குறைந்த லாபம் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 7,691 
 

ஒரு துண்டு வியாபாரி மனைவியிடம், இருபது துண்டு இருக்கிறது, நான் சந்தைக்கு போய் விற்பனை செய்து வருகிறேன் என்று சொன்னார்.

மனைவி என்னங்க! வரும்போது ஒரு சிற்பம் அரிசி வாங்கிட்டு வந்துருங்க. அரிசி இன்னைக்கு சமைக்க மட்டும் தான் இருக்குது.

வியாபாரி மகன்!, அப்பா இன்னைக்கு ஸ்கூல் லீவு நானும் உங்கக்கூட வரேன்.

இருவரும் சந்தைக்கு போனார்கள்.

ஒருவர் வியாபாரியிடம் துண்டு எவ்வளவு என்று கேட்டார். வியாபாரி ஒரு துண்டு ₹55 ரூபாய் என்று சொன்னார். இதேபோல் வந்து கேட்கும் அனைவரிடமும் அதே விலையை சொன்னார், ஒருவரும் அவரிடம் துண்டு வாங்கவில்லை.

அப்பா(வியாபாரி) அவன் மகனிடம் இன்றைக்கு வியாபாரமே இல்லை. உன் அம்மா வரும்போது அரிசி வாங்கிக்கொண்டு வரசொன்னால். சரி நீ இங்கயே இரு, பக்கத்து கடையில் என் நண்பர் இருக்கிறான், அவனிடம் கடனாக பணம் வாங்கிக்கொண்டு வருகிறேன். யாராவது துண்டு வாங்க வந்தால், ஒரு துண்டு ₹55 ரூபாய்க்கு கொடு, ₹50 ரூபாய்க்கு கேட்டாலும் கொடுத்துவிடு என்று சொன்னார்.

மகன் அப்பாவிடம், இது நமக்கு நஷ்டம் ஆகாதா என்று கேட்டான்.

அப்பா (வியாபாரி) மகனிடம், ரூபாய் ₹55க்கு விற்பனை செய்தால் ஒரு துண்டுக்கு ₹10 ரூபாய் லாபம் கிடைக்கும், ரூபாய் ₹50க்கு விற்பனை செய்தால் ஒரு துண்டுக்கு ₹5 ரூபாய் லாபம் கிடைக்கும், நஷ்டம் இல்லை, ஆனால் லாபம் குறைவு என்று சொல்லிக்கொண்டு நண்பர் கடைக்கு போனார்.

ஒருவர் வந்து துண்டு என்ன விலை என்று கேட்டார். அவன் ஒரு துண்டு ₹55 ரூபாய் என்று சொன்னான். துண்டு வாங்குபவர், அவனிடம் எத்தனை துண்டு இருக்கிறது என்று கேட்டார். அவன் என்னிடம் இருபது துண்டு இருக்கிறது என்றான். துண்டு வாங்குபவர் நீ சரியான விலையை சொன்னால் இருபது துண்டையும் நானே வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னார். அவன் யோசித்து ரூபாய் ₹50க்கு தருகிறேன் என்று சொன்னான். துண்டு வாங்குபவர் இன்னும் கொஞ்சம் குறைக்க முடியுமா என்று கேட்டார்?. அதற்கு அவன் நீங்கள் சரியான விலையை சொல்லுங்கள் என்று என்னிடம் சொன்னீர்கள். நான் சரியாக சொல்லி விட்டேன், இதற்கு மேல் என்னால் குறைக்க முடியாது என்று சொன்னான். அவர் இருபது துண்டையும் வாங்கிக்கொண்டு ஆயிரம் ரூபாயை (₹1000) கொடுத்துவிட்டு போய்விட்டார்.

அவன் அப்பா வந்து அவனிடம் என் நண்பன் பணம் இல்லை என்று சொல்லிவிட்டான், இப்போ அரிசி வாங்க என்ன செய்வது என்று யோசித்தார்.

மகன் அப்பாவிடம் இருபது துண்டையும் விற்பனை செய்து விட்டேன் ரூபாய் ₹50க்கு என்று சொல்லி ரூபாய் ₹1000 அப்பாவிடம் கொடுதான்.

அவருக்கு மிகவும் மகிழச்சி, போகும் வழியில் அரிசி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

“குறைந்த லாபம் அதிக சந்தோஷம்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *