கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 6,872 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டாவது உலகயுத்த சமயத்தில், அது பற்றி இருந்த அப்போதைய மன நிலையில் இக்கதை உருவாகியது.

மனிதாபிமானமும், சமுதாய போராட்டமும் என் எழுத்த்தில் பிரதிபலிக்கவில்லை என்று என் மேல் ஒரு புகார்உண்டு. மனிதாபிமானம் என்றால் தனியாகத் தன் பேரைச் சொல்லிக்கொண்டு மேலி ருந்து இறங்குமா? அறியேன்.

“எல்லாம் பாரதயுத்தம் மாதிரிதான்- எல்லாரும் தோத்தாங்க; எல்லாரும் ஜெயிச்சாங்க. தோத்தவனும் கஷ்டப்பட்டான், ஜெயிச்சவனும் சொகப்படல்லே. என்னவோ காரியம் சாதிக் கிறாப்போல சண்டை போட்டதிலும் கொறைச்சவில்லே. காள் பாத்ததிலே கொறைச்சலில்லே. பலி போட்டதிலே கொறைச்சலில்லே-அரவான் பலி!’

தொகுதி: ஜனனி

குழந்தையின் வீறலைக் கேட்டு கிணற்றின் பிடிச் சுவரின்மேல் தவலையுடன் தாம்புக் கயிற்றை அப்படியே போட்டுவிட்டு, உள்ளே ஓடி வந்து குழந்தையை வாரினான். பொங்கி வழியும் வியர்வை, மூலவர்மேல் பூசிய எண்ணெய் போல் அவன் கறுப்புடல் மேல் பளபளத்தது.

அவனுடைய பரந்த கைகளினிடையில், குழந்தை சின்ன மாவுப் பொம்மை போல் தானிருந்தது. இழுத்துப் பழக்கமில்லாததால், தாம்புக் கயிறு உள்ளங்கைகளை வீறு வீறாய் அறுத்திருந்தது.

அணைத்துக் குலுக்கி அதன் அழுகையை அடக்க முயன்றான். ஆசைப் பெருக்கில் அர்த்தமற்ற சப்தங்கள் அவன் வாயினின்று பிறந்தன. ஆயினும் குழந்தையைத் தேற்ற அவை வகையற்றுப் போயின. அதன் கத்தல் இன்னமும் அதிகரித்தது.

“என்ன! தாயில்லாக் குளந்தையா?”.

அவனுக்குத் தாக்கிவாரிப் போட்டது. ஏற்கெனவே உள்ளுற வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறான்: காலை யில் வேலை பார்க்கப் போன பெண்பிள்ளை-குரியன் உச்சிக்குப் போயிட்டது-இன்னமும் திரும்பின பாடில்லே. இந்தப் பட்டணத்திலே ஊருக்குப் புதுசு. ஆண் புள்ளைக்கே இத்தனை மோட்டார் வண்டிக்கும் டிராம் வண்டிக்கும் சடுக்கா வண்டிக்கும் ரிக்ஷா வண்டிக்கும் நடுவுலே ஆளைப் பம்பரம் சுத்தி விட்டாப் போலே இருக்குது. அவளை எது வாரி வாயிலே போட்டுக்குதோ? யார் இந்த ஆள் அவசகுனி மாதிரி?…

அந்த ஆள் எதிர்த் திண்ணையிலே உட்கார்ந்து கொண்டு ஒரு துண்டுப் பீடியைப் பிடித்துக்கொண்டிருந் தான். அவன் முகத்தைய பார்த்து வயதையோ அந்தஸ் தையோ நிர்ணயிப்பதற்கில்லை. கால்மேல் காலை மடித் துப் போட்டு உட்கார்ந்துகொண்டு வெகு ஆத்திரத்துடன் பீடியைக் குடித்துக் கொண்டிருந்தான்.

“இல்லே? காலைலே போனா-இன்னும் வரல்லேகுளங்தை வவுத்திலே ஒண்ணுமில்லே.”

“யார் வவுத்திலே தாணய்யா இப்போ என்ன இருக்குது? எரிச்சல் தானிருக்குது. ஊருக்குப் புதிசா ஏதேனும் வேண்டுதலையா?…”

“இல்லே, பட்டணத்துக்குப் புளைக்க வந்தோம்.”

அந்த ஆள் ஆத்திரத்துடன் பீடியை விசிறி எறிந்தான்,

“ஆமாய்யா, வெளியூரிலே இருக்கிறவன் புளைக் கறத்துக்குப் பட்டணத்துக்கு வந்துடுங்க. பட்டணத் திலேயே இருக்கிறவன் பட்டினி கிடக்கட்டும் ஊரிலே இருக்கிறவனுக்கு இடமில்லை; வந்துடராங்க வரிஞ்சு கட்டிக்கினு-புளைக்கறத்துக்கு.”

‘மனுசனுக்கு மனுசன் ஏன் இப்படி இருக்குதுன்னு புரியல்லே. யார் யாருக்குத் தீங்கு இளைச்சுட்டது என்ன? அவன் யாரே நான் யாரோ, இவனுக்கு என் மேலே என்னத்துக்குக் கோவம்? இந்த மாதிரி இடத்துலே தன்னக் தனியா மாட்டிக்கிட்டு எப்படிப் புளைக்கறது: ஊரிலே ஒரு மாதிரி கஷ்டமின்னா, ஒண்டவந்த இடம் இப்படி இருக்குது. துணையுமில்லே, துப்புமில்லே. ஒண்னும் புரியவும் மாட்டேன்னுதே……’

அவன்படும் வேதனையும் குழந்தையின் ஓயாத அழுகை யும் ஆத்திரத்தைத்தான் விளைவித்தன. ‘இதும் களுத்தை முறிச்சுப் போட்டுடவா? ஒரு வளியா ஒளிஞ்சுது ஒரு தொந்தரவு……’

‘போனா போனா, காலைலே – போனா-புடிக்கப் போன வேலையை வேரோடு புடிங்கிக்கிட்டு வந்துடற மாதிரி-என்னடாது ஆண்புள்ளெகிட்டே குளந்தையை விட்டுட்டுப் போனமே, வேளா வேளைக்கு அவன் என்ன பண்ணுவானின்னு கெஞ்சிலே பயமிருக்கனும். ஊரைச் சுத்தனும்னா போதும் இந்தப் பொம்புளெங்களுக்கே…?

அவன் பொருமிக் கொண்டிருக்கையிலே கிழல் வாசம் படியில் தட்டியது.

“வந்து ட்டியா?”

“வராமே? சாக்கடைத் தண்ணிக்குப் போக்கெடம் ஏது? என்னா கொளங்தையெ அளவிட்டுட்டியே. இதான் சாமார்த்தியமா? கொடு இப்படி-’’

கோபம் அவன் வாயை அடைத்துவிட்டது. ஆளைத் தாக்கி எறிஞ்சு பேசறதுலே அவுங்களுக்கு நிகர் அவுங்க தான். ஒண்ணு முதுகிலே வெச்சா சரியாப்போயிடும். என்ன தைரியமா கேக்கறா பாரு! இருக்கட்டும். இப்போ கொளங்தைக்கிப் பசி அடங்கட்டும். அதான் இப்போ முக்கியம். அவளுக்குத்தான் அந்த எண்ணமில்லேன்னா நமக்குக் கூடவா இல்லே! நான் பெத்த மகன்.”

அந்த ‘ஆள்’ அப்பொழுதே போய்விட்டான். அவள் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு குழந்தையை எடுத்து விட்டுக் கொண்டே கேட்டாள்.

“நீ எங்கயாவது புளைப்புத் தேடினயா? என்ன வாச்சு?

அவள் கேள்விக்குப் பதில், அவன் முக வாட்டத்திலேயே கிடைத்து விட்டது.

“இண்ணக்கி கடைத்தெருவைச் சுத்தினேன். சித்தாள் வேனுமான்னு கடைகடையா ஏறிக் கேட்டேன். ஒவ்வொருத்தன் என்னென்ன சொல்றான்கறே:- எதோ வேலையில்லேன்னு சொல்லிக் களிச்சால் போச்சு. எடக்காகப் பேசறான்க!

“சித்தாள் வேலையா? இங்கே இருக்கிறவனே ஈ ஒட்டறான்! யுத்தம் வந்தாலும் வந்தது, என்ன சாமான் இங்கே இருக்குது வியாபாரம் பண்ண? என்கிறான் ஒருத்தன்.

“ஒரு கடைக்காரன் வேலையில்லேன்னு சொல்லிட்டு நான் படியிறங்கினப்புறம் என்னை மெனக்கெட்டு மறுபடி யும் கூப்பிட்டு, நான்தான் கடைக்காரன்-நான் இங்கே என்னாத்துக்குக் குந்திக்கிட்டு இருக்கேன் தெரியுமா?’ன்னு கேட்டான்.

“‘தெரியாதே’ இன்னேன். எனக்கெப்படித் தெரியும்?.

“சாமான் வாங்க வரவங்களுக்கெல்லாம் அது இல்லே, இது இல்லேன்னு சொல்லியனுப்பத்தான் குந்திக்கிட்டு இருக்கேன். இல்லை இல்லை இன்னு கத்திக் கத்தித் தொண்டை வத்திப்போச்சு. இல்லைப் பாட்டுப் பாடத் தான் இனிமேல் ஒரு ஆள் போட்டுக்கணும்போல் தோணுது. போப்பா, புளைக்க மாட்டாதவனே! பொட்டலங் கட்டக்கூட காயிதமில்லாத காலமீது- அது கூட யுத்தத்துக்கு வேனுமாம்-நீ கூடப் போறதுதானே! இன்னு சொல்றான்.

“இந்தப் பட்டணத்துப் பேச்சு நமக்குப் புரிய மாட்டேன்னுது எல்லாத்துக்கும் எடக்காப் பேசறாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதான் ஒரு ஆள் என்னை ஒரு காரணமுமில்லாமலே விரட்டிட்டுப் போனான். அத்தோடே கொளங்தையெத் தனியா விட்டுட்டு எவ்வளவு நேரம் வெளிலே சுத்த முடியுது? உன் மாதிரியா? காலைலே போன பொம்புள்ளே, திரும்பி வர இத்தனை நேரமாச்சு துன்னா என்னத்தை சொல்றது!’

“என்னாத்தை சொல்லப்போறே? யாராவது இஸ்துக் கிட்டு ஓடிட்டாங்கன்னு பாத்தியா?”

அவன் மனம் சுருக்கென்றது. ‘வயித்துக்குக் கஷ்டம் வந்துட்டுதுன்னா, கொண்டவளுக்குக்கூட இவ்வளவு எளக்காரமாப் போயிடுமா?…’

குழந்தை மறுபடியும் கத்த ஆரம்பித்துவிட்டது! அவன் கண்கள் ஜ்வலிக்க ஆரம்பித்தன. இண்ணைக்கு அவன் மனம் கோவடிக்கறத்திலேயே அவளுக்குச் ‘சந்தோசமா?’

“என் அதுக்குள்ளேயும் விலக்கிட்டே?”

“சரிதான்! என் புளைப்பும் உன் புளைப்பும் அதிலே தானிருக்குது.”

“என்ன அம்மே, வந்ததே மொதக்கொண்டு ஒரு மாதிரியாயிருக்கே. புதிர் போட்டுப் பேசுறே-என்ன? உடம்புக்கு பூசைக்காப்பு போடணுமா?”

அவள் குழந்தையை இடுப்பில் வைத்துக் குலுக்கிய வண்ணம் திண்ணையில் உலவியபடி, சமாதானப்படுத்த முயன்றுகொண்டே சொன்னாள்.

“கொஞ்சம் அவசரப்படாமெ நான் சொல்றதைக் கேளு-இன்னிக் காலையிலே இப்படி போனேனா-இந்த ரோட்டோடே போனேன்-அப்புறம் ஒரு சந்துலே நுளைஞ்சேன். ஆனால் அது சந்தில்லே. ஆள் நடமாட்டம் அதிகமாயில்லே. ரெண்டு பக்கமும் தனித்தனியா பங்களாவுங்க இருந்திச்சு. அப்புறம் அப்படித் திரும்பினேன். இப்படித் திரும்பினேன். எனக்கு வளி மறந்து போச்சு. சுத்துமுத்தும் பாத்தா ஒருத்தருமில்லே. எனக்கு ஒரே அளுகையா வந்திட்டது. நான் ரோட்டோரமா நின்னிட்டு அளுதுகிட்டு இருக்தேன்.

“அப்போ ஒரு ஆள் அந்தப் பக்கமா வந்தான். என்னைத் தாண்டி போனான். அப்புறம் திரும்பிப் பார்த்தான். நின்னான். மேலே இன்னும் கொஞ்சம் நடந்து போனான். மறுபடியும் என்னை முளிச்சுப் பார்த்தான். அவன் பார்வை ஒரு மாதிரியாயிருந்திச்சு. என் முகத்தைப் பாக்கல்லே. களுத்துக்குக் கிளே, இடுப்பு வரைக்கும்தான் கண்ணோட்டம் நின்னுது. அப்புறம் எண்ணத்தை என்னவோ திடம் பண்ணிக்கிட்டுத் திரும்பி நேரே வந்தான்.

” ‘ஏன் அழுவரே? எந்த ஊர்?”

” ‘ஐயா, ஊருக்குப் புதிசு-நாட்டுப்புறம், வளி தப்பிப் போச்சு இன்னேன் விக்கிக்கிட்டே.

“ஏன் வந்தே இந்த ஊருக்கு? “

“புளைக்க வந்தேனுங்க. எங்கேயாச்சும் பத்துப் பாத்திரம் துலக்கிப்போட்டு வாசக்கூட்டி வேலையவப் பட்டா போதுங்க.”

“அந்த ஆள் என் களுத்தைப் பார்த்துகிட்டே கலியாணம் ஆயிட்டுதான்னு கேட்டான்.

“கையிலே ஒரு குளந்தை யிருக்குதுங்க-எள் எசமானர்கிட்டே விட்டுட்டு வந்திருக்கேனுங்க.”

“எத்தனை வயசு?”

“இரண்டு மாசங்க –“

“சரி வா. உன்னதிர்ஷ்டம் இந்தப்பக்கமா கான் வந்தேன். உனக்கு வேலை வாங்கித் தரேன். என்னோடு வா’ இன்னுட்டு கடந்தான். எனக்குக் கொஞ்சம் பயமாய்த் தானிருந்திச்சு. இருந்தாலும் ஆள் நடமாட்டமிருக்கிற இடமா வந்து சேர்ந்துட்டா சமாளிச்சுக்கலாம்னு மனதைத் தைரியம் பண்ணிக்கிட்டுப் பின்னலே போனேன்.

‘’நீ முளிக்காதே! அவன் ஒண்ணும் தப்பா நடந்துக் கல்லே. ஒரு பங்களாக்குள்ளார துளைஞ்சோம். பெரிய தோட்டம். பூவும் செடியும் பாத்தியும் பச்சையும் எங்கே பார்த்தாலும் ஒரே குளுமையா யிருந்திச்சு, கன்னுக்குட்டி யாட்டமா ஒரு பெரியநாய் என்னைப் பாத்து ஓடிவந்துது. அந்த ஆள் அதை விரட்டிட்டு என்னை வாசல் தாவாரத் திலே நிறுத்தி வச்சுட்டு உள்ளே போனான்.

“கொஞ்ச நேரம் பொறுத்து மூணு பொம்புள்ளைங்க உள்ளேருந்து வந்தாங்க பாப்பாரு. பணக்காரு. நகையும் கட்டும் நல்ல புடவையும் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்குள்ளே என்னவோ வெள்ளைக்காரன் பாஷைலே பேசிக்கிட்டாங்க. அவுங்களுக்குள்ளே ஒரு பெரிய அம்மா இருந்தாங்க. அந்த ஆள் என்னை மொதமொதல்லே விசாரிச்ச மாதிரியே, அவுங்களும் விசாரிச்சாங்க, இன்னும் ஒன்னுரெண்டு பொம்புள்ளே விஷயங்கூட விசாரிச்சாங்க. அப்புறம் அங்கேயே குந்தவெச்சு, ஆளு வந்து சோறு போட்டான், குளுகுளுன்னு பழஞ்சோறு, என் வயிறு குளுந்துது. ஒன்னே கெனச்சுக்கிட்டேன்.

“கை கழுவி, தண்ணி யேந்திக் குடிச்சுட்டு, முக்தானை யிலே கையைத் தொடச்சிக்கிட்டேன். உடனே இங்கிலி ஸ்-லே என்னவோ பேசினாங்க. பொம்புள்ளேங்க ஆம்புள்ளே மாதிரி இங்கிவீஸ் பேசி இண்ணக்கித்தான் கான் பார்த்தேன். உடனே ஒரு அம்மா உள்ளே போய் ஒரு குளங்தையை ஏந்திவந்து என் மடியிலே வெச்சு, ‘பாலைக் கொடு இன்னாங்க.

“எப்படி மாட்டேன்றது. சோறு போட்டிருக்காங் களே! உப்புக் தண்ணியும் உலர்ந்த வயத்திலே ஊத்தியிருக் காங்களே’

“குளங்தையா அது நம்ம ஊரிலே முருங்க மரத்துலே இடையன் கொம்பு ஊறல்லே? அது மாதிரி ஒரே குச்சியா, உயிர் தொண்டையிலே நாலாட்டமா ஓடிக்கிட்டிருக்குது. தொடவே அச்சமா யிருந்திச்சு.

“தாய்ப்பாலில்லே. குழந்தைக்கி வேறே குத்தம் இல்லே. உனக்கு ரெண்டு வேளை சோறு, ரெண்டு வேளை தீனி, மாசம் எட்டு ரூபாய் கொடுக்கறேன். இங்கே இருந்து இந்தக் குழந்தையை நீ காப்பாத்தணும். வீட்டுக்கு ஒரே பிள்ளை இது. இருந்திருந்து பெத்த மகன். நீ இருந்து காப்பாத்தனும்’ இன்னாங்க அந்தப் பெரியம்மா.

“அம்மா! என் குளங்தை?-நானறியாமலே அந்தக் கேள்வி என் வாயிலேருந்து வந்திட்டது. –

“உன் குழந்தைக்கு மாவு கரைச்சுக்கொடு-மாவு நான் கொடுக்கறேன். இந்தக் குழந்தைக்கு வயிற்றிலே கட்டி விழறது. உன் குழந்தை இது மாதிரி மோசமாயிருக்காது. என்ன சொல்றே? சட்டு புட்டுனு உன் புருஷன் கிட்டே சொல்லிட்டு வந்துடு. காலையிலே ஒரு வேளை சாயந்தரம் ஒருவேளை ஒன் குழந்தையையும் பார்த்துட்டு வா-நான் ஒன்னும் அப்படியாப்பட்ட பாவி இல்லே-என்ன சொல்றே?

“நான் என்ன சொல்றது? எத்தனையோ விசயம் கவனிக்க வேண்டியிருக்குது, கம்ப புளைக்க வந்துட்டோம். உனக்கு சரியா புளைப்புக் கிட்டற வரைக்கும் வவுத்தெ ரெண்டு பேரும் கட்டிப்போட்டுகிட்டிருக்க முடியுமா? என் வவுத்தே அவுங்க வீட்டிலே களுவிட்டாலும் என் சம்பளம் உனக்கு மிச்சம் தானே. நான் ஒப்புக் கிட்டேன்.’

மெளனம் இருவரிடையிலும் தேங்கியது. சத்திரத்தில் மூட்டையும் முடிச்சுமாய் இறங்குபவரும் வெளியே போவாருமாய்ச் சண்டை போடுபவரும், கொட்ட மடிப்ப வருமாய் இரைச்சல் காதைப் பொளிந்தது. ஆயினும் இவ்விருவருக்கு மாத்திரம் அது தூரத்துச் சத்தமாய்த்தானிருந்தது.

” நீ ஒப்புக்கிட்டது தப்பு” என்றான் அவன்.

“அப்படியானால் நாம்ப இங்கே வந்ததே தப்பு.”

“நாம்ப, புளைக்க வந்ததே தப்பானால், நம்ப ஊரிலே மொத மொதல்லே ஒருத்தரையொருத்தர் சந்திச்சோமே, அதுவே தப்பு-“

“இப்படி ஒருத்தரை யொருத்தர் கசந்துக்கிட்டுப் பேசினால் என்ன பிரயோசனம். புளைக்க வந்திட்டோம்; புளைச்சு ஆகணும். இக்தா, மூணு ரூபா முன் பணம் வாங்கி வந்திருக்கேன். செலவுக்கு வெச்சுக்க-’’

“இதென்ன, நீ எனக்கு சோறு போடணும்னா நான் ஆண் புள்ளையா பிறந்துட்டு இருக்கேன்! – என்னான்னு கினைச்சுட்டே உன் மனசிலே என்னை?”

அவள் தொண்டை கம்மியது.

“நீ வேறே நான் வேறேன்னு துட்டு வாங்கறப்போ என் நெனைப்புலே படல்லே!’

“ஆமா-அப்போ நம்ம ரெண்டு பேரும் கூடிப் பொறந்த கொளந்தெதான் வேறாப் போயிட்டுது இல்லையா?”

கரையினின்று திரும்பும் அலைக்ள் போல் நினைவுகள் பின்னோக்கிச் சுருண்டன.

‘நல்லபடியா நாலுபேர் பேசி முடிச்சுத் தாலி கட்டின கலியாணமாயிருந்தால் இத்தனை கஷ்டம் ஏன் படனும்?. ஒரு இமைப் பொளுது வெறியிலே ஏமாந்து போன தோசத்துக்காக, ஊரை விட்டு ஓடி வந்து இங்கே இருக்க இடமும் புளைக்க வளியுமில்லாமே அல்லாட றோம்…’

வாய்வழி புறப்படாத விதவிதமான கேள்விகள் அவரவர் மனசை இடித்தன.

‘நம்ம ஊரே நல்ல ஊர்.’

‘நான் பாட்டுக்கு நிம்மதியா ஊருக்கு முதலாளி வெச்சிருக்கும் மளிகைக் கடையிலே வேலை செஞ்சுக்கிட்டு வேளா வேளைக்கு அவர் வீட்டிலேயே சாப்பிட்டு வேட்டி யுடுத்திக்கிட்டு கைச் செலவுக்கு கெதம் கால் ரூவா கல்லாப் பெட்டியிலேருந்து எடுத்துகிட்டு ராசாமாதிரி யிருந்தேன்.”

-‘எனக்கு மாத்திரம் என்னா கொறவு? வீட்டு வேலையை செஞ்சிக்கிட்டு அவுங்க கொளங்தையெ கொஞ்சிக்கிட்டு குசாலாய்த்தானே யிருந்தேன்! அப்பன் ஆயி இல்லேன்னு ஒரு நாளாவது கெனச்சிருப்பேனாt அந்த ஊட்டு அம்மாதான் எனக்கு எல்லாமா இருந்தாங்களே!”

-‘இருந்து என்னா பிரயோசனம்? உன்னை எங்கே யாவது கட்டிக்கொடுத்து ஒழிச்சிருக்கணும்!’

-‘ஐயோ பண்ணையிலே ஒரு ஆளுக்குத்தான் என்னை முடிச்சுப் போட்டு வெச்சிருந்தாங்களே – அதுக்குள்ளார நீதானே என் மேலே கண்ணெப் போட்டே’

-‘நீ மாத்திரம் சும்மாயிருந்தியா? அடிக்கடி கடைக்கு வந்து கடிச்சுக்க ஒரு துண்டு கட்டைப் புகையிலே கொடுன்னு என் கையை இடிச்சு வாங்கிப் போனையே, மறந்து போச்சா?”

-‘ஒருத்தரையொருத்தர் ஏன் குத்தம் சொல்லனும்: ஏமாந்து போனோம். அவ்வளவுதான்’.

-எல்லாந்தான் போச்சு, அண்ணக்கி என்னவோ சீக்கிரமாக்கடையைக் கட்டிக்கிட்டு அண்ணக்கின்னு ரயில் டேஷனுக்குப் போற வழியிலே நான் என் வரணும்? நீ கடலைக்காய் கொல்லையிலே காவல் காத்துட்டு, கான் வந்த வளியே நீ ஏன் வரணும்?

-‘களத்து மேட்டிலே வக்கிறதுக்கு முத்திரையைக் கொடுத்திட்டு வந்தேன்.
-‘வந்ததுதான் வந்தியே, சும்மாப் போனியா? மடிலேருந்து பிடி கடலைக்காயை எடுத்து இந்தான்னே, சிரிச்சுக்கிட்டே. நான் நினைவு மங்கிப் போய் உன் கையைப் பிடிச்சேனே! கையை உதறி என் கன்னத்திலே ஏன் ஒண்ணு விடலே? அப்படியே என் தோள் மேலே சாஞ்சுட்டே. அண்ணக்கின்னு நெலவு ஏன் அப்படி காயனும்! ஆத்தோரத்துக்கப்பால் சினிமாக் கொட்டகை லேருந்து அம்பிகாபதிப் பாட்டு காதண்டை மோதி ஆளை. என் அப்படி சொக்கடிக்கணும்!”

-‘நான் என்னாத்தெக் கண்டேன்? பிள்ளைப்பூச்சி உடனே கடிச்சிடும்னா கண்டேன்! இந்தப் புள்ளையைப் பத்தி அப்பொ கெனச்சமா? வவுத்தெ எத்தனை நாள் மறைச்சு வைக்க முடியும்?

-‘உடலும் மனசும் ஒண்ணாக் கொழஞ்சு நாம் ஆசையாய் பெத்த குளங்தையை உலகத்துலே எல்லாரும் பெத்து வளக்கற மாதிரி வளர்க்க முடியல்லே. களுத்துலே மஞ்சக்கவுறு ஏர்றதுக்கு முன்னாலே வவுத்துலேருந்து இறங்கற குளங்தையெ யார் மதிக்கிறாங்க? திருட்டுப் புள்ளைன்னு ஊரெல்லாம் சிரிக்க மானம் போய் உசிர் போகாமெ ஊரைவிட்டு ஒடியாந்துட்டோம். வந்து இங்கே மாட்டிக்கிட்டோம்.’

-‘விதி-விதி’

மனத்தின் பேச்சுக்கு முடிவே கிடையாது.

அந்தக் குழந்தையின் பசியை ஆண்பிள்ளை தானாக எவ்வளவு தூரம் சமாளிக்க முடியும்? அவள் மாலையில் வந்து ஒரு வேளை ஊட்டுவாள்; காலையில் மாவையும் தண்ணிரையும் கரைத்துப் புட்டியில் போட்டுவிட்டுப் போவாள். புட்டியை எந்தப் பக்கம் குழந்தையின் வாயில் வைப்பது என்றுகூட அவனுக்குத் தெரியாது.

‘காலைலே வேலைக்கு அலையனும். கொளங் தையைத் தனியா விட்டுட்டு எத்தனை நேரம் வெளியிலே சுத்த முடியும் மாலை வறது எப்போ? அவள் வறது எப்போ? அந்தக் கொளங்தையை அவள் மார்மேலே அணைப்பது எப்போ? தொண்டையைக் கிளிச்சுக்கிட்டு ஒயாமெ அலறும் அதன் அலறல் ஒயறது எப்போ? ஒரே வேளையானாலும் பெரிய வேளை!’

இன்று அவள் குழந்தை தலைமீது மேலாக்கைப் போட்டு முடியும் அதன் கத்தல் ஓயவில்லை. அவனுக்கு வயிறு கொதித்தது.

‘ஏன் ஏமாத்தறே? நீ வந்து ஊட்டறது ஒரு வேளை. அதிலே ஏன் வஞ்சனை பண்ணறே? பங்களா வீட்டுப் பையன் மாதிரியில்லையா பெத்த மவன்?”

“ஏன் இப்படியெல்லாம் பேசறே? நான் என்ன பண்ணுவேன்? அந்தப் பையன் என்னை அட்டை மாதிரி உறிஞ்சிப் போடுதே. ஊறக்கூட நேரம் விடமாட்டேன் னுதே. மூக்காலே பாலு வந்தாலும் வச்ச வாய்க்கடி விடமாட்டேன்னுதே!’

“இங்கேயும் இருக்குதேன்னு கொஞ்சம் வெச்சுக்கிட்டு வர்றது.”

“அவங்கதான் என் எதிரேயே உக்காந்து கவுனிக் கிறாங்களே! மடியிலே புள்ளையை விட்டுட்டு அந்தப் பெரியம்மா என் எதிரே சட்டமா குந்திக்கறாங்க..கொடுடீ கொடுஉ; குழந்தைக்குக் கொடுடீ. இந்தப் பக்கம் வத்திப் போனா அந்தப் பக்கம் மாத்திப் போட்டுக்கோ’ண்ணு ஈவு இரக்கமில்லாமெ பேசறாங்க.”

“சோத்திலே நெய்யைக் கைநிறையா அள்ளித்தானே விடறேன்! ஆப்பிள் பழமும் ஆரஞ்சிப் பழமுமா வாங்கி வாங்கிக் கொடுக்கல்லே! என் எதிரிலேயே உரிச்சித் தின்னுடனும் என் குழந்தைக்கு ஊறும்பாலை என் குழந்தைதான் குடிக்கனும், என் வீட்டுக்கே ஒரு குழந்தைடீ – “

“அவுங்க விதவிதமாத் தீனி வாங்கிப் போடறாங்க; சொகம் சேக்கராங்க. ஆசை உனக்கு அங்கேதான் பொங்கு தாக்கும்!”

“ஏன் இப்படி சொல்றே? அங்கே துண்றது விஷமாயி ருக்குது போதாதுன்னு நீ வேறே இங்கே வந்தா விஷத்தைக் கக்கனுமா? என் வவுத்திலே சுமந்த என் குளங்தையை நான் மறந்துட்டேன்னு நீ எனக்குப் போதிக்கவேணாம்-“

“அடிபோடி பாவி-‘

அவன் தெருவில் மனம்போனபடி போய்க் கொண்டிருந்தான்.

அந்த ஒரு வாரத்துக்குள் அவனுக்கும் அவளுக்கும் பேச்சு பட்டென அறுத்து போயிற்று. அவன் கண்ணெதிரே படிப்படியாய் அவன் குழந்தை தேய்ந்துபோகும் கோரம் காணக் காண அவனுக்குச் சகிக்க முடியவில்லை. அவள்மேல் குற்றமில்லை என்று அவன் மனம் புரியாமலே அறிந்தது. இருந்தும் அவள் தனக்காகச் செய்யும் தியாகம் அருவருப்பையும் பயங்கரத்தையும் தான் விளைவித்தது, அவ்விருவருக்காக அக்குழந்தை தியாகம்…

ஒரொரு சமயம் அவள் அவ்வீட்டில் எஞ்சிய ஆகாரங் களை அவன் சாப்பிடுவதற்காகக் கொண்டு வருவாள். அதைச் சீந்தக்கூட அவன் மனம் சிலிர்க்க ஆரம்பித்து விட்டது.

“சி! இதுவும் ஒரு புளைப்பா! இப்படி இந்த உசிரையும் உடலையும் ஒண்ணாத்தான் வெச்சு வாளாமே இருந்தா தான் என்ன?’

-“டேய், நாட்டுப்புறம்! எங்கே பார்த்துக் கிட்டுப் போறே? வண்டியிலே மாட்டிக்கிட்டு சாவறத்துக்கா? சாவணும்னா சண்டையிலே போய் சாவறது தானே!”

டாணாக்காரன் போட்ட அதட்டல் அவன் மனசில் அசரீரி மாதிரி பாய்ந்தது. ‘இந்த யோசனை எனக்கு என் அப்பவே தோணலே! சம்பளத்தை அவ பேருக்கு எளுதி வெச்சோம்னா அவ அந்த வீட்டிலே போய் சாகவேணாம்: சம்பளத்தை வாங்கி சாப்பிட்டுக்கிட்டு அவ நிம்மதியாயிருப்பா. நம்ப மவனாவது புளைப்பான். திரும்பி வந்தா பார்ப்போமில்லியா?”

-‘திரும்பி வராமெ போனா?”

-‘திரும்பி வராமெ போனாலும் கம்ப மவன் இருப் பான், இல்லியா!’

அவன் மனசிலேயே ஒரு பெரும் கனம் குறைந்தது. சந்தோஷம்கூடப் பிறந்தது. அந்தப் போலீஸ்காரனை அணுகினான்.

‘சண்டையிலே சேக்கற ஆபீஸுக்கு வளி எந்தப் பக்கம்?’’

அவன் திரும்பிவரும் வேளைக்குள் அஸ்தமித்து விட்டது. குழந்தையை கினைத்துக் கொண்டே அவன் ஓடோடி வந்தான். இன்றைக்கென்று அவள் அவனுக்கு முன்னாலேயே வந்திருந்தாள்; அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு முகம் மலர்ந்தது. ஆனால் அவள் முகம் மாறித் திகில் பிடித்துப் போயிருந்தது. “ஐயோ, கொளங்தையைப் பாரேன்!’ என்றாள் கையைப் பிசைந்துகொண்டே. அவனுக்கு அடிவயிற்றில் சுரி’ லென்று ஜில்லிட்டது. உள்ளே ஓடினான். அதன் காதில் ஒரு நூல் ரத்தம் வழிந்திருந்தது. வயிறு உப்பி…

அதன் அருகே உட்கார்ந்தான். அவளும் குழந்தையின் அந்தண்டைப் பக்கம் உட்கார்ந்து கொண்டாள். ஆனால் அதை அவன் உணர்ந்தானே யொழிய, காணவில்லை. அவன் பார்வை குழந்தையின்மேல் சிலை குத்திப்போயிருந்தது.

“என்ன சுருக்கனா வந்துட்டே?”

“எனக்கு இன்னிக்கு மனம் தாளலே. சண்டை போட்டுகிட்டு வந்துட்டேன்.”

அவளும் சண்டை போட்டுக்கொண்டு வந்து விட்டாள். அவனும் சண்டையிலேபோய்ச் சேர்ந்து விட்டான். ஆனால் பிரயோசனம் என்ன? ஒன்றுமில்லை.

குழந்தையைப் பார்த்தவுடனேயே அவனுக்குத் தெரிந்து போய்விட்டது. அதற்கு மூச்சு சத்தம் போட ஆரம்பித்து விடடது, கொர்-கொர்’ என்று. அவள் வயிற்றிலேயும் வாயிலேயும் அடித்துக்கொண்டு அழுகிறாள். ஆயினும் அவன் மனம் பளிங்கெனத் தெளிந்து சிந்திக்க ஆரம்பித்து. விட்டது.

எல்லாம் பாரதயுத்தம் மாதிரிதான். ஊரிலே தரும் ராஜா கோவுல்லே காப்புக்கட்டி பாரதம் உபன்யாசம் வெச்சாங்களே-எல்லாரும் தோத்தாங்க. எல்லாரும் ஜெயிச்சாங்க. தோத்தவனும் கஷ்டப் பட்டான்; ஜெயிச்ச வனும் சொகப்படல்லே. என்னவோ காரியம் சாதிக்கிறாப் போல, சண்டை போட்டதிலே கொறைச்சலில்லே, நாள் பாத்ததிலே கொறைச்சலில்லே-பலி போட்டதிலே கொறைச்சலில்லே-அரவான் பலி!’

-கொர்-கொர்-ர்-‘

“மொதல்லே புளைக்கிற வளியைக் கண்டுட்ட மாதிரி குளங்தையைப் பலி வெச்சோம். அப்புறம் அதுக்குமேலே ஒசத்திக் காரியம் பண்றாப்போல சண்டையிலே போய் சேர்ந்தாச்சு. இனிமேல் தப்ப முடியாது. கைகாட்டுக் கொடுத்தாச்சு. நாளை மத்தியான வண்டிக்குப் புறப்படனும். அப்புறம் அந்த வண்டியிலே எங்கேபோய் தள்ளறானோ. போவாமே இருந்தோம்னா நாளைக்கு கைக்கு விலங்கோடே வந்துடுவான். பூட்டுமேல் பூட்டு. புளைக்கற வழி என்ன? சாவுற வழிதான்.

‘சண்டைக்குப் போய் சேர்ந்த சமாசாரத்தை இவ கிட்டே சொல்லலே. அது வேறே பாக்கியிருக்குது. குளந்தையைப் புதைச்சுட்டு வந்தப்புறம் இருக்குது அந்த ரகளை,

‘ஆனால் சண்டையிலே போய்ச் சாவறதுக்குன்னு ஒரு சாவு பாக்கியில்லே; இப்போ நான் செத்துப் போயாச்சு. உசிரோடு இருக்கிறது உசிரில்லே, உடல்தான். இதுவும் மடியறது இண்ணக் கில்லாட்டி நாளைக்கு; அண்ணக்கி மில்லாட்டி அதுக்கு மறுநாள்.’

விடியிருட்டில்தான் குழந்தையின் ‘கொர்கொர்’ சத்தம் அடங்கியது. அவள் முகத்தை அவன் பார்க்க முடிய வில்லை. அவள் கன்னத்தை ஒரு தடவை வருடினான். அவன் மனம் நெகிழ்ந்தது. குழந்தையை அதன் கங்தையில் சுற்றிக்கொண்டு கிளம்பினான்.

வெளியிலும் இருட்டு. ஒரு பீடிப்பொறி மாத்திரம் தெரிந்தது.

“யாரய்யா?”

“நான்தான் பட்டணம்’.-குரலிலிருந்து தன் மேல் சீறி விழுந்த ஆள் என அறிந்தான்.

“சுடுகாட்டுக்குப் போற வழி எது ஐயா?”

அந்த நெருப்புப் பொறி எழுந்தது. ‘கான் காண்பிக்கிறேன், வா-‘

‘பட்டணம்’ காண்பித்த வழியூடே அவன் பின்பற்றிச் சென்றான்.

– புற்று சிறுகதைகள் – ஐந்திணைப் பதிப்பகம் – மார்ச் 1989

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *