வடக்கும் தெற்கும்
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,284
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
வடக்கே இமயமலை. விண்ணைத் தொடும் வண்ண மலை அது. அங்குள்ள சுனையிலுள்ள குவளை மணக்கும். மான்கள் நரந்தம் புல்லை மேயும். சுனையில் நீர் பருகும். பெண் மானோடு விளையாடும்.
அதற்கு இணையாக தெற்கே இருப்பது ஆய் நாடு. வடக்கே இமயமும் தெற்கே ஆய்நாடும் இல்லாவிடில் உலகமே நிலை கலங்கிவிடும்.
அத்தகைய நாட்டின் மன்னன் தான் ஆய். கொடையில் முதலிடம் அவனுக்கு. அவனைத்தான் முன்னர் நினைக்க வேண்டும் அப்படிச் செய்யாத உள்ளம் ஆழ்ந்து போக வேண்டும். அவனையே பாடாத நாக்கு பிளக்கப்பட வேண்டும். அவன் புகழ் கேளாத காது துர்க்கப்பட வேண்டும்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே….
கே.என்.சுவாமிநாதன்
September 3, 2026
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026