அன்பு வந்தது… நமை ஆளவந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 17, 2026
பார்வையிட்டோர்: 110 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு!
– குறள் (கதைப்பாடல்)

கோடை வெயில் கொதிக்கையில்
குடிக்கத் தண்ணீர் இன்றியே
வாடி மிகவும் தவித்தன
வனத்தி லிருந்த விலங்குகள்!

அங்கு வாழ்ந்த மான்களாம்
ஆணும் பெண்ணுமாம்அவை
அங்கு மிங்கும் நீரினை
அலைந்து தேடித் தவித்தன!

குட்டி வட்டக் குட்டையாம்
கொஞ்சமதிலே தண்ணீராம்
எட்டும் தூரம் தன்னிலே
இருக்க மான்கள் கண்டன!

ஆணும் பெண்ணும் இணைந்துபோய்
அதனை அருந்த நினைக்கையில்
பிணைமான் பாவ மென்றந்த
துணைமான் தன்னுள் நினைத்ததாம்

பிணைமான் ஆணே அருந்திட
பிரியப் பட்டு நின்றதாம்
இரண்டும் இணைந்து அருந்திட
எண்ணி முயன்ற வேளையில்

ஒன்று குடிக்க மற்றது
உரிஞ்சுவதாய் நடித்ததாம்
அன்று அந்தக் குட்டைநீர்
அளவில் குறைய வில்லையாம்!

அன்பு காட்டல் உலகிலே
அளவில் மிகவும் உயர்ந்தது
அன்பு உடைய மக்களோ
அனைத்தும் தருவர் பிறருக்காய்!

என்ற கருத்தை வள்ளுவர்
அன்றே அருளிச் சென்றதை
நன்று என்று உணருவோம்
நாளும் போற்றி மகிழுவோம்!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *