உன் திரு உருவம்
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,319
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
வெகு தொலைவிலிருந்து வருகிறான் பாணன். யாழைத் தன் மார்போடு அணைத்தபடியே நடந்து வருகிறான். விறலியோ பின்னால் மெல்ல நடந்து வருகிறாள். ஆய் வள்ளல் முன் நின்று யாழை மீட்டி இன்னிசை எழுப்பினான். விறலியோ கான மயிலெனக் களிநடனம் ஆடினள்.
மகிழ்ந்தான் வள்ளல் ஆய். யானை, குதிரை, தேர்களைக் கொண்டு வந்து நிறுத்தினான். “வேண்டாம்” என்றான் பாணன் வியந்து நோக்கினான் ஆய். “பாணரும், புலவரும், கூத்தரும் உன் பொருளைத் தம் பொருளெனக் கொண்டனர். நான் உன் திரு உருவைக் காணவே வந்தேன். வாழ்க பல்லாண்டு. வாழ்க எம் தலைவன்” பாணன் அன்புக்கு இணையேது உலகில்!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026