விருந்தாடி
கதையாசிரியர்: வீ.அய்யனார்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 2
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊர்ல, ஒரு குடும்பம் இருந்திச்சு. அந்தக் குடும்பத்ல ஒரு நாயி இருந்திச்சு அந்த நாயிக்குப் பேரு குடும்பியப்புடி. அவனுக்குப் பேரு சட்னி. அவ் பொண்டாட்டிக்குப் பேரு இட்லி, மாட்டுக்குப் பேரு விருந்தாடி.
இப்டி ஒரு குடும்பம். அந்த ஊர்ல, அந்த வீட்டுக்கு எப்பயும் நல்ல மரியாத இருக்கும். நாலு பேரு வருவாக போவாக.
இப்டி இருக்கயில, ஒருநா, இவ், காட்ல உழுதுகிட்டிருக்கா உழுதுகிட்டிருக்கயில, அவ் மருமகன், அந்த வழியா மாமன் ஊருக்கு வாரர். வரயில, மாமன் உழுகுறதப் பாத்திட்டு, உழுகுற எடத்துக்குப் போனா. போகவும், வாங்க மருமகனே. எப்ப வந்தீங்கண்டு கேட்டா. கேக்கவும், இப்பத்தா வந்தேண்டு சொன்னா. சொல்லவும், வீட்டுக்குப் போங்க, இட்லி இருக்கு சாப்டுங்க. வந்திர்றேண்டு சொன்னா. சொல்லவும், இட்லி கிட்லி சுட்டுருப்பாங்க போல, அதா, மாமன் சொல்றாருண்டு நெனச்சுக்கிட்டு, வீட்டுக்குப் போனா.
அங்க மாமியா, வாங்க மருமகனே, ஒக்காருங்க சட்னி வரட்டும் சாப்டலாம்ண்டு சொல்றா அப்ப, இவ என்னா நெனக்கிறா, இட்லி வீட்ல இருக்கு போல, சட்னி வாங்கப் போயிருக்காங்க, வரட்டும், ஒரு பிடி பிடிச்சிரலாம்ண்டு நெனக்கிறா. என்னத்த ஒரு பிடி பிடிக்ப் போறானாம்? இட்லி யத்தா! வேறென்னத்த.
ஒக்காந்திருக்கயில, மாமன் உழுதிட்டு வந்தா. அப்ப மாடுக, பசில, தீவனமில்லாமல் உழுததுக இல்ல. வீட்டுக்கு வரவும், அங்கிட்டும். இங்கிட்டும் ஓடுதுக. ஓடி, தீவனத்த ராவதுக.
அப்ப, மாமன் என்னா செஞ்சா, மாடுக ஓடுறப் பாத்துட்டு, “விருந்தாடியப் புடிச்சுக் கட்டுங்க, விருந்தாடியப் புடுச்சுக் கட்டுங்க”ண்டு சத்தம் போட்டா. சத்தம் போடவும், இவ் என்னா நெனக்கிறா. வீட்ல இட்லி இருக்குண்டு மாமன் சொன்னா. சட்னி வரட்டும் சாப்டுவீங்கண்டு மாமியா சொன்னா. இப்ப என்னாண்டா, விருந்தாடியப் புடிச்சுக் கட்டுங்கண்டு சொல்றா. நம்ம தான விருந்தாடி. நம்மளத்தே புடிச்சுக் கட்டச் சொல்றாங்கண்ட்டு ஓட்டம் எடுத்திட்டா.
இவ ஓடுறதப் பாத்திட்டு, வீட்ல இருந்த நாயி, அதா குடும்பி, லொள் லொள்ண்டு கொலச்சுக்கிட்டு வெரட்டி ஓடுது. வெரட்டி ஓடவும், மருமனக் கடிக்கப் போகுதுண்ட்டு, மாட்டப் புடிச்சுக் கட்டிக்கிட்டிருந்தவ், ஏ… புள்ள மருமகன வெறட்ர குடும்பியப் புடி-குடும்பியப் புடிண்டு சத்தம் போட்டா.
சத்தம் போடவும், இதென்னாடா வம்பாப் போச்சு, நம்மள வெரட்டிக் குடும்பியப் புடிக்கச் சொல்றாங்கண்டு நெனச்சு, ஒரேயடியா ஓடி, வீட்ல போயி, நிண்டுதா திரும்பிப் பாத்தானாம்.
சிரிப்புக்காக, இப்டி ஒரு கத ஊரு ஒலகத்ல சொல்லிக்கிருவாங்க.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.
தொடர்புள்ள சிறுகதைகள்
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
வக்கணை
வீ.அய்யனார்
August 9, 2026
பங்கு – பாகம்
வீ.அய்யனார்
August 9, 2026