அன்புள்ள அப்பா – ஒரு பக்க கதை





திருவிழாவில் ஜேஜே என்ற திரளான கூட்டம். திரும்பிய இடமெல்லாம் மனித தலைகள்.
அம்மா,நான்,தங்கச்சி உட்டட எல்லாரையும் அரவணைத்து கூட்டிக்கொண்டு வந்தார் அப்பா.
பாத்து சூதானமா என்னையே ஃபாலோ பண்ணிட்டே வாங்க. கூட்டத்தில மிஸ் ஆயிடுவீங்க. பின்னாடி திரும்பி பாத்து பாத்து போய்கொண்டே இருந்தார்.
கூட்டம் குறைவாக இருந்த ஒரு இடத்தில் எங்களை நிற்க வைத்துவிட்டு திரும்பிய சமயம், அங்கு ஒரு இளைஞன் வம்பு செய்தான் தங்கையிடம். அவ்வளவுதான் அந்த இளைஞனை துவம்சம் செய்தார் அப்பா.
அப்படி பார்த்ததில்லை அவரை வீட்டுக்குள். நான் எவ்வளவோ கிண்டலும் கேலியும் செய்திருக்கிறேன்.
மீசைமுளைத்த இளைஞன்தான் நான். ஆனால் சத்தியமாக அந்த துணிச்சல் என்னிடம் கிடையாது.
அழுது, பாசத்தை பிழிந்து தான் அன்பை காட்ட வேண்டுமா என்ன.. அப்பாக்களின் பாசம் அலாதியானது.
அவங்க வழி தனி வழி.