கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 2,092 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

13. வடிவேலு

சுந்தரிக்குத்தான் எவ்வளவு இளகிய மனசு. பணக் கஷ்டத்தைப்பற்றி நான் சொன்னவுடனே, ஒட்டியாயாணத்தைக் கொண்டுவந்து கொடுத்து விற்கச் சொல்கிறாளே ! என் யோக்யதையில் எவ்வளவு நம்பிக்கை அவளுக்கு! நான் அனாவசியமாகச் செலவழித்துக் கடன் படவில்லையென்று சொல்கிறாளே! சுந்தரியைப்போல் ஒரு பெண் இருக்கமுடியுமா என்றே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. 

ஒட்டியாணத்தை விற்றாலொழிய சாப்பிடமாட்டேனென்று அவள் சொன்னவுடன் எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அது ஆனந்தக் கண்ணீராகத் தானிருக்க வேண்டும். 

குழந்தையின் பிறந்தநாளும் ரொம்பச் சிறப்பாகத்தான் நடந்தேறியது. ஒட்டியாணம் விற்ற பணத்தில் கடனடைத் ததுபோகப் பாக்கி நின்றதை இந்த விசேஷத்திற்குச் செல வழித்துவிட்டேன். இனி? பழையபடி கஷ்டம்தான். தோட்டத்தோடு கஷ்டப்படுவதைத்தவிர வேறு என்ன வழி இருக்கிறது! முருகனுடைய படிப்பும் தோட்ட வேலையினால் கெட்டுவருகிறது. பத்து வயதிற்குள்ளாகவே ஆறு வகுப்புப் படித்துவிட்டான். தமிழ் எழுத வாசிக்க நன்றாகத் தெரிந்துகொண்டான். பூ வியாபாரத்திற்கு வேண்டிய கணக்கெல்லாம் அவனுக்குத் தெரியும். ஒன்று செய்தாலென்ன! எனக்கோ தோட்டவேலைக்கு உதவி யாக ஒரு கையாள் வேண்டியிருக்கிறது. பூவைக் கடைக் குக் கொண்டுபோவதற்கும், வேறு ஒரு ஆளை வைத்துச் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த ஆளும் சரி யான வேளைக்கு வருவதில்லை. இந்தத் தாந்தரவுகளெல்லாம் இருக்கும்போது முருகனைத் தோட்டவேலையிலேயே பழக்கிவிட்டால் என்ன என்று தோன்றுகிறது. மேல் படிப்பிற்கோ நம்மிடம் ஐவேசு இல்லை. அவன் அறை குறைப் படிப்போடு ஒரு தொழிலும் தெரியாமல் திண்டாடி நிற்பதைவிட என் தொழிலில் அவனை அமர்த்திவிடு வது நல்லதுதானே! 

இந்த யோசனை நாளாக நாளாக வலுத்துக்கொண் டேவந்தது. சுந்தரியிடம் சொன்னேன். முருகனுடைய படிப்பை நிறுத்த அவளுக்குச் சம்மதமேயில்லை. லும் நான் சொல்வதற்குத் தடை சொல்வானேன் என்று சம்மதித்துவிட்டாள். தோட்டவேலையில் எனக்கு ஒத்தாசை செய்வதென்றால் முருகனுக்கு எவ்வளவோ சந்தோஷம் தான். புத்திசாலியல்லவா! வீட்டு நிலைமையை நன்றாகத் தெரிந்துகொண்டிருக்கிறான். அதனால்தான் இந்த யோசனையைச் சொன்னவுடனேயே சரியென்று ஒத்துக் கொண்டு பள்ளிப் படிப்பை விட்டுவிட்டான். 

சுந்தரி வீட்டுச்செலவை இன்னும் சுருக்கிக் கொண்டாள். நானும் முருகனும் தோட்டத்தில் இயன்றவரை பிரயாசைப்பட்டு உழைத்தோம். இதனால் முன்போல அவ்வளவு பணக்கஷ்டம் தெரியவில்லை. நாங்கள் தோட்டத்திலும் கடைகளிலும் போய் எவ்வளவுதான் சிரமப்பட்டாலும் வீட்டுக்கு வந்ததும் ஆனந்தமாகவே இருந்து வருகிறோம். பணம் சம்பாதிக்கவேண்டுமென்பதில் என்னை விட முருகனுக்கு அதிக அக்கரை உண்டாய்விட்டது. பக்கத்துத் தோட்டக்காரர்களுடைய பூவையும் கடைகளில் கொண்டுசேர்த்து ஏதோ சம்பளம் வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறான். 

படிப்பிலும், விளையாட்டிலும் உற்சாகமாக ஈடுபட வேண்டிய வயதில் முருகன் கஷ்டப்பட்டுச் சம்பாத்தியம் பண்ண ஆரம்பித்துவிட்டான். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூட எனக்கு நேரமில்லை. சுந்தரி அடிக்கடி சொல்வதுபோல, கவலைப்படும் நேரத்தைக் காரிய முயற்சியில் செலவழித்தால் எவ்வளவோ பலனுண்டு. ஆகையால் நான் கவலைப்படுவதையே விட்டு வருகிறேன். கவலைப்படு வதனால் காலமும் மனவலியும் வீணாவதைத் தவிர வேறு பலனொன்றும் இல்லை. 

சுந்தரி எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறாள். தன் தாயாரைப்பற்றி அவள் என்னிடம் இதுவரை ஒன்றுமே சொல்லவில்லை. அவளுக்குத் தன் தாயாரைப் பார்க்கவேண்டுமென்றுகூட ஆசையில்லாமல் போய்விட் டது. ஆனால் சாரதாம்பாள் இப்படி இவளை மறந்திருப்பாளா! அவளுக்குத் தன் மகள்தான் உயிர்! சுந்தரியின் இருப்பிடம் அவளுக்கு எங்கே தெரியப்போகிறது! எனக்குக்கூட ஒவ்வொரு சமயம் சபலம் தட்டுகிறது ஒரு ஊருக்குப்போய் எல்லோரையும் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று. இந்த ஆசை எப்படியெல்லாமோ சங்க டத்தில் கொண்டு மாட்டிவைத்துவிடக்கூடும். நாங்கள் எப்பொழுதுமே அவர்களைப் பாராமல் இருந்து விடு வோமோ என்னவோ! நாங்கள் நாகர் கோவிலுக்கு வந்து பத்து வருஷங்கள் ஆகப்போகிறது. இவ்வளவு காலத்திற்குள் அங்கு, நாகப்பட்டிணத்தில் என்னென்ன மாறுதல்கள் நடந்திருக்கிறதோ தெரியவில்லை. சுந்தரியின் தாய் உயி ரோடிருக்கிறாளோ என்னவோ. அதுகூடத் தெரியவில்லை. அவளுக்குப் பேத்தி பிறந்திருப்பதைக் கண்டால் மிகவும் சந்தோஷப்படுவாள். பழைய கோபமெல்லாம்கூட இதற் குள் ஆறிப்போயிருக்கலாம். என் அக்காளுக்கு என்னைப் பற்றிய சேதியே தெரிந்திருக்காது. அவர்களுக்கு ஒரு கடிதமாவது போட்டுவைக்கலாமென்றால் அதிலிருந்து அவர்கள் துப்புத்தெரிந்துகொண்டு இங்கு வந்து சுந்தரியின் லட்சிய வாழ்க்கையைக் கெடுத்துவிடலாம். ஆகவே அந்த யோசனையையும் விட்டுவிடவேண்டியதாயிற்று. 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக என்று சொல்வார்களே அதுபோலக் குழந்தை மோகனாவும் தாயின் அன்பினால் வாட்டசாட்டமாக வளர்ந்துவருகிறது. சுந்தரியைப்போலவே அதுவும் அறிவாளியாக இருக்கு மென்று தோன்றுகிறது. யாரோ சொன்னார்கள் குழந்தை பிறந்த கிரகத்தினால் எங்கள் குடும்பத்தில் இத்தனை கஷ்ட நஷ்டங்கள் வந்ததென்று. நான் இந்தக் குருட்டு ஜோசி யத்தையெல்லாம் நம்புவதேயில்லை. குழந்தை என்ன செய்யும். அது பிறந்த நேரம் நல்லதாக இல்லாவிட்டால் மற்றவர்களுக்கா சங்கடம் ஏற்படும்? குழந்தை பிறந்த வேளைக்கும் குடும்பக் கஷ்டத்திற்கும் என்ன சம்பந்தமென்றே தெரியவில்லை. ஏதோ மனசை நிம்மதிப்படுத்து வதற்காகச் சொல்லிக்கொள்ளும் வார்த்தைதான் இது. இப்பொழுது கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தியாய்விட்டதே! குருட்டு நம்பிக்கைக்காரர்கள் இதற்கு என்ன காரணம் சொல்வார்களோ தெரியவில்லை! 

சுந்தரி என்னைவிட மனோதைரியமுள்ளவள் என்று தான் சொல்லவேண்டும். நான் பணக் கஷ்டத்தினால் மனதைப் புண்ணாக்கிக்கொண்டேனே அப்பொழுது சுந்தரி எவ்வளவு தைர்யமாக என்னைத் தேற்றி ஆறுதல் கூறினாள். கஷ்டங்களைச் சகிக்கும் தன்மை இருந்தால் தான் மனிதன் இந்த உலகில் சுகமாக வாழமுடியும் என்பதை அவள் எனக்கு எடுத்துக் காட்டினாள். 

சில மாதங்களாக சுந்தரிக்கு உடம்பு சரியாக இல்லை யென்றே எனக்குத் தோன்றுகிறது. தூங்கும்போது கூட ஏதோ குடல்வலி உள்ளவள் போல் முனகுகிறாள். முன்னைப்போல அவளால் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியவில்லை. இதையெல்லாம் நான் கவனித்துக்கொண்டு தான் வருகிறேன். ஆனாலும் அவளாக வாய்திறந்து தனக்கு உடம்பு சரியில்லை என்று ஒரு நாளாவது சொன்னதில்லை. சொன்னால் நான் வருத்தப்படுவேனல்லவா! அதற்காகத்தான் நோயைப் பொறுத்துக் கொண்டு பேசாமல் மௌனம் சாதிக்கிறாள். நானாகக் கேட்டாலும் உடம்புக்கு ஒன்றுமில்லையென்றுதான் சொல்லுவாள். நோய் வந்தால் ஆரம்பத்திலேயே கவனித்தாலல்லவா லகுவாக இருக்கும். குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் அவள், தன் உடம்பையே கவனிக்காம லிருந்தால் குழந்தைகள் என்னவாகும்! 

முருகன் பாடுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. தோட்டத்தில் வேலை, அங்கிருந்து கடைகளுக்கு அலைச்சல். அங்கிருந்து வீட்டுக்கு வந்தால் தாயாருக்கு உதவிசெய்வது. இப்படியாகச் சிறுவயதிலேயே, உட்காரக்கூட நேரமில் லாமல் உழைக்கிறான். கடவுள்தான் அவனுக்கு நல் வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும். தோட்டத்திற்குக் கொஞ்சம் பணச் செலவு செய்தால் வருமானமும் அதிகமாகும். சுந்தரியிடம் இதைப்பற்றிச் சொன்னால் இன் னும் ஏதாவது நகையைக் கழட்டிக் கொடுத்து விற்கச் சொல்லிவிடுவாள். ஆகையால் தோட்டத்திலிருந்து இ பொழுது வரும் வருமானத்திலிருந்தே கொஞ்சம் மீதம் வைத்துச் சேர்த்து அதற்குச் செலவிட வேண்டும். என் தோட்டத்துப் புஷ்பங்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டிருக் கிறது. அதோடு முருகனுடைய பூவேலைகளையும் ஜனங் கள் அதிகமாக விரும்புகிறார்கள். முருகன் புஷ்பங்களைச் சரம் கட்டுவது மாலை தொடுப்பது போன்ற தொழில்களை நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டான். கடைக்காரர்கள் இவன்மீது ரொம்பப் பிரியமாக இருக்கிறார்கள். எல்லோ ருடனும் சுமுகமாகப் பழகி எனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கிறான். நான் கடைத் தெருவுக்குப் போனால் “உங்கள் மகனை வரச் சொல்லுங்கள். அருமையாகப் பூத்தொடுக்கிறானே” என்றுதான் சொல்லுகிறார்கள். இந்தச் சமயத்தில் பழையபடி பூக்கடை வைத்து அவனைக்கொண்டு வியாபாரம் நடத்தச் சொல்லலாமா என்றுகூட எனக்கு ஆசை தோன்றுகிறது. காலம் வரட்டும். பார்த்துக்கொள்ளலாம். ஜோசியர்கூடச் சொன்னார். அவனுக்கு இனிச் சகடயோகம்தான் என்று. 

14. முருகன்

எனக்கு என்னவோ பத்தாவது வகுப்பு வரையிலாவது படிக்கவேண்டுமென்று ஆவல். ஆனால் அப்பாவின் பணக் கஷ்டத்தைக் கண்டால் என் ஆவல் குறைந்து விடுகிறது. கவலையினாலேயே அவர் மிகவும் உடல் தளர்ந்து போனார். தன் உடல் தளர்ச்சியைக்கூடக் கவனிக்காமல் தோட்டத் தில் கடுமையாக வேலை செய்கிறார். இதோடு தாயாரும் முன்னைப் போல வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியாமல் கஷ்டப்படுகிறாள். வீட்டில் தாயும் தகப்பனும் இத்தனை கஷ்டப்படும்போது நான் மட்டிலும் வேளாவேளைக்குச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டிருக் கலாமா? படிப்புச் செலவுக்குப் பணம் கொடுக்க எ தகப்பனாரால் முடியவில்லை. அதனாலேயே ஆறு வகுப்பு வரை படித்தது போதுமென்று எனக்குத் தோன்றியது. இந்தப் படிப்பை வைத்துக்கொண்டு வசதி கிடைக்கும் போது வீட்டில் வைத்தே நானாக அறிவை அபிவிருத்தி செய்து கொள்ளலாமே! நான் இம்மாதிரி யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் என் தகப்பனாரே என்னிடம் பள்ளிக்கூடத்தை விட்டுவிட்டுத் தோட்டவேலையைக் கவனிக்கும்படி சொன்னார். நானும் சரியென்று உடனே சம்மதித்து விட்டேன். தோட்டவேலை செய்வது எனக்கு ஒன்றும் கஷ்டமாகவே தெரியவில்லை. தகப்பனார் மண் வெட்டியெடுத்து வெட்டுகிறார். நான் பாத்தி பிடிக்கிறேன். அவர் தண்ணீர் இறைத்து விடுகிறார். நான் அதை ஒவ்வொரு பாத்திக்கும் பாய்ச்சுகிறேன். இரண்டு பேருமாகச் சேர்ந்து செடியிலுள்ள புஷ்பங்களைப் பறிக்கிறோம். நான் புஷ்பங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு போய்க் கடை களில் போட்டுவிட்டுப் பணம் வாங்கி வருகிறேன். கடைக்காரர்கள் ரொம்ப அவசரமாகப் பூமாலைகள் தொடுக்கச் சொன்னால் தொடுத்துக் கொடுக்கிறேன். அவர்களும் அதற்கு ஏதாவது கூலி கொடுக்கிறார்கள். நான் சுறுசுறுப்பாகப் புஷ்பம் கட்டுகிறேன் என்று அவர்கள் சொல்கிறார்கள். சிறுபையன் பெரியவர்களைவிடச் சுறுசுறுப்பாகத் தானே இருப்பான். கடைக்காரர்களைச் சந்தோஷப்படுத் தினால்தானே அவர்கள் என்னிடம் பிரியமாக இருப்பார்கள். 

அவர்கள் சொல்வதுபோலச் செய்து அவர்களிடம் நான் கொண்டுபோகும் புஷ்பத்தின் கிரையத்தையும் என் கூலியையும் பெற்றுக்கொண்டு நேராக வீட்டுக்கு வந்தால் தாயார் சாதம் எடுத்து வைத்துக் கொண்டு எனக்காகக் காத்திருப்பாள். நான் சாப்பிட்ட பிறகு தான் அம்மா சாப்பிடுவாள். சில நாட்களில் நான் வர நேரமாகிவிடும். “ஏனம்மா நீ இன்னும் சாப்பிடாமல் ருக்கிறாய்?” என்று கேட்டால் “பிள்ளை பட்டினியாக இருந்து வேலை பார்த்துவிட்டு வருகிறது, நான் வீட்டிலேயே இருந்துகொண்டு அதற்குள் சாப்பிடவேண்டுமாக்கும்!” என்று கேட்பாள். இதற்காகவே நான் கூடியவரைக்கும் சீக்கிரமாகவே வீடு திரும்பி விடுவேன். 

சாப்பிட்டானபிறகு தங்கையோடு விளையாடிக் கொண்டிருக்க வேண்டியது தானே! சில வேளைகளில் வீட்டுக்குத் தண்ணீர் எடுத்து விடுவேன். வீட்டுச் சாமான்கள் வாங்கக் கடைக்குப் போய் வருவேன். இப்படி ஒன்றும் ஜோலி இல்லையானால் அடுத்த வீட்டு மாமாவிடம் ஏதாவது புஸ்தகம் வாங்கிப் படித்துக் கொண்டிருப்பேன். அடுத்த வீட்டு மாமாவுக்கும் அத்தைக்கும் என்மேல் ரொம்பப் பிரியம். ஒரு தின்பண்டம் செய்தால் எனக்கென்று ஒரு  தனிப்பங்கு எடுத்துவைத்து விடுவார்கள். “முருகனுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க எங்களிடம் ஒரு பெண் இல்லையே” என்றுகூட அடிக்கடி கேலியாகச் சொல்வார் கள், எனக்குத் தெரியாத விஷயங்களையெல்லாம் அடுத்த வீட்டு மாமாவிடம்தான் கேட்பேன். நான் எது கேட்டா லும் அவர் அதை விளக்கி விவரமாகச் சொல்வார். புஷ்பச் செடிகளை எப்படி வளர்த்தால் நல்ல பலன் கிடைக்கும், என்னென்ன உரம்போடவேண்டும்; எந்தெந்தக் காலத் தில் என்னென்ன புஷ்பச் செடிகளை நடலாம் என்பதைப் பற்றியெல்லாம் அவர் பல புஸ்தகங்களைப் பார்த்து எனக்கு எடுத்துச் சொல்வார். அவர் சொல்லியபடி யெல்லாம் நான் தோட்டத்தில் பரீட்சை செய்து பார்த்தேன். அதன்படி செடிகளும் நல்ல பலனளித்தன. 

கருத்தைச் செலுத்திக் கற்பதென்றால் எதையும் எளி தாகத் தெரிந்துகொள்ளலாமென்றுதான் எனக்குத் தோன் றுகிறது. பூக்கடைக்காரர்கள் கலியாண வீடுகளுக்கோ கோவில்களுக்கோ, பூ அலங்காரம் செய்யப் போகும்போது என்னையும் உதவிக்குக் கூட்டிக்கொண்டு போவார்கள். அவர்கள் பூ அலங்கார வேலை செய்கையில், நான் அவர் களுக்குப் பூமாலைகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டே, அவர்கள் செய்யும் வேலை நுணுக்கங்களைக் கூர்மையாகக் கவனித்து வருவேன். 

ஒரு நாள் கோவில் சப்பரம் ஜோடிப்பதற்காக ஒரு கடைக்காரருடன் போயிருந்தேன். அவர் பாதி அலங்காரம் முடித்துவிட்டுச் சாப்பிடப் போயிருந்தார். அவர் திரும்ப வருவதற்குள்ளாக மீதி அலங்காரத்தை நானே முடித்து வைத்தேன். அவர் வந்து பார்த்தவுடன் ஆச்சரிய மடைந்தார். இவ்வளவு வேலைத் திறமையை வைத்துக் கொண்டா இதுவரை என்னிடம் சொல்லாமலிருந்திருக் கிறாய்?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார். அன்று தான் முதல் முதலாக அம்மாதிரி நான் பூ அலங்கார வேலை யைச் செய்ய ஆரம்பித்தேன் என்று சொன்னால் அவர் நம்பவே மாட்டேனென்கிறார். 

அது முதல் அநேக விசேஷ வீடுகளில் நானும் கடைக் காரர்களுடன் சேர்ந்து பூ அலங்காரம் செய்து வருகிறேன். கிடைக்கிற லாபத்தில் அவர்கள் எனக்கும் ஏதாவது பங்கு கொடுப்பார்கள். இந்த விஷயத்தையெல்லாம் என் தகப் பனாரிடம் சொன்னால் உனக்கா இவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள்?” என்று அவர் ஆச்சரியப்படுகிறார். கூடிய சீக்கிரம் சொந்தமாகவே ஒரு புஷ்பக்கடை துவக்க வேண்டுமென்று அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தச் சமயத்தில் புஷ்ப வியாபாரத்தில் நல்ல லாபம் வரு மென்று தோன்றுகிறது. ஆனால் கையில் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டால் தானே கடை வைக்க முடியும்!

15. சாரதாம்பாள்

பொழுது விடிந்தால் சுந்தரியின் கவலை. பொழு தடைந்தாலும் சுந்தரியைப் பற்றிய கவலைதான். அந்தப் பேதைப் பெண்ணுக்கு மனசைக் கல்லாகப் படைத்து விட்டாரா கடவுள்? இன்ன இடத்தில் இருக்கிறேன் என்று ஒரு கடுதாசு போடக் கூடாதா! நான் அவ்வளவுக் குப் பாக்கியம் செய்யவில்லையா? பெற்று வளர்த்த பாவத் திற்கு எனக்கு இந்த ஆறுதலையாவது கொடுக்கக் கூடாதா? இத்தனை வருஷங்கள் ஆகிவிட்டதே! ஒருமுறையாவது என்னைவந்து பார்த்துவிட்டுப் போகக்கூடாதா? சுந்தரி, நீ எங்கு இருக்கிறாயோ? 

வடிவேலு – அவன் தலையில் இடிவிழ-எப்படியோ என் பெண்ணை மயக்கிக்கொண்டுபோய் என்னை இப்படித் திண்டாடித்தெருவில் நின்று புலம்பும்படி வைத்துவிட்டானே! என் பெண்ணை எப்படி எப்படி வைத்திருக் கிறானோ தெரியவில்லை. எப்படி வைத்திருக்கப் போகிறான்! அவளைத் தெருவில் அலைய விட்டுவிட்டு எங்கேயா வது ஓடிப்போயிருப்பான். சுந்தரி எந்தத் தெருவில் கண் ணீரும் கம்பலையுமாக நிற்கிறாளோ! பவிசோடு இருந்து அனுபவிப்பதற்கு அதிர்ஷ்டம் இருந்தும், இந்தப் பெண் இப்படிப் போய்ச் சீரழியவேண்டுமா? எல்லாம் அத தன் விதிப்படி நடக்கும் என்று அவளைப்பற்றி நான் கவலைப்படாமல் இருக்க முடிகிறதா? பெற்றமனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்பார்களே அது ரொம்பச் சரியாகத்தானிருக்கிறது. சுந்தரிக்கும் ஒரு பிள்ளை பிறந்து அது தாயைவிட்டுப் பிரிந்து ஓடிப்போனால் அல்லவா அவளுக்கு எனக்கிருப்பது போன்ற மனக்கஷ்டம் தெரியப் போகிறது. 

இந்த மாதிரி மனதுக்குள்ளாகவே நினைத்துக்கொண் டிருந்ததுபோய், என்னையறியாமலே வாய்விட்டுப் பிதற் றவும் ஆரம்பித்து விட்டேன். எனக்கே சந்தேகமாக இருந்தது, எனக்கு ஒருவேளை பைத்தியம் பிடித்துவிடுமோ என்று. கடவுளே! அந்த நிலைமை ஏற்பட்டு விடாமல் என்னைக் காப்பாற்ற வேண்டும். சுந்தரியைப் பற்றிக் கவலைப்படவேகூடாது; கோவில் குளங்களுக்குப் போய்த் தரிசனம் செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்று எத்தனையோ திட்டங்களெல்லாம் போட்டுப் பார்க்கிறேன். ஆனால் முடிகிறதா? அவளுடைய நினைப்புத்தான் முன் னுக்கு வந்து நிற்கிறது. அவளுடைய சேலை துணிமணி களைப் பார்க்கும்போதெல்லாம் அவள் நினைவு. நிலைக் கண்ணாடிக்குள் இன்னும் அவள் முகம் தெரிவது போலவே எனக்கு மனப்பிரமை ஏற்படுகிறது. சடங் கழித்தபோது எடுத்த அவளுடைய போட்டோவைப் பார்த்தால் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. எவ்வ ளவு வசீகரமான முகம். லக்ஷலக்ஷமாகப் பணம் சம்பாதிக் கக்கூடிய அழகைக் கொடுத்த கடவுள் அவளுக்கு அணு ணு வளவு மூளையை வைக்க மறந்து விட்டானே. இல்லை. சுந்தரி என்ன அறிவில்லாதவளா ! அறிவில்லாத மூட மாக இருந்தால் நாட்டியத்தையும் சங்கீதத்தையும் அவள் அத்தனை லகுவாகக் கற்றுக்கொள்ள முடியுமா ! எல்லா விதத்திலும் புத்திசாலிதான். ஆனால் இந்த விஷயத்தில் மட்டிலும் ஏனோ அவள் புத்தி இப்படிப் பாழாய்ப் போய் விட்டது. 

அவள் புத்தி அப்படிப் போயிருக்காது. அந்தப்பாவி வடிவேலுதான் ஏதோ பொடி போட்டு மயக்கி என் பெண்ணை அநியாயமாகக் கெடுத்துவிட்டான். 

இந்த நிமிஷத்தில் என் சுந்தரி வந்தாளானால் அவள் செய்த குற்றத்தையெல்லாம் நான் மன்னித்து அவள் இஷ்டப்படி இங்கேயே இருக்கும்படி சொல்வேனே. எத் தனை இடங்களுக்கு ஆள் அனுப்பி வைத்தேன். எத்தனை கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செய்தேன். எத்தனை குறிகாரர்களைக் கேட்டுப் பார்த்தேன். ஒரு துப்பும் துலங்க வில்லையே! என் வாழ் நாள் முழுதும் இப்படியே புலம் பிப் புலம்பிச் சாகவேண்டியதுதானா ! என் உடம்பும் ரொம்ப இளைத்துக்கொண்டே வருகிறது. சாப்பாடுகூட வேண்டியிருக்கவில்லை. தூக்கம்! நன்றாகத்தூங்கி எத் னையோ வருஷமாயிற்று. கனவில் சுந்தரி என்னென்ன நிலைமையிலெல்லாம் காட்சியளிக்கிறாள். 

ஒரு தடவை சுந்தரி எங்கோ ஒரு கடைமுன்னால் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தாள். இன்னொரு சமயம் வடிவேலு அவளைக் கத்தியால் குத்தப்போகிறான். சுந்தரி அலறிக்கொண்டு என்னிடம் ஓடிவருகிறாள். இப்படியாக எத்தனையோ கனவுகள். சுந்தரியைக் கனவிலாவது அடிக் கடி கண்டு மகிழ்வோம் என்று தூங்க ஆரம்பித்தால் பாவி தூக்கம் லேசில் வரமாட்டேனென்கிறது. தனியாகவே இருந்து இருந்து இந்த வீடே பாழடைந்து விட்டது போலத்தோன்றுகிறது. நாட்டியம் சங்கீதம் இதைப்பற் றிக்கூட எனக்கு இப்பொழுது சிந்தனை இல்லாமல் போய் விட்டது. என்னிடமிருக்கும் கலையை யாருக்காவது சொல்லிவைத்து விடவேண்டுமென்று ஆத்திரமாக இருக் கிறது. குஞ்சரம் கூடச்சொன்னாள் இரண்டு குட்டிக ளுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுத்து வந்தால் மனசு கொஞ்சம் நிம்மதியடையும் என்று. மனதில் தாங்கமுடி யாத கவலை கிடந்து அழுத்திக்கொண்டிருக்கையில் நான் எப்படி நாட்டியம் கற்றுக்கொடுக்க முடியும்! என் உடம்பு தளர்ந்து தள்ளாடுகிறது. மனது உடம்பைவிட அதிகமாகத் தள்ளாடுகிறது. ஒருவழியும் தோன்றவில்லை. 

அன்று ராமாயணப் பிரசங்கம் கேட்கலாமென்று போயிருந்தேன். ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போகும் கட்டத்தை பாகவதர் ரொம்ப அழகாக வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார். என் மனம் அதிலிருந்து என் னென்னவெல்லாமோ கற்பனைப் பின்னல்களைப் போட ஆரம்பித்து விட்டது. என் சுந்தரியை வடிவேலு இப்ப டித்தானே என்னிடமிருந்து அபகரித்துக்கொண்டுபோய் விட்டான். இராமனுக்கு மனைவியைப் பிரிந்த துன்பம் ஏற் பட்டது. எனக்கு மகளைப் பிரிந்த துன்பம் ஏற்பட்டிருக் கிறது. பிரிவு என்ற துன்பம் இராமனுக்கும் எனக்கும் ஒன்றுதானே! இதற்குமேல் என்னால் ராமாயண வியாக் யானத்தைக் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. எழுந்து வந்து விட்டேன். 

ஸ்ரீராமபிரான் எவ்வளவோ கஷ்டப்பட்டுக் கடைசி யாக சீதையை மீட்டுக் கொண்டு வந்தார். ஆனால் நானோ பெண்! ஆதரவற்ற கிழவி! எனக்குச் சுந்தரியைப்பற்றிய தகவல் ஒன்றுமே கிடைக்கவில்லையே. என்னதான் செய்வேன். 

ஆயிரக்கணக்காகச் சம்பாதித்தேன். எல்லோரும் மதிக்கும்படியாக இன்பவாழ்வு வாழ்ந்தேன். என் வாழ் நாள் முழுவதும் குறைவில்லாத வாழ்வு வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காகத்தானோ என்னவோ இப்படி ஒரு பெண்ணைக் கொடுத்து என்னைத் திண்டாடும்படி வைத்திருக்கிறார் கடவுள். 

தாய், பிள்ளை, உற்றார் உறவினர், வீடு, சொத்து எல் லாம் மாயை என்றுதானே நானும் கேள்விப்பட்டிருக்கி றேன். இந்த மாயை என்னை எவ்வளவு பலமாகப் பிடித்துக் காண்டு விட்டது. இந்தப் பாச வலையை உதறித்தள்ளி விட்டு இறைவனடி ஒன்றையே தியானித்துக்கொண் டிருக்கலாம் என்றால் மனத்துணிவு வரமாட்டேனென் கிறதே. ஆசாபாசங்கள் அறிவுக்கண்ணைத் திரையிட்டு விடுகிறது. நன்றாகத் தெரிகிறது நல்ல பாதை! ஆனால் இருள் சூழ்ந்த வழியில் தட்டுத் தடுமாறி நிற்கத்தான் மனம் விரும்புகிறது. இது என்ன தப்பான ஆசை! வயது முதிர முதிர மனித பாசம் விலகும் என்பார்கள். என் விஷயத்தில் மகளின் பாசம் அதிகரித்துக்கொண்டல்லவா இருக்கிறது. சுந்தரி இதுவரை என்னோடு இருந்திருந் தால் நான் மன நிம்மதியடைந்து இந்த உலக பாசத்தை ஓரளவு நீக்கியிருக்கலாம். பிரிவினால் ஆசாபாசம் பல மடங்கு பெருகி வளர்கிறது. வீடு வாசல் சொத்து எல் லாவற்றையும் வீட்டுவிட்டுப் போய்விடலாமா என்று சில சமயம் தோன்றினாலும், சுந்தரி ஒரு வேளை திரும்பி வர லாம் என்ற நம்பிக்கை வந்து மோதுகிறது. அன்று அந்த வைத்தியர் சொல்லியபடி எங்காவது யாத்திரை போய் வீட்டு வருவதுதான் நல்லது. நாலைந்து மாதம் பிர யாணம் பண்ணிவிட்டு வந்தாலாவது மனதுக்கு ஆறுதல் கிடைக்காதா? பிரயாணம் புறப்படுவதென்றால் லகுவாகவா இருக்கிறது! வீடு, நிலங்கள், மாடு, கன்று எல்லாவற்றை யும் யாரிடமாவது பொறுப்பாக ஒப்படைக்க வேண்டும். இந்த வயதில் தனியாகப் பிரயாணம் போவதென்றால் கஷ்டமாகத்தானிருக்கும். கூடத் துணைக்கு யாரையேனும் அழைத்துச்செல்லவேண்டும். போகிற இடங்களில் தங்கு வதற்கு எல்லா வசதியும் கிடைக்குமோ என்னவோ ! இதெல்லாவற்றிற்கும் ஏகப்பட்ட பணம் கையிலிருக்க வேண்டும். 

பணம் செலவழிந்தால்தான் என்ன! நான் தேடிய பணத்தைத்தானே செலவழிக்கப் போகிறேன். இப் படியே இருந்து சுந்தரி சுந்தரியென்று வீணாகக் கதறி உயிரை விடுவதைவிடப் பல ஸ்தலங்களைத் தரிசித்துவிட்டு வருவது நல்லதுதானே! எல்லாவித சௌகர்யங்களையும் செய்துகொண்டு ஸ்தல யாத்திரை போய் வரவேண்டியது தான்.

– தொடரும்…

– வளர் பிறை (நவீனம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1946, கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை ஸ்டேட்.

சிற்பியின்-கனவு சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *