வானத்தில் உதிரும் எரிநட்சத்திரங்கள்
கதையாசிரியர்: சீ.முத்துசாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2026
பார்வையிட்டோர்: 47
(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏனோ. இந்த இரண்டு நாட்களாய் அவனுள் இரத்த வெள்ளமாய் உணர்வுகள் ஊற்றெடுத்து நிலைகுலையச் செய்திருந்தது.
பேசாமல், நான்கு சுவர்களுக்குள், ஒரு ஓரமாய் சாய்ந்து உட்கார்ந்து, குத்துக் காலிட்ட முட்டிகளுக்கிடையே, தலையைக் கவிழ்த்து, மோனமாய், மனகள் ஓடும் எண்ணத் துளிர்களை அசைபோட்டு இருக்கிறான்.
மூன்று நாட்களுக்கு முன்னால்தான், ஒரு வருடமாய் தன் தாம்பத்தியத்தின் அஸ்திவாரமாய் இருந்து, இந்த வாழ்வின் மிக உன்னத மகிமையை தன்னோடு பங்கு போட்டுக் கொண்ட அவளை, இடுகாடுவரை கொண்டு போய் விட்டு வந்திருந்தான்.
ஓடிசனாய், மஞ்சனாய், நோஞ்சனாய், ஏதேதோ நோயோடு அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த போது, டாக்டர், இந்த நிலையில் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டுமென்று மிகவும் எச்சரித்து இருந்தார்.
தாய்மையின் செழிப்போடு, முகமே மென் பூவாய் பூர்த்து மிக பரிவோடு பாதுகாத்து வந்து, அன்றைய இரவின் நிசப்தத்தில், அவள் திடீரென்று வலிகண்டு துடித்தபோது, மிக அவசரமாய் கொண்டு போய் அங்கேயே வாசலில் விடிய விடிய உட்கார்ந்து காத்திருந்தான்.
அவளுக்கு இன்னும் பிரசவம் ஆகாமல், அவசர ஆபரேஷனுக்கு ஏற்பாடாகி இருப்பதாய் நர்ஸ் வந்து சொன்னபோது, தென்னை மர இலைகளுடாய் வானத்தில் தெரிந்த ஒளிப் பூக்களை பார்த்து இவன் உட்கார்ந்திருந்தான்.
இறுகிப்போன தசைகள் முகத்தை இருட்டடிப்புச் செய்ய, உடலெல்லாம் அதிர்வாய் பரவிய நடுக்கத்தோடு, மனகள் நெருப்புத் துண்டங்களாய் விழுந்து எரிந்ததை, சிரமத்தோடு மென்று விழுங்கி, நர்ஸ் பின்னால் போனான்.
கண் இமைகளில் ஈரமாய் கசிந்ததை, இரவெல்லாம் தூங்காத விழிப்போடு சிவப்பாய் கன்னிப்போய் கிடந்ததோடு, அழுந்து ஒத்தி மனகள் “ஆண்டவனே.. ஆண்டவனே” என்று மிக பயத்தோடு, சோகத்தோடு நினைத்துப் பார்த்தான்.
தான் ஒரு தைப்பூச நெரிசலில் நின்று கொண்டு, வேடிக்கை பார்க்க, தூணோடு சேர்த்து நின்று, இரண்டு இமையாத கண்களாய் தன்மேல் கவிந்து நிற்பதை, பார்வையின் ஒரு குறுக்கோட்டத்தில், பார்த்து, ஒரு க்ஷனத்தில் அதனோடு நிரந்தர ஐக்கியமானான்.
இந்த ஒரு வருட தாம்பத்தியத்தில், அவளின் மிக மெல்லிசான தன்மைகள் எல்லாவற்றையுமே. அவன் ஒரு ரசிகனாய் நின்று ரசித்து மகிழ்ந்திருக்கிறன்.
பக்கமேயே உட்கார்ந்து, ரவிசங்கரின் கித்தார் இசையாய் இழையும் குரலாய்…
பூமியின் உடம்பு நோகாத கால் பாவலாய்…
வெண்மை கீற்றுக்களாய் பளிச்சிடும் புன்னகை முத்துக்களாய்…
அவளோடு சம்பந்தப்பட்ட எல்லாமே எப்படி இத்துணை மிருதுவாய், மிக அழகாய், தனித் தன்மையாய் இருக்க முடிகிறது என்பதில் இவனுக்கு ரொம்பவும் ஆச்சரியம் உண்டு.
“மிகச் சொற்ப ஆயுளாய் உள்ளவர்கள் ரொம்பவும் நல்லவர்களாகவே இருப்பார்கள்” என்றெல்லாம் இவன் வழக்கு மொழிகளாய் கேட்ட தத்துவங்களெல்லாம், இவனை இப்போது ரொம்பவும் வதை செய்தது.
“ஒருவேளை இவளும்… அவளும்..!”
ரொம்ப நேரங்கழித்து, ஆபரேஷன் தியேட்டர் வாசலில் – வியர்த்துக் கொட்டும் உள்ளங்கை இடையே கைக்குட்டை சொத சொதத்துப்போக, அவன் பீதியோடு காத்திருக்க, ரொம்பவும் நிதானமாய் ஒரு செயற்கை தயாரிப்போடு வந்து, அவள் அந்த விஷயத்தை சொல்லிப் போனாள்.
ரொம்பவும் பலவீனமாய், தனியனாய், தொண்டைக்குள் முக்கிவரும் சீறலாய்; எதையுமே செய்ய முடியாத தடுமாற்றத்தோடு, ஓவென்று சிதறிப் போனான்.
தன் மனசின் மென்மைக்கு தாள சுருதியாய் மானுடம் பூண்ட அனிச்ச மலரை, மண்ணுக்குள் நசித்துப் போசு, இவனே கண்ணீரோடு சம்மதம் கொடுத்து உட்கார்ந்திருக்கிறான்.
துண்டுப் படங்களாய்; தங்கள் வாழ்வின் சாட்சியங்களாய் இருந்து, அப்போது தன் வாழ்வின் நினைவுகளாய் மட்டும் எஞ்சிப் போன எல்லாவற்றையுமே ரொம்பவும் நினைத்துப் பார்க்கிறான்.
கோயிலின் நெரிசலில் சந்தித்த அந்தக் கண்களைத் தேடி, அவன் பலநாள் ஊரைச் சுற்றி வந்திருந்தான், முகம் நிறைய முடிகளை வளர்த்துக் கொண்டு, ஒரு சந்நியாசி போன்ற நினைவோடு, அவளுக்காக ஏங்கி அலைந்தான்.
ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்பவள் என்பதும்; எடுக்கும் சம்பளத்தை அப்படியே வீட்டில் கொடுத்துவிட்டு இருப்பவள் என்பதும்; குனிந்த தலை நிமிராமல் இவன் வேலைக்குப் போகும் கம்பெனிக்கு பக்கமாய் ஓடும் நீண்ட சாலையில், ஒவ்வொரு நாளும் காலை ஏழு மணிக்கும், மாலை ஐந்து மணிக்கும் தவறாமல் செல்பவள் என்பதும், ஒரு எதிர்பாராத சந்திப்பில் இவனுக்கு வேண்டிய ஒருவன் சொன்னபோது, இவன் மறுநாள் அதிகாலையிலேயே பாயை சுருட்டி வைத்து, பச்சைத் தண்ணீரில் வெடவெடக்க குளித்து, நல்ல பாத்தேக் சட்டையைப் பார்த்து போட்டுக் கொண்டு, சைக்கிளை எடுத்துக் கொண்டு ரொம்பவும் ஆவலாய் அந்த சாலையோரமாய் போய் நின்று அவளை எதிர் பார்த்திருந்தான்.
இவனுக்கு வேண்டியவன் சொன்னது போலவே, அவள் ரொம்பவும் மெதுவாய். தலை கொஞ்சம் குனிவாய் நேராய் சாலையை மட்டும் பார்க்க. இவனைத் தாண்டும் ஒரு மின் வெட்டில் அமர, தைப்பூச நெரிசலில் தெரிந்த மென்மையாய், கடந்து போக, ஒத்தை இடையின் இடையாய் சிவந்த ரோஜா இவனுக்கு ரொம்பவும் பிடித்தது.
வீடு போனவனின், மிதந்து ஓடும் பார்வையில், நடையில், பேச்சில் எல்லாமே ஒரு பிடிப்பில்லாத. எங்கோ மிதக்கும் நினைவின் ஆதாரங்கள் பளிச்சிட்டன.
ரொம்பவும் தேர்ந்த சித்திரக்காரன் என்பதாலும்; தன் பார்வைகளை சித்திரமாய் தீட்டும் ஆர்வம் மிகுதியும் உடையவன் என்பதாலும் அறையை பூட்டி உட்கார்ந்து தாளில் அவளை கொண்டுவர பூவாய் விழுந்து ஆத்மாவை ஸ்வர்க்கமாக்கும் விழிகளை; சாஸ்வதமாய் முகத்தோடு ஒட்டிப்போன மலர்ச்சியை: கருளாய் காதோரம் அணைந்து போகும் கூந்தலை எல்லாம் அவன் ரொம்பவும் சிரமத்தோடு தன் முன் கொண்டுவர முயன்றான்.
ரொம்பவும் முயன்று, அந்த பூரணத்துவத்திற்கு, தம் கைவிரல்களால் பூரணத்துவம் அளிக்க முடியாத சலிப்போடு, எழுந்து கதவைத் திறந்து கொண்டு போய், ரொம்ப நேரம் தூங்காமல் படுத்துக் கிடந்தான்.
எல்லாமே கனவுகளாய் போய், அவன் தன் திருமணம் முடிந்து ஒரு மாதமாய் சிரமப்பட்டு உருவாக்கிய, அந்த சித்திரம் மட்டிலும், இப்போது இவனுக்கு நேராய் சுவரில் இருக்கிறது.
எழுந்து போய், அதன் முன் நின்று, தீர்க்சுமாய் பார்த்து, கலங்கி வரும் கண்களாய் இருந்தவனை, கூரை முகட்டில் வாலாட்டிப் போன பள்ளி கிச் கிச் அடிக்க, கவனம் கலைந்து நிமிர்ந்து அதையே பார்த்தான்.
இந்த இரண்டு நாட்களாய், வீட்டின் பூரண நிசப்தத்தோடு இவனின் தொடர்ச்சியான குமிழ்களாய் உடைந்து உடைந்து சித றிப் போகும் நினைவுகள் மட்டிலுமே சங்க மித்திருந்த கூழ்நிலையில், எப்போதோ வீட்டுன் இரைதேடி வரும் சிட்டுக்களின் இரைச்சலாய், எப்போதோ, ஒதுக்குப்புறமாய் இருக்கும் வீட்டு முன் போகும் வண்டிகளின் திடீர் ஓசையாய்; மனிதக் குரல்களின் இடை வெட்டாலே மட்டிலும் வந்து இவனின் கவனத்தில் சலசலப்பை உண்டாக்கியிருந்தன.
அவள் இருந்த காலங்களில் இந்த ஓசைகளை எல்லாம் இத்துனை நுணுக்கமாய் கவனத்தில் வைத்துக் கொண்டதே இல்லை – கேஸட்டிலிருந்து எப்போதுமே மிதந்து நிற்கும் ரவிசங்கரின் சித்தார் இசையோடு, அவளின் இடைச் சொருகளாய் பரவும் எல்லா மென்மைகளும்
தலையில் அடித்துக் கொண்டு, இந்த சூனியத்தை தாள முடியாமல் அவன் ஓவென்று அழுதான்.
– உதயம் (1979-01)
தொடர்புள்ள சிறுகதைகள்
எங்கெங்கு காணினும் சக்தியடா
எஸ்.மதுரகவி
June 20, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 20, 2026
அப்பாவின் பட்டுவேஷ்டி
ஷைலஜா
June 20, 2026