கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 14, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

கிரஹப்பிரவேச காபி

 

 நகராட்சி எல்லைக்கு அடுத்துள்ள ஊராட்சி ஒன்றியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட புறநகர் பகுதி அது. ஆட்டோகாரரிடம் வழி சொல்லி போக வேண்டிய ஓம் சக்தி நகரில் தான் கிரஹப்பிரவேசம். குடியிருந்த வீட்டை வாங்கி செப்பனிட்டமையால் அது சஷ்ட்டகர் மகளுக்கு புது வீடு. அவளின் தாய் வழி உறவுகள், தந்தை வழி உறவுகள், தந்தையின் மூன்று சம்பந்தி உறவுகள், இரு வேறு துறையைச் சேர்ந்த கணவன் மனைவியின் சக கொலீக்கள், மேலாளும் உயர் பதவியினர்கள், பழைய வீட்டு அக்கம் பக்கத்து


சாந்தா டீச்சர்

 

 சாந்தா டீச்சருக்கு விழிப்பு வந்ததும் முதலில் பார்ப்பது சுவர்க் கடிகாரம். மணி ஐந்தே முக்கால். முப்பது வருஷங்களாக மாறுதல் ஏதுமில்லாமல் நடைபோடும் நிகழ்ச்சி. அந்தக் காலத்து கடிகாரம். அவள் அப்பா சென்னை மூர்மார்க்கெட்டில் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் முப்பத்தைந்து ரூபாய்க்கு வாங்கின கடிகாரம் இதுவரை ஒரு தடவை கூட நின்றதில்லை. சர்வீஸ் செய்யவும் கொடுத்த தில்லை. ஆனால் அப்பாதான் போய் விட்டார், அம்மா போன அடுத்த வருஷம். பத்து வருஷங்களுக்கு முன்னால். சாந்தா டீச்சருக்கு இன்றும் வழக்கம்போல்


பணம்

 

 அன்று திங்கட் கிழமை,பரமசிவம் தன் குடையுடன்,வள்ளி என்று குரல் கொடுத்தார்,சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்தவளிடம்,நான் வயலுக்கு போகிறேன்,நேற்று யாரும் வேலைக்கு வரவில்லை,இன்னைக்கு வருவார்கள் நான் போனால் தான்,கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள்,இல்லையென்றால் கதைத்தே நேரத்தை ஓட்டிவிடுவார்கள்,பகல் சாப்பாட்டை நீ கொண்டு வா என்றவரிடம்,கொஞ்சம் பொறுங்கள்,நானும் வருகிறேன் எல்லா வேலையும் முடிந்துவிட்டது என்று குரல் கொடுத்த வள்ளி,அவசரமாகப் ஒரு பையில் அனைவருக்கும் பகல் உணவையும்,தண்ணியையும் போட்டு எடுத்து வைத்து விட்டு,அவளும் அவசரமாக மாற்றுத் துணியை மாற்றிக் கொண்டு,கதவைப்


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 ராதா ‘போன்’ பண்ண விஷயத்தை சாம்பசிவனிடம் ராமசாமி சொன்னதும்,சாம்பசிவன் தன் சக குருக்கள் இடமும்,கோவில் நிர்வாக மானேஜர் இடமும் சொல்லி விட்டு அப்பாவுடன் வீட்டுக்கு வந்தான். எல்லோரும் சாப்பிட்டு விட்டு ‘பஸ் ஸ்டாண்டு’க்கு வந்து ஒரு ‘மினி பஸ்’ ஏறி சிவபுரிக்கு வந்தார்கள்.அழுதுக் கொண்டு இருந்த சுந்தரத்தையும்,கமலாவையும், ராதாவையும் பார்த்து தேத்தறவு சொன்னார் ராமசாமி.சாம்பசிவனும்,காமாக்ஷியும் ராதாவுக்குத் தேத்தறவு சொன்னார்கள். இரண்டு மணி நேரம் இருந்து விட்டு,அப்பாவை சிவபுரியிலே விட்டு விட்டு,சாம்பசிவனும்,


பொறுப்பு

 

 என்னங்க..ஞாயித்து கிழமை காஞ்சிபுரம் போயிட்டு வரலாங்க.. இல்லமா..அன்னைக்கு நானும் எங்க குரூப் மெம்பர்ஸும் மெரினா பீச்ச சுத்தம் செய்ய போறோம். நிறைய வி.ஐ.பி எல்லாம் வர்றாங்க.. ப்ளீஸ்’ங்க..இப்படி பொறுப்பில்லாம பேசறீங்களே.. இங்க பாரு சுசி, நீ தான் கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாம பேசற..ரொம்ப கஷ்டப்பட்டு பெர்மிஷன் வாங்கி இருக்கோம். அங்க வந்து பாரு, எவ்ளோ பேரு இன்டெரெஸ்ட்டா கலந்துக்குறாங்கன்னு.. உங்ககிட்ட பேச முடியாது. நீங்க பீச்சுக்கே போங்க, நானும் ப்ரவீனும் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்துடறோம்.


செக்மேட்

 

 சிறு வயது முதல் பரத்திற்கு சதுரங்கம்தான் எல்லாமே, அதற்கு காரணம் அவனது தந்தை. அந்த சதுரங்க அறுப்பதுநான்கு கட்டங்களுக்குள் தன் மொத்த வாழ்க்கையையும் கட்டமைத்தான் பரத். அதற்கேற்ப வெற்றிகள் அவனை கட்டிகொண்டன. பரத்தை ஒரு சதுரங்க வீரனாக மட்டுமே வளர்த்த அவன் தந்தையால், நாளடைவில் வாழ்வியல் எதார்த்தங்களை எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால் சதுரங்க திறமைகளை வாழ்வில் உட்படுத்திகொண்டாலே சிறக்க முடியும் என்பதே யதார்த்த உண்மை. வீரமாக முன்னேற, சமயத்தில் பதுங்க, தேவைகேற்ப பின்வாங்க, மேலும் ஒவ்வொரு நொடியும்


வேட்டை

 

 குறுநாவல்: வேட்டை நாவலில் வரும் சம்பவங்கள், பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள் இவற்றிலிருந்து இக்குறுநாவல் இலங்கைத் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் சில கட்டங்களைத் தொட்டுச் செல்கின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்நாவலில் பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள், சம்பவங்களிலிருந்து அவற்றின் உண்மையான இயக்கப்பெயர்களை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம். பெரிதாக நடந்த இயக்க மோதற் கால அனுபவங்களை மிகவும் யதார்த்தபூர்வமாக விபரிக்கும் குறுநாவலின் அனுபவங்கள் இலேசாக அவ்வப்போது மனத்தில் மெல்லிய வலியினை ஏற்படுத்து விடுகின்றன. அதே சமயம் முட்டி மோதிக்கொண்ட அமைப்புகளின் அடிமட்டத்தோழர்களுக்கிடையிலான நேரடிச் சந்திப்புகளின் அனுபவங்கள்


குழந்தை.. – ஒரு பக்க கதை

 

 “ஒன்னு போதும்ன்னு முடிவெடுத்து பெத்து வளர்த்தது, மூணு வருஷம் வளர்ந்து, விபத்துல போய் பத்து மாசம் ஆச்சு. உனக்கு… அடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தைப் பெத்துக்கிறதிலே விருப்பமில்லை. எனக்கும் அப்படி. நாம கடைசிவரை இப்படியே இருக்கனுமா..? – கேட்டு தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான் ஆனந்த். “உங்க விருப்பம் என்ன..” நந்தினி அவனைத் திருப்பிக் கேட்டாள். “கைநிறைய சம்பாதிக்கிற நாம ஏன் வெறுமனே வாழ்ந்து மடியனும்..? ஏதாவது ஒரு அனாதை குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாமே…? அதுக்கும்


சுமங்கல்யன்

 

 “ஏவ் – ஏவ்!” இடி குமுறுவது போன்று ஒரு ஏப்பத்தை விட்டு, தொப்பையைத் தடவி, சற்று எட்டவிருந்த செல்லத்தைக் கிட்ட நகர்த்தி… இன்றைய சமையலே வெகு ஜோர் – பரவாயில்லை. குட்டி கை வாயிக்கிறது! மைசூர் ரஸமும், டாங்கர் பச்சடி யும், அந்த கத்தரிக்காய் எண்ணெய்க் கறியும் நன்னா அமைஞ்சு போச்சு. இந்தக் கத்திரிக்காயிருக்கே , இவள் திருத்திய மாதிரியே அவாதி. கதம்ப சாம்பாருடன் சேர்த்தாலோ? மொச்சைப் பருப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், முள்ளங்கி, வெங்காயம் எல்லாம் ஒன்றாய்ப்


வாத்ஸ்யாயனர்

 

 (இதற்கு முந்தைய ‘ஈருடல் ஓருயிர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). வேலைக்குப்போய் சம்பாதிக்கும் பெண்களுக்கு இன்றுள்ள சுதந்திரத்தைப் போல ஆயிரத்துஎழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இருந்துள்ளது. மேல்நாட்டில்கூட இப்படி இருந்திருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. ஏனெனில் இந்தியப்பெண்கள் ஓட்டுபோடும் உரிமை பெற்ற பின்னரே மேலைநாட்டுப் பெண்கள் ஓட்டுரிமை பெற்றனர். குப்தர் காலம்முதல் நாயக்கர் காலம்வரையுள்ள கல்வெட்டு, செப்புப் பட்டயங்களைப் பார்த்தால் எவ்வளவு பெண்கள் கோயில்களுக்கும் நன்கொடை கொடுத்துள்ளனர் என்பது தெரியும். மூன்றாவது நான்காவது நூற்றாண்டுகளில்