எங்கள் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 8, 2025
பார்வையிட்டோர்: 335 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆ! எங்கள் வீடு பற்றிய விஷயங்கள் வற்றாத சுனைத் எங்கள் வீடு என் கையில். எங்கள் லால்குடி வீட்டைத்தான் குறிக்கிறேன். எங்கள் லால்குடி வீடுகூட இப்போ எங்க ளுடையதல்ல. சிவராஜ குருக்களுக்கு முப்பது வருடங் களுக்கு முன்னாலேயே சொந்தமாயச்சு. 

சிவராஜ குருக்களும் காலமாகிவிட்டார். அவருடைய பிள்ளைகள் ஒற்றுமையாக ஒரு குடித்தனமாக அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல பிள்ளைகள் இன்றுபோல் என்றும் இருக்கவேணும். 

“இது பெருந்திரு வீடு. இன்றைக்கு எங்கள் கைக்கு மாறியிருக்கிறது. என்றைக்கும் இது உங்கள் வீடுதான்! சிவராஜ குருக்களைத் தவிர, வேறு யாருக்கும் இப்படி மன மாரச் சொல்லத் தோன்றுமோ? 

குருக்கள் கைக்கு மாறின பிறகு, அவர் வாசலுக்கு முகம் தூக்கி விட்டுவிட்டார். ஆனால் மற்றபடி வீடு பெரும்பாலும் இன்னும் பழைய அம்முவமாகத் தான் இருக்கிறது. 

எங்கள் வீட்டுப் பெயர் அமிர்தமய்யர் வீடு. என் கொள்ளுப்பாட்டனார் பெயர். பேச்சுவழக்கில், ‘அம்முவா மாகத் தான் திரிந்தது. 

கீழத் தெரு கோடியில் வடக்கே பார்த்து மூணாம் வீடு. 

என் தகப்பனார். அவருடைய உடன்பிறப்புக்கள் உள்பட, என் நினைப்புக்கு, முன் மூன்று தலைமுறை வரை இந்த வீட்டிலேயேதான் பிறந்து வாழ்ந்து பிரிந்து நல்லது பொல்லாதுக்குக் கூடி. அவாவா வேளை வந்தபோது இந்த வீட்டிலேயேதான் சடலம் களைந்திருக்கிறார்கள். 

என் பாட்டனார் லால்குடி பள்ளிக்கூடத்தில் தமிழ்ப் பண்டிதர். ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் அவர் சம்பளம் ரூ 15லிருந்து ஒரே தூக்கில் ரூ25க்கு உயர்ந்தது. வேலையை விட்டு விலகிய அன்று, கோச்ச வண்டியில் ஊர்வலம் கொண்டுபோய் வாசலில் விட்டதும், அவர் இறங்குகையில் என் பாட்டி கொல்லைப்புறத்தில் பற்று தேய்த்துக் கொண்டிருந்தாளோ, கீரை பிடுங்கிக்கொண் டிருந்தாளோ கொல்லைப்புறத்தில் காயப்போட்டிருந்த தென்னை மட்டை, பன்னாடை கள்ளி கொட்டாங்கச்சி களை ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தாளோ தெரியாது. எப்படியும் தெருவே திரண்டு பிரமிக்கையில், வரவேற்க வாசலில் காத்துக்கொண்டு இல்லே. கோச்சிலிருந்து வலது காலை முன்வைத்து இறங்கியவர் அந்த மஸ்லின் டர்பன், கழுத்து வரை க்ளோஸ் கோட்டு, பஞ்சகச்சம், அங்கவஸ்திர கோலத்துடன் நேரே கொல்லைப்புறம் சென்று பாட்டியைத் தரதரவென் று கூடத்துக்கு இழுத்து வந்து… இந்த மட்டும் போதும். 

அந்தக் காலத்து கோபங்கள், மூர்க்கங்கள் பூரா பூரா ஆண்களுக்கு மட்டும் பரம்பரை சொத்து. 

தாத்தா வரகவி, அவருடைய பதினாறாவது வயதில் பிள்ளையார் அவர் வாயில் கற்கண்டைப் போட்டதாக அவர் கனவு கண்ட மறுதினத்திலிருந்து அம்பாள்மேல், பிற தெய்வங்கள்மேல் பொழிந்த தோத்திரங்கள், கவிதையில் பக்த சரிதங்கள், பாமாலைகள் – ஒரு சமயம் கெஞ்சல், ஒரு சமயம் கொஞ்சல், ஒரு சமயம் ஏசல் – ஆண்டவன் அம்மு வாத்து பண்ணையாள். நம்மையே அவனுக்கு ஆயுசுக்கு வாரத்துக்கு விட்டாச்சு. வேளா வேளைக் கொடுக்க வேண்டியதை அவன் கொடுத்துத்தானே ஆகணும். அவனைக் காலில் கட்டி அடி- என்கிற முறையில். 

அம்முவாம் என்றுமே சின்னக் குடும்பமாக எனக்கு நினைவு தெரிந்து இருந்ததில்லே. 

தாத்தாவுடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள். இரண்டு தங்கைகள், அவரவர் குடும்பமும் கச்சிதமானதல்ல. 

வெற்று நாளிலேயே பகலுக்கு மூணு படியேனும் வடித் தாகணும். (இரவுக்குத் தகராறு ) அசட்டு மானம் கொண்டாடி என்ன பயன்? ரூபாய்க்கு எட்டு படி விற்ற அந்த நாளிலேயே அத்தனை வயிறு வளர்க்க என் பாட்டனார் சம்பளம் எப்படிப் பற்றும்? 

எங்கள் லால்குடி வீடு எங்கள் வீடாக இருந்த கட்டடம் இதோ மனக்கண் முன் எழுகிறது. எனக்கு அப்போ வயது ஆறு. 

வாசலில் ஓலைக்கூரை கவிந்த இரண்டு திண்ணைகளுக் கிடையே படிகளுக்குப் பதில் சரிவாய் வழித்துவிட்ட வாசல் தாண்டினவுடனே நடையில் ஒழுங்கையுள் தலைமுறை தலைமுறையாக அம்மாவாத்து பிரசவ அறை. இதிலிருந்து எத்தனை இளவரசுகள், ராஜகுமாரிகள் புறப்பட்டிருக் கிறார்கள். அதன் இருட்டுக்குக் கர்ப்பக்கிரகம் தோற்றது. மருத்துவச்சி குழவியின் உடம்பைத் தடவித்தான் ஆணா பண்ணா கண்டு சொல்ல வேண்டும். 

ஆனால் அம்முவாத்து ஃபேமஸ் பிரசவ கேஸ் குடும்பத்துள் நேர்ந்ததல்ல. கறிவேப்பிலைகாரி கேஸ். என் கொள்ளுப்பாட்டனார் காலம். 

அப்போ எல்லாம் பிடியரிசிக்குக் கறிவேப்பிலை. காசுக்கு அல்ல. கறிவேப்பிலைக் கூடைக்காரி முன் பின் பார்த்தவள் அல்ல. வெளியூரிலிருந்து வந்த புதுமுகம். கொள்ளுப்பாட்டி கறிவேப்பிலையை வாங்கிக்கொண்டு அடுக்களைக்குள் அடைந்திருக்கமாட்டாள். வாசலில், ‘அப்பா,அம்மா என்று தீவிர முனகல் சத்தம் செவியில் வந்து மோதவும், ஓடி வந்து பார்த்தால் கறிவேப்பிலைக் கூடைக்காரி திண்ணைத் தூணில் சாய்ந்தபடி, இடுப்பைப் பிடித்துக்கொண்டு தவிக்கிறாள். இடுப்புக்குமேல் உடம்பு செக்காய்த் திரிகிறது நெற்றியில் வேர்வை கொட்டுகிறது. கண் செருகுகிறது. 

பாட்டிக்கு விஷயம் புரிந்துவிட்டது. அடி பாவீ அவளைத் தோளில் தாங்கியபடி பாதி தாங்கி, பாதி நடத்தி, ஒழுங்கையுள்ளே போய்ச் சேர்த்துவிட்டாள். அதன் இருள் இருவரையும் கவிந்து அணைத்துக்கொண்ட சில நிமிடங்கள், ஒரு புதுக்குரல் இருளை வெட்டியது. இதற்குள் தகவல் தீப் பரவி வாசல் எதிரே தெரு. ‘கொல்’அம்முவாத்தில் க வேப்பிலைக்காரி பிரசவம். இதுதான் தெருவெல்லாம் பேச்சு. அன்று மாலை அவள் புருஷன் தேடிக்கொண்டு வந்துவிட் டான். இருந்தும் அவளை ஒரு வாரம் வைத்துக்கொண்டு பத்தியம் போட்டு கையில் ஒரு கால்படி அரிசியும், ஒரு பழம் புடவையும் கொடுத்து கொள்ளுப்பாட்டி அனுப்பி வைத்தாளாம். 

பிள்ளைப்பேறு – இவ்வளவு பெரிய குடும்பத்தில் ஒழுங்கை உள்ளுக்கு அதிகம் ஒழிவு இருக்காது – பிள்ளைப் பறு மாறி மாறி இல்லாத சமயத்தில் – ஒழுங்கை உள்ளில் தான் பழையது மூலை. கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, கரப்பான் பூச்சி சிறகு – சகிதமாய் மறுநாள் காலை கலத்தில் விழுந்து குழந்தைகளில் யாரேனும் தைரியமாக முனகினால் பாட்டி ஒரேயடியாய் அடித்துப் பேசிவிடுவாள். குழம்பு ரஸத் திலிருந்து கலந்துவிட்ட இரட்டை மிளகு (கட்டெறும் பானால்), இரட்டைக் கடுகு (சிற்றெறும்பானால், மிளகாய்த் தோல் (மூன்றாவதை நினைத்தாலே உடம்பு சிலிர்க் கிறது) அதற்கும் மீறி ஒரு வாண்டு நிரூபிக்க முயன்றால்- 

“ஆமாம், அப்படித்தான் போ. எறும்பு தின்னால் எண்ணாயிரம் வயசு. கண்ணுக்குக் குளுத்தி, படிக்கிற பயனுக்கு இப்பவே ஓணக்கையைப் பாரு. பெருந்திரு இன்னிக்கு இதானும் படியளந்திருக்காளே பாரு முன் பிடிக்குப் பின்பிடி துணையா வாரிக்கப்பட்டு ஓடுங்கடா, பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு’ 

“வயதின் நியாயங்கள்!” என்று என் பிள்ளை சந்திரசேகரன் வியாக்கியானம் செய்வான். நடை  தாண்டியதும் கூடம், நாலு பக்கமும் அடைத்த பட்டை வாசல். 

பரம்பரையாக இதுதான் குடும்பத்தின் அரங்க மேடை அம்முவாத்து சிற்சபை. இங்கு நேர்ந்திருக்கும் நல்லது. பொல்லாது, நடத்தியிருக்கும் விசாரணைகள், தீர்த்திருக்கும் நியாயங்கள், போட்டிருக்கும் சண்டைகள் கண்டிருக்கும் சமாதானங்கள், கற்பனையும் திகைக்கும் நனவுச் சம்பவங் கள் – இவைகளின் ஆவிகள் இன்னும் இங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கின்றனவென்றால் மிகையில்லே. இந்தக் குடும்பத்தின் சரிதத்தில் இது நடந்திருக்குமா, இத்தனையும் நடந்திருக்குமா எனத் திகைப்பு ஏற்படின், திகைப்பவர் திகைக்கட்டும், வேறு சமாதானம் என்னிடமில்லை. 

கூடத்தின் ஒரு மூலையில் அங்குமிங்குமாய் ஐந்தாறு குழிகள். மெனக்கெட்டு தோண்டினவை அல்ல. சௌகரி’ யத்தை உத்தேசித்து ஒண்ணு ரெண்டு பின்னால் அப்படியும் நேர்திருக்குமோ என்னவோ? நாளடைவில் கல்லும் கரையும் உடைந்து, தேய்ந்து விழுந்துவிட்ட சிறுசிறு பள்ளங்கள், குழந்தைகளுக்கு அவைகளில்தான் பழையதைப் பிசைந்தோ, கரைத்தோ பாட்டி ஊற்றுவாளாம். 

இதோ, கிழக்கே பார்த்து அம்மன் பலகை. அதில் படமோ விக்ரஹமோ எதுவும் கிடையாது. இரண்டு சந்தனக் கட்டைகளின்மேல் ஒரு வெற்றுப் பலகை. எண்ணெய்ச் சிக்கேறி, அவ்வப்போது இழைகோலம் அதன்மேல் இட்டு அழிந்து- 

அதன் அடியில் ஒரு குத்துவிளக்கை நிறுவுகிற மாதிரி நெருக்கமாய் அளவாய் ஒரு பிறை. அங்கு நாங்கள் குழந்தை கள் விளையாடிக் கொண்டிருக்கையில், பெரியவர்கள் பக்கத் தில் நின்றுகொண்டு ஏதோ பேசிக்கொண்டிருக்கையில், விளையாட்டாய்ப் பிறையில் நான் கைவிட்டதும் கைக்கு வழவழ சர்ர் ரென்று ஒரு பாம்பு – நன்றாய் இரண்டு விரல் அளவுக்கு பருமன் இருக்கும். அங்கிருந்து கிளம்பி நேரே வாசல்வழி சமையலறையுள் ஓடிவிட்டது. துரத்தி வந்து தேடிப்பார்த்தால் சோடையே இல்லை. ஜலதாரை வழி கொல்லைப்புறம் போயிருக்கும். ஆறு வயதில் மனதில் பதிந்த அதன் நெளிவழகு இன்னும் தேய மறுக்கிறது. 

தாத்தா கால்மேல் கால் போட்டுக்கொண்டு புத்தகத் ல் அன்று நெஞ்சில் ஜனித்த பாட்டொன்றை முத்தான எழுத்தில் எழுதிக்கொண்டே- அதை விட்டுவிடுங்கள்- அம்பாளுடைய ஸ்வரூபங்களை நிர்ணயிக்க நாம் யார்? 

அப்போ புரியவில்லை. 

இப்போ மெய்சிலிர்க்கிறது. 

ஒரு திவசம், திங்களுக்கு, சகோதர சகோதரிகள் அவரவர் குடும்பத்துடன் ஒன்று கூடுகையில் வீடு திமிலோ கம்தான். தாத்தா, உடன்பிறந்தவர்கள் எல்லோருமே வாட்டசாட்டமாய் (தங்கைமார் உள்படத்தான்) தழல் சிவப்பா.. சுந்தரம் சுந்தரமாகவே இருந்ததால் சுந்தரம் பிச்சை. கடைசிவர் (போலீஸ்) குத்து மீசையும் தொந்தியும் தொப்பையுமாய், தோளுக்கு ஒருகதை கொடுத்துவிட்டால், மாயாபஜார் ராக்ஷஸன்தான். அவர் பிரதாபங்களே தனிக் கதை சொல்லும். சொல்ல எனக்கும் நேரமும் வாய்ப்பும் அமையணும். 

தாத்தா தமிழ்ப் பண்டிதர். ஆனால் வம்ச ரத்தத் திலேயே தமிழ் ஓடிற்று. கூடத்தில் ஒரு காலை மடித்து மறுகாலை அதன்மேல் யோகாசனம் போல் மடித்துப் போட்டு உட்காருவது இவர்களின் போது அம்சம் போலும்.

“நான் சொல்றேன். விபீஷணன் ஒரு பிராத்ருத் ரோஹி!” 

“தந்தேன் விபீஷணா லங்காபுரி”

“யார் வீட்டு சொத் தைத் தூக்கி யாருக்குக் கொடுக்க இவன் யார்?” 

“வீபீஷணன், சுக்ரீவன் – அவன் இன்னொரு பிராத்ரு த்ரோஹி (இந்த ப்ரயோகத்தில் ஒரு தனி மோகம் சலாம் போட்டு சேவகம் செய்ய ஒரு ஹனுமான் – ஏவலுக்கும் வசைச்சொல் கேட்டுக்கவும் வீட்டிலிருந்தே அழைத்து வந்து விட்ட ஒரு லக்ஷ்மணன் வேலை இடாமலே செய்ய, சுத்தி இத்தனைபேர் நடுவில் இடிச்சபுளி மாதிரி இருந்துட்டு இவன் ஒரு காவிய நாயகனாம்!” 

“ஆமாம் இந்திரஜித் பைசலான பின் ராவணணைக் கொல்றது என்ன கஷ்டம்? செத்த பாம்பு அடிக்கிற மாதிரி-” 

“டேய் ஜகதீசா. இந்தப் புனர்வசு நக்ஷத்ரங்களே முக்குத்தானே!” 

“ஜனகன் கலப்பைக்குப் பெட்டியோடு குழந்தை தட்டுப் பட்டது சரி. அப்புறமாவது ஜனகன் புலன் விசாரிச்சானா? சீதை என்ன ஜாதின்னு தெளிவாச்சோ? அவள் பிராம் மணத்தியா, எஸ்.சி.யா?- 

“சிதம்பரம், அதெல்லாம் எதுக்கு? வளர்ப்பில் படியற படிதான் ஜாதி குணம், தரம் எல்லாம் – 

“அப்போ பிறவிக்குணம்னு ஒண்ணு கிடையாதா?”

“குலத்தளவே யாகுமாம் குணம்-” 

“வளர்ப்பு குணம் வெல்லுமா? பிறவி வாசனைதான் தூக்குமா?” 

இது இன்னொரு விவாதம். பொதுவாக ஆரம்பித்து அவரவர் தனி வாழ்க்கைமேல் தாக்குதலாகவும் மாறிவிடும். “உன் லக்ஷணம் தெரியாதா, வெளியில் சொன்னால் வெட்கக் கேடு, நாளைக்கு சாப்பாடு முடிஞ்சதும் பிரிஞ்சு போயிடப் போறோம். வந்த இடத்தில் வம்பு ஏன்னு இருக்கேன். 

இந்தச் சர்ச்சைகள் வெறும் பொழுதுபோக்கு வம்புகள் அல்ல. வெவ்வேறு நூல்களிலிருந்து (நன்னூல் காண்டிகை உள்பட) மேற்கோள்களுடன் அவனவன் தன் தனித்தனி நியாயங்களைப் பேசுகையில், தர்க்க ரீதியில் தன்தன் தன்னிழப்பில் இந்தக் கூடமே சித்ர கூடம், பஞ்சவடி, ராவணன் சபையாக மாறிவிடும். சுவாரஸ்யத்தில் வாசலி லிருந்தே ஒரு கூட்டம் கூடியிருக்கும். எங்களுக்கு ஒன்றும் புரியாது. ஆனால் வாயைப் பிளந்தபடி கேட்டுக்கொண் டிருப்போம். ஈக்கள் தாராளமாக உள்ளே புகுந்து புறப் பட்டுக் கொண்டிருக்கும். 

“அமமுவாத்து வரட்டு ஜம்பம் மட்டும் ஒரு எள்ளுகூடக் குறையல்லே!” 

“யார் சொன்னது? ஸ்ரீமதியா? அவள் வாய்க்குச் சக்கரை போடு”

ஒரு நாலு வரிகளுக்கு முன் தோன்றினாளே ஸ்ரீமதி தாத்தாவின் கடைசித் தங்கை, என் தாய்வழி பாட்டி. என் அப்பாவும் அம்மாவும் அம்மாஞ்சி அத்தங்கா, கழுத்திலும் கன்னத்திலும் ஓடும் பச்சை நரம்பு தெரியும். வெள்ளைக் சிவப்பு. சுருக்கவே குழந்தைகளுடன் அண்ணன் வீட்டுக்கு. வந்துவிட்டாள். அவளுக்கு நைடதம். நன்னூல் பாடம். அவள் பாண்டித்யத்துக்குத் தாத்தாவே பயப்படுவார். 

“ஸ்ரீமதி! இந்தப் பாட்டில், இந்த வரி இப்படி விழுந் திருக்கே; இது சரிதானா?” 

ஸ்ரீமதி நாற்பது தாண்டவில்லை ஒரே நாள் வயிற்றுப் போக்கு, அவளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. 

“ராமசாமி! என் தாயின் கையைப் பிடித்து அண்ணன் கையில் கொடுத்தாள். அம்மாப் பெண்ணை நீ சப்தரிஷிக்குத் தான் பண்ணிக்கணும். ஏற்கனவே தகப்பனில்லாக் குழந்தை கள். ஆனால் இனி நான் என்ன பண்ண பண்ணமுடியும்?” 

குழந்தைகளை அழைத்து தனித்தனியாக ஒருமுறை அணைத்துக்கொண்டு தன்னிடமிருந்து தள்ளினாள். 

“இனி என்னிடம் வராதேயுங்கள். என்னைப் படைச்சு வனை நான் சந்திக்கப் போகணும்!” 

உடனே கம்பராமாயணத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தவள் தான். பொல பொலவென பொழுது புலரும் வேளையில் அவள் அடங்கியதும், தாத்தா மாரே வெடித்து. விடும்போல் அப்படி விக்கிவிக்கி அழுதாராம். 

இவர்கள் அழுகை வராத ஆண்கள், அழுகை வராத பெண்கள். இவர்கள் அழுதால், இவர்கள் அழுகை பயப் படுவதற்குரியது. 


“அடே!”

நாசியிலிருந்து வரும் அந்த விளிப்பு கூடமே அதிர்கிறது. பெந்துப்பாட்டி என் கொள்ளுப்பாட்டி. 

“அடே! இதோ இப்போ சொல்றேன், உனக்கு ஆண் குழந்தை பிறக்காது!” 

“பிறந்தாலோ?” 

“பிறந்தால் தக்காது!” 

இதற்கென்ன சொல்கிறீர்கள்? இதுமாதிரி ஒ ஒரு தாய் உண்டா? இப்படியும் ஒரு மகன் இருப்பானா? 

இட்டாயே சாபம் பாவி! பாவி! என்று மகன் பொருமி என்ன பயன்? 

ஐயோ கோபத்தில் நாக்கு மீறிப்போச்சே! என்று பெத்தவள் பின்னால் நொந்துகொண்டு என்ன பயன்? 

சொன்னது சொன்னதுதான். சொன்னது சொன்னபடி! பலிதம் என்பது என்ன? வாக்குக்கும் செயலுக்கும் இடைக் கோடு அழிந்துபோவதுதான். அழிஞ்சு போச்சு!” 

“லட்சுமி உயிர் போயிண்டே இருக்கு பார்! இதோ போச்சு!” 

தலை தொங்கிவிட்டது. மூணே நாள் ஜுரம். இது தாத்தா. 

தாத்தா சுத்த பயங்கொள்ளியாம். லட்சுமி உள்ளங் காலில் என்னவோ சுருக்குன்னது. செருப்பையும் தாண்டி தைச்சுதா, கடிச்சுதா, தெரியலியே! நாலு மிளகு கொண்டு வா! காரம் தெரியலியே! தித்திக்கிற மாதிரியிருக்கே?” 

அப்படிப்பட்ட மனுஷன் வேளை வந்ததும், தாம்பாளத் தில் தட்சணைபோல் உயிரை இவ்வளவு அனாயாசமா “இந்தா எடுத்துக்கோ” என்கிற மாதிரி. 

நிஜப்பரீட்சை எப்போ வருகிறது. எப்படி வருகிறது. வருகிறபோது எப்படி அவனவன் தாக்குப்பிடிக்கிறான். இன்னும் மூடுமந்திரமாய்த்தான். இதில் தோற்பு, ஜெயிப்பு எதிர்பார்க்கிற மாதிரி இல்லை. 

அம்மன் பலகைக்கு நமஸ்கரிக்கிறோம். 

கொள்ளுப்பாட்டியிடம் எங்கள் குலதெய்வம் சான்னித்ய மானதற்கு அம்மன் பலகைதான் சான்று. 

பாட்டிக்கு எழுதப் படிக்க வராது. புத்தி சூட்சமம் கிடையாது. வஜ்ர சரீரம். ஒரு ஜூரம், தலைவலி என்று ஒரு நாளேனும் அறியாள். முன்கோபக்காரி. ஆனால் பிறர் துன்பம் காணப்பொறாள். சரியான முரடு. 

தினமும் அர்த்தஜாம தரிசனம் பார்த்துவிட்டுத்தான் சாப்பாடு. அவள் நாளில் அர்த்தஜாமம் இரவு பத்து பதினொன்று ஆகும். 

-பிரம்மோத்ஸவத்துக்குக் கொடியேறி இருக்கிறது. பாட்டி, த்வஜஸ்தம்பத்தண்டை நமஸ்காரம் (ஆண்கள் போல் சாஷ்டாங்கம், அவள் வழக்கம் அப்படித்தான்) பண்ணியெழுந்தவள், திடீரென்று கணீரென்று அவள் குரல், யாகசாலையிலிருந்து கேட்கும் வேத பாராயணத்தில் ஒரு அட்சரம், மாத்திரை பிசகாமல் கலந்தது. 

என்ன இது, கீழ்த்தெரு கோடிவீட்டு பெந்துவா? 

ஒரு மண்டலம் பெருந்திரு அம்மன், பாட்டியிடம் விளை யாடினாள். பாட்டி ஆவேசம் கண்டு ஆடவில்லை. 

எங்கள் அம்மன் அப்படியல்ல. சாந்த ஸ்வரூபி. அவளே ப்ரவிருத்த ஸ்ரீமதி, தர்க்கம், மீமாம்ஸம், வேதம், ஸ்மிருதி, வியாகர்ணம், தத்துவவிசாரம், பண்டிதர்கள் நிஜ ஆர்வத் துடன் வேண்டும் நுணுக்கங்களுக்குப் பதில்கள், அவளைப் பரீட்சிக்கும் முறையில் எழுப்பும் குதர்க்கங்களுக்கு சரியான வாயடைப்பு – அது பாட்டுக்கு பெந்துப்பாட்டி வாயிலிருந்து ஸரளமாய் வந்த வண்ணமிருந்தன. 

லால்குடி, பக்கத்து ஊர்கள், அங்கிருந்து சேதி தொற்றிக் கொண்டதும், இன்னும் தூர இடங்களிலிருந்து ஜனத்திரள் எங்கள் வீட்டுக்குப் புரண்டது. பாட்டி கை விபூதிக்குத் தீராத வியாதிகள் தீர்ந்தன. 

பாட்டி கையில் சக்கரம் தோன்றிற்று. 

அந்த மண்டலம் முழுதும் பாட்டிக்கு ஆகாரம் செல்ல வில்லை. ஆனால் தென்பு சொல்லுபடி போகாது. சாதாரண மாக அவளுக்கு வேளைக்கு மூணு ஆழாக்கு வெண்கலப் பானை முழுக்க வேணும். 

நிஜத்தோடு நாளடைவில் சேர்ந்திருக்கக்கூடிய கைச்சரக்கு, புரளி, சிக்கு, பசையைப் பிரிக்கவோ. ருசுப் படுத்தவோ நான் இயலாதவன். எல்லாம் சொல்லக் கேள்வி தான். யாரும் எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை. எழுத்து மட்டும் கலப்படத்திலிருந்து விடுதலையா? ஆனால் ஒன்று தெளிவு. இந்த வீட்டில் பெந்துப்பாட்டி காரணமாக அல்லது சாக்கில் ஏதோ அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. 

அன்று வெள்ளிக்கிழமை. மாலை கூடத்தில் சுவரோர மாய்ப் பலகையில் கோலமிட்டு, குத்துவிளக்கை வழக்கம் போல் ஏற்றி வைத்துவிட்டு, யார் யார் என்ன வேலையில் இருந்தாரோ தெரியாது யாரும் கூடத்தில் இல்லை. பெந்துப்பாட்டி சமையலறைபில் இருந்திருப்பாள். 

பிறகு யார் முதலில் கண்டார்களோ தெரியாது 

பளபளக்கத் தேய்த்த பித்தளைச் சொம்பில் (எங்கள் வீட்டு ஏனம் இல்லை) ஆவி பறக்கப் பால் ஒரு தார் வாழைப்பழம். அம்மன் பலகையில் இருந்தன. யார் கூடத்துள் வந்து வைத்திருக்க முடியும்? அதற்கு வழியு மில்லை. அந்தப் பாலும் பழத்தின் ருசி சொல்லுபடி போகாதாம். 

பெருந்திருப் பிரசாதம் வேறு எப்படி இருக்கும்? 

லால்குடியில் வீட்டுக்கொரு சப்தரிஷி, ஒரு பெருந்திரு- ஸ்ரீமதி. 

என் கொள்ளுப்பாட்டி பெந்து (பெருந்திரு) 

என் தாய்வழிப் பாட்டி ஸ்ரீமதி. 

அம்மா ஸ்ரீமதி. 

அப்பா சப்தரிஷி. 

எங்கள் வீட்டில் பிறந்துவிட்டு, இந்த சாஸனத்துடன் நான் எழுதாமல் எப்படி இருக்க முடியும்? 

– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *