Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 26, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

தாகம்

 

 எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. இந்த நேரம் ஜனனியும் பாப்பாவும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஜனனி டிவியில் பாடல்கள் கேட்டபடி வேலை செய்து கொண்டிருக்கலாம். பாப்பா ஸ்கூலில் இருப்பாள். பேங்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? சரியாகத் தெரியவில்லை.சுமாராக ஒரு ஐம்பதாயிரம் இருக்கும். ஜனனிக்கு எவ்வளவு கிடைக்கும். ஒரு லட்சம்.அப்புறம் ஜிபிஎப் எல்லாம் சேர்த்து சுமாராக நாலு லட்சம் கிடைக்குமா? அதில் கடனெல்லாம் போக இரண்டு லட்சம் மிஞ்சும். அதை வைத்து எத்தனை நாள் சமாளிக்க முடியும்?


உறவு

 

 ஊருக்கொரு பஸ் நிலையம் இருப்பது வாஸ்தவம்தான். அப்புவின் ஊரில் இருக்கும் பஸ் நிலையத்தைப் பற்றிச் சொல்வதென்றால், அதைக் கேட்பதற்கும் திடமான, உறுதியான மனது வேண்டும். காதலில் சிக்குண்டவன் மனதுபோல இருந்தால் ஆபத்து. வலது புறத்தில் தொடங்குகிறது ஒரு நூறு அடிகளுக்கும் மேல் பழுத்த ஓலைகள், கொஞ்சம் நல்ல; அதன் கிடுகுகள் கொண்டு அமைக்கப்பட்ட, கடைக் காம்பராக்கள்.ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஞாபகப்படுத்தும் வரிசைக்கு நிகரானவை. இடது புறத்தில் ஒரு கழிப்பறை. அங்கு கழிப்பது மட்டும்தான். அழுக்கை நீக்க தண்ணீரில்லை.


சாரல் பூத்த மனது…

 

 மூன்று திசைகளிலுமாய் முகம் காட்டி அமர்ந்திருந்த நெல்லிக்காய்கள் கொஞ்சம் முகம் வாடியும் பழுப்பு வர்ணம் கலந்தும்/ ”எதுக்கு இப்ப இத்தனை நெல்லிக்காய்களப் போட்டு வாங்கி வச்சிருக்க, பேசாம தேவைக்கு மட்டும் எதுவும் வாங்குன்னு சொன்ன கேக்குறீயா, இப்பப்பாரு வேஸ்டாக்கெடக்குதில்ல, இது இனி திங்குறதுக்கு ஆகாது, தூக்கி குப்பையில போட வேண்டியதுதான், என்றான் மனைவியை நோக்கி வார்த்தையையும் பார்வையையும் நிறுத்தாமல்/ ஊதாக்கலரில் காட்டன் சேலை கட்டியிருந்தாள்,ஏன் இப்பிடி வயசான பெரிய வுங்க மாதிரி காட்டன் சேலைகளகட்டிக்கிட்டு,நல்லதா டிசைன் சேலைகள


தந்தையின் மனைவி

 

 இன்று மேகலாவின் பள்ளியில் பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் அனுபவங்களைப் பகிரும் நாள். பத்தாண்டுகளுக்கு முன்பு அப்பள்ளியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் சென்ற அவர்கள் முதன் முதலில் மீண்டும் சந்தித்த போது மகிழ்ச்சிப் பெருமிதத்தில் நனைந்தனர். மேகலா தான் முழு ஏற்பாட்டையும் செய்திருந்தாள். ‘ஒவ்வொருவரா வந்து அவரவர்களுடைய குடும்பத்தப் பத்தி சொல்லிட்டு தங்களோட அனுபவத்த பகிர்ந்துக்கலாம்.’ முதலில் நான் ஆரம்பிக்கிறேன். மேகலாவுக்குப் பின் ஒவ்வொருவராகத் தொடர்ந்தனர். இப்பவும் முன்னால நின்னு பேசரது பிரச்சினையா. பேசாம


அறுவடை நாள்

 

 “அங்கேயே..நில்லுங்க…வீட்டுக்குள்ள நுழையாதீங்க..எத்தனை தடவை சொன்னாலும் காதுலயே போட்டுக்க மாட்டேங்கறீங்களே ஏன்?..போங்க ….போய் குளிச்சிட்டு நிலைப்படியை தாண்டி உள்ளே காலெடுத்து வைங்க…”என்று இரைந்தாள் இன்பவள்ளி. “ஏம்மா.!..அப்பாவை குளிச்சிட்டுதான் உள்ளே வரனும்னு சொல்ற..?”கேட்ட மகனிடம்..”ம்…நம்ம பண்ணைக் காட்டுல இன்னிக்கு அறுவடையில்ல…அங்க போயிட்டு வர்றாரு..அங்க வேலைபார்க்குற கீழ்சாதி காரவங்களை தொட்டு தொலைச்சி குழப்பியிருப்பாருடா…இந்த சங்ககெட்ட மனுஷனை திருத்தறது அவ்வளவு சுலபமில்லை…அதான் அப்படி சொன்னேன்”என்றாள். “ஏம்மா…கீழ்சாதிக்காரங்கன்னா யாரும்மா…?..ஏன் அவங்களை தொடக்கூடாது?”என்றான் மகன். “போடா…போய் படி..ரொம்ப நொய் நொய்ங்கறே…புத்திசிகாமணி பெத்த சீமந்த புத்திரன்ல..போ”எரிந்து விழுந்தாள்