Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 24, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

பழுப்பு நகரம்

 

  1 சில பருவங்களில் மட்டுமே எங்கள் நகரத்தில் மழை பொழியும். மற்றபடி நகரம் காய்ந்துபோய், மனிதர்களின் மண்டைகளும் காய்ந்திருக்கும். சரியாக இங்கு நான் எங்கள் நகரம் என்பதை எப்படிப் பயன்படுத்திக்கொண்டேன் அல்லது சுவீகரித்துக் கொண்டேன் என்பது மிகுந்த குழப்பகரமான ஒன்று. வங்கக் கடற்கரையில் நடந்து கடல் நகரம் ஒன்றை அடைந்துவிடுவது அல்லது வறண்ட காடுகளில் புகுந்து செழிப்பான பாலைமரக் காடுகளுக்குள் புகுவதைப்போன்ற முட்டாள்தனமான யோசனை என்னிடம் இருக்கிறது. நகரத்துக்கூடாய்க் கடந்துபோய் வேறொரு நகரத்தை அடைந்துவிடுதல்தான் என்


வாழக் கனவு கண்ட வசந்திக்கு…!

 

 என்னைப் பொறுத்தவரையில் வாழ்வில் என்றுமே மீண்டும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அனுபவம்தான் பாடசாலைப் பருவமும், பல்கலைக்கழக வாழ்க்கையும். பாடசாலை வாழ்வு அநேகமாக எல்லாருக்கும் இருக்கும். ஆனால் பல்கலைக்கழக வாழ்வு மிகச் சிலருக்குத்தான் கிட்டும். அத்தகைய பாக்கியசாலிகளில் இருவர்தான் வசந்தியும் ஆனந்தனும். இவர்கள் இருவரும் கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் தான் முதல் முதல் சந்தித்தார்கள். ஆனந்தன் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவன். வசந்தி விஞ்ஞானம் முதலாம் வருடம். இப்போதெல்லாம் இந்த “ராக்கிங்’ என்ற விடயம் மிகக் கடுமையாக


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

 அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 மூன்று மாதம் ஆகி விட்டது. அன்று காலையில் எழுந்ததும் சரளா அடுத்து, அடுத்து, வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தாள்.இதை பார்த்த வசந்தா “ஐயையோ,ஏண்டி சரளா இப்படி வாந்தி எடுக்க றே.நான் நினைச்சது சரியாப் போச்சேடி.அந்தப் பணக்கார பையன் உன்னை ஆசை காட்டி ‘கெடுத்து’ விட்டு இருக்கானேடி.நான் இப்போ என்ன பண்ணுவேன்” என்று கத்திக் கொண்டே“யோவ், தூங்கி கிட்டு இருக்கியே எழுந்துரிய்யா.பாருயா இந்த அநியாயத்தை.அந்த பணக்கார பையன் நம்ப சரளா வை


இல்லாதவன்

 

 வெண்ணிலாவையும் விண்மீன்களையும் தொலைத்த தனிமையில் கருமை பூசிக் கிடந்தது வானம். காணும் யாவிலும் காரிருள் கவ்விக் கொண்டிருந்த ஓர் இரவு. காற்றின் தீண்டல் இல்லாது கற்சிலைகளாய் உறைந்திருந்தன மரங்களும் செடிகளும் . பகல் முழுவதும் சுட்டெரித்த அனலின் தாக்கம் நீறுபூத்த நெருப்பாக்கி இருந்தது இரவை. தவளையின் குரலொன்று தனித்து ஒலித்தது இரவில். ஒரே மாதிரியான சப்தத்தையே மீண்டும் மீண்டும் எழுப்பியது அது. சற்று நேரத்தில் அடங்கியது சப்தம். ஒரு நிசப்தம் அதனை விழுங்கியிருந்தது. அந்த நிசப்தம் ஒரு


என்னைக் கொலை செய்பவர்கள்

 

 மீண்டும் அப்பாவின் அறை ஒளியில் உயிர்பெற்றிருந்தது. கணினித் திரையை அடைத்துவிட்டு அப்பாவின் அறைய நெருங்கினேன். கதவு தாழ்ப்பாள் இடப்படாமல் சிப்பியில் வாய்போல லேசாக பிளந்திருந்தது. அப்பா அம்மாவின் பொட்டுவைத்த நிழல் முகத்தை அசையாது பார்த்தபடி இருந்தார். தான் இழந்த புற உலகை நினைத்து பெருமூச்செரியும் சுயசோகம் கசியும் நோக்கு. வலது கையைச் சுவரில் முட்டுக்கொடுத்தபடி. கொசுறாக சோகம் இழையோடும் முனகல். அம்மா தவறியதிலிருந்து உடல் இளைத்து பழைய முகப் பொலிவை இழந்துவிட்டிருந்தார். முதுகு கூன் விழத் துவங்கியிருந்தது.