வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2026
பார்வையிட்டோர்: 61 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிவராமன், வயது 65, கூடத்தில் அமர்ந்து அன்றைய நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தார்.

“என்ன சிவராமா, எப்படி இருக்கே”? என்று கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் நண்பர் சுந்தரராமன்.

வீட்டில் நுழைந்தவர் கூடத்தில் மாட்டியிருந்த சுவர் கடிகாரத்தைப் பார்த்து, “என்னப்பா, கடிகாரம் இருபது நிமிடம் தாமதமாக ஓடிக்கிட்டிருக்கு?” என்றார்.

“ஒன்னுமில்லை. என்னுடைய கடிகாரம் கொஞ்சம் சோம்பேறி. சுறுசுறுப்பு போதலை. அதனால வேலையை மெதுவா செய்யறது” என்றார் சிவராமன்.

“வேலை செய்யாம சப்பைக் கட்டு கட்டறதை நீ இன்னும் விடலையா? கடிகாரத்தோட பேட்டரியை மாத்தக் கூடாதா?” என்றார் சுந்தரராமன்.

“பேட்டரி மாத்தறதுக்கு ஐயாயிரம் ரூபாய் செலவாகும். நீ தரதாயிருந்தா சொல்லு, இப்பவே மாத்திடறேன்”

“என்ன ஆச்சு உனக்கு காலங்கார்த்தால, புதுசா குடிப் பழக்கம் ஆரம்பிச்சு இருக்கியா என்ன. இப்படி உளர்ற?”

“இப்படித்தான் ஒரு வருஷம் முன்னாடி, என்னோட சகதர்மணி, கடிகாரம் மெள்ளமாப் போறதே. எடுத்து பேட்டரி மாத்தக் கூடாதா? அப்படி என்ன வெட்டி முறிக்கீறீங்க? அப்படின்னு கேட்டாள்.

“மேலிடத்து உத்தரவு, மீற முடியுமா? முக்காலிமேலே ஏறி கடிகாரத்தை எடுத்து பேட்டரி மாட்டினேன். கீழே இறங்கும் போது கால் தடுக்கி கீழே விழுந்தேன். எங்க டாக்டர், அவருக்குத் தெரிந்த எல்லா டெஸ்ட்டையும் பண்ண வைச்சார். அப்புறம், உங்க நல்ல காலம், எலும்பு முறிவு இல்லை. ஆனால் இரண்டு மாதம் கம்ப்ளீட்டா படுக்கைதான். நடக்கக் கூடாது அப்படின்னு உத்தரவு போட்டார். டாக்டா ஃபீஸ், டெஸ்ட்டுக்கு, ஆம்புலன்ஸ், மருந்துகள் அப்படின்னு செலவு ஐந்தாயிரம் ரூபாய். பேட்டரி மாத்தாமலே இருந்திருக்கலாம்.” என்றார் சிவராமன்.

– தமிழ்நாடு இ-பேப்பர்.காம்

கே.என்.சுவாமிநாதன் பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *