஏற்பட்டது. ஏனெனில் இந்தக் குழந்தை நிச்சயம் ஆண்தான் என்று ஜோசியர் கூறியதால் அவளைக் கருவில் அழிக்காமல் விட்டு வைத்து இறுதியில் பெண்ணாகப் பிறந்தது அதிக ஏமாற்றத்தைத் தந்ததால் அவள் காரணமின்றி வெறுக்கப்பட்டாள்.

ஆனால் பிறந்த குழந்தை கொள்ளை அழகோடு பிறந்தது. நல்ல அறிவுள்ள பிள்ளையாக வளர்ந்தது. பள்ளியில் சேர்ந்து மிகச் சிறப்பாகப் படித்து நல்ல பேரும் மதிப்பெண்களும் பெற்றாள் வேண்டா. எப்படியோ படித்து முடித்து வெளி ஊரில் ஒரு வங்கிப் பணியில் சேர்ந்து தாய் தகப்பனை விட்டு பிரிந்து வாழத் தொடங்கினாள்.

மூன்று அக்காக்களும் திருமணம் முடிந்து கணவனோடு தனிக் குடித்தனம் சென்று விட்டனர். வேண்டாவும் வெளியூரில் தங்கி பணி செய்வதால் பெற்றோர் பிள்ளைகள் யாருமின்றி தனிமையில் வசிக்கலாயினர். முதுமையும் அவர்களை வாட்டிய|து. ஆனாலும் இவளது சம்பளத்தைக் கொண்டு அவர்களுக்கு ஒரு குறையுமின்றி கண்ணும் கருத்துமாகக் பராமரித்து வந்தாள்.

வேண்டாவிற்கு அவளது பெற்றோர் அவளை இழிவாகப் பேசிய பேச்சுகள் அவ்வப் போது நினைவில் வந்து போயின. அப்போதெல்லாம் கோபம் தலை தூக்கும். நம்மை எவ்வளவு கேவலமாகப் பேசினார்கள். அக்கா எல்லோரும் பெற்றோரை விட்டு விலகிச் சென்று விட்டதைப் போல நாமும் சென்று விடுவோம் என்று அவ்வப்போது நினைக்கத் தோன்றும்.

அதே போன்று குப்பம்மாவிற்கும் சுப்புவிற்கும் வேண்டா ஊரிலிருந்து விடுமுறையில் வந்து அவர்களைப் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் இப்படி அன்பான பெண்ணை நாம் கருவிலேயே அழித்துவிட நினைத்தோமே என்ற குற்ற உணர்ந்து வந்து போகும். இருந்தாலும் வேண்டாவிற்கு ஒரு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் அடிக்கடி வரும். அதைச் சொன்னால் வேண்டா தட்டிக் கழிக்கவே செய்தாள்.

நமது சகோதரிகள் போல திருமணமாகி நாமும் கணவனோடு புகுந்த வீடு சென்று விட்டால் இந்த வயதான பெற்றோருக்கு யார் அடைக்கலமாக இருப்பார்கள் என்று எண்ணி அவளும் திருமணத்தை வேண்டாம் என்றே சொல்லி வந்தாள்.

இதையெல்லாம் பார்த்த சுப்பனும் குப்பம்மாவும் ஒரு நாள் வேண்டாவிடம் அம்மா இவ்வளவு தங்கமாக மகளை கடவுள் கொடுத்திருப்பதைப் பார்த்து நாங்கள் அதிக பூரிப்படைகின்றோம். ஆனால் அதே சமயம் உன்னை கருவிலேயே அழித்துவிட எண்ணினோமே அப்படி அழித்திருந்தால் எங்கள் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்பதை நினைக்கும் போது தான் எங்களுக்கு அதிக வேதனையாக இருக்கின்றது. எங்களை மன்னிச்சிடுமா என்று கண்ணீர் மல்க வேண்டினர். அதெல்லாம் பரவாயில்லை. நான் இருக்கும் வரை உங்களுக்கு ஒரு குறையும் வராது. கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறினாள்.

தற்போதெல்லாம் கருக்கலைப்பு சர்வ சாதாரணமாகிப் போய் விட்டது. ஓவ்வொரு ஆண்டும் சுமார் 73 மில்லியன் தூண்டப்பட்ட கருக்கலைப்புகள் நடக்கின்றன. கருக்கலைப்பு என்பது மருந்துகள், அறுவை சிகிச்சை அல்லது பிற முறைகள் மூலம் கர்ப்பத்தை திட்ட மிட்டு அழிப்பதாகும். ஒரு உயிரை எந்த ரூபத்தில் அழித்தாலும் அது கொலை செய்வதற்குச் சமம்.

வருமுன் காக்கும் வழிமுறைகள் பல இருந்தும் அவைகளைப் பின்பற்றாமல் பிறகு வருத்தப்படுவதில் பிரயோசனமில்லை. அதே நேரத்தில் பிள்ளையில்லாம் மலடியாகப் பல பெண்கள் வாழ்கின்ற போது கடவுள் கொடுக்கும் பிள்ளை வரத்தை அழிக்க உத்தேசிப்பது மகாபாவம் ஆகும்.கடவுளால் கொடுக்கப்படுபவை அனைத்தும் நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்வோம். கரு கலைப்பைத் தடுப்போம். கருத்தாய் வாழ்வோம்.

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *