திருவிழா நாடகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – திருவிழா நடந்திருக்கு. திருவி ழால்ல, அந்த ஊர்ல நாடகம் போட்டிருக்காங்க. நாடகத்ல, மொதல்ல ஒரு கோமாளி வருவர். அவ் எப்டி வருவாண்டா! வந்திட்டே! வந்திட்டே! வந்திட்டே! வந்திட்டேண்டு வருவா. 

கூட்டம்ண்டா கூட்டம், எக்கச்செக்கமான கூட்டம். பலரும் பலவி தமா வந்திருப்பாங்கள்ல. நல்லவங்களும் வந்திருப்பாங்க. கெட்டவங்களும் வந்திருப்பாங்கண்டு நெனச்சு, ஐயா! இது நல்ல நாடகம். எல்லாரும் அமதியா ஒக்காந்து பாக்கணும். எந்தக் காரணத்தக் கொண்டும், செரங்கு வந்தவக செரங்கு சொறியப்படாது. செரங்கு சொறிஞ்சால், அடுத்தவக மேல, கையில காலுல படும். யாருஞ் செரங்கு சொறியப்படாது. 

அடிக்கடி மூக்கு சிந்திரவங்க, யாரும் கூட்டத்ல மூக்குச் சிந்தப்படாது. மூக்குச் சிந்தினால் அது அடுத்தவக மேல படும். சண்ட வந்திரும். யாரும் கூட்டத்ல மூக்கு சிந்தப்படாது. 

கொசுகரிக்கிற கண்ணுக்காரு யாரும் இருந்தா, கூட்டத்ல கொசுகடிக்கப்படாதுண்டு சொல்லிட்டு, போறே! போறே! போறே – ண்டு சொல்லிட்டுப் போயிட்டா. 

நாடகம் பாக்கயில, இந்த மூணு வேரும் ஒரே எடத்ல வருசயா ஒக்காந்திருக்காங்க. நாடகம் முடியுறவரைக்கும் செரங்கு சொறியாமல், மூக்குச் சிந்தாமல், கொசு கடிக்காமல் இருக்க முடியுமா? முடியல. அங்க நாடகம் நடந்துகிட்டிருக்கு. 

செரங்கு வத்தியா பாத்தா. அவனால செரங்கு சொறியாமல் இருக்க முடியல. பக்கத்ல் இருந்தவனக் கூப்ட்டு, அண்ணே! எங்க கொளத்ல, கொளத்து வெள்ளரிநட்டு, ஒரொரு காயும், இம்மந்தெண்டி – இம்மந்தெண்டி இம்மந்தண்டி – ண்டு கையத் திருகித் திருகிக் காமுச்சு. அரிப்பத் தீத்துக்கிட்டா. 

அதுக்குங்குள்ள மூக்கருச்சானுக்கு மூக்கு ஒளிகிருச்சு. கூட்டத்ல் யாரும் மூக்குச் சிந்தக் கூடாதுண்டு சொல்லி ருக்கான்ல, அதுனால, அவ என்னா செஞ்சா, இதென்னாணே பிரமாதம், எங்க பக்கத்து வீட்டுக்ார ஒரு செம்பிலிக்கெடா வளக்குறா. அதுக்குக் கொம்பு இப்டித் திருகிருக்கு இப்டித் திருகிருக்குண்டு கைய மூஞ்சில வச்சுக் காமுச்சு, அவ் மூக்ககத் தொடச்சுக்கிட்டா. 

அதுக்குங்குள்ள, கொசு அரிச்ச கண்ணன் என்னா செஞ்சா. போணே! இதெல்லாம் பொய்யி இதெல்லாம் பொய்யிண்டு கைய மூஞ்சிக்கு நேரா அடிச்சுக் காமுச்சு, கண்ணுல ஆஞ்சிகிட்டிருந்த கொசுகுகள வெரட்டிட்டா. 

இப்டி, மூணுவேரும் நாடக பாத்ட்டு வீட்டுக்கு வந்தாங்களாம். எப்டி? தந்திரமா செஞ்சிறுக்காங்க. 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *