ஔவியம் பேசேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 87 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கம், நடனம் என்று இரண்டு பிள்ளைகள் படித்து வந்தார்கள். தங்கம் தங்க பையன். தன்னுடைய படிப்பிற்காகவும், குணத்திற்காகவும் பல பரிசுகள் வாங்கி யிருக்கிறான். 

நடனம் பொல்லாத பொறாமைக்காரன். தங்கம் பரிசு வாங்கியதை அவனுகுப் பொறுக்க முடியவில்லை. எப்படியாவது தங்கத்திற்குக் கெட்டப் பேர் வாங்க வைக்க வேண்டும் என்று எண்ணினான். அதற்காக அவன் மேல், இல்லாததும் பொல்லாததுமாகப் பல கோள் சொல்லி வந்தான். 

ஒருநாள் காலையில் நடனம் பள்ளிக்கூடத்திற்குப் போனான். தன் புத்தகத்தைத் தானே சுக்கல் சுக்கலாய்க் கிழித்தான். தங்கம் கிழித்துவிட்டு ஓடிப் போனதாக உபாத்தியாயரிடம் பொய் சொன்னான். உண்மையில் தங்கம் அன்றைக்குப் பள்ளிக்கூடமே வரவில்ல. 

அச்சமயம் தங்கத்தின் தகப்பனார் வந்தார். “இராத்திரி லிருந்து சுரம் அடிப்பதால் தங்கம் படுத்த படுக்கையில் இருக்கிறான். இன்றைக்கு அவனுக்கு விடுமுறை கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். 

உடனே உபாத்தியாயர், “தங்கம் புத்தகத்தைக் கிழித்ததாகப் பொய் சொன்னதற்காக நடனத்திற்குத் தண்டனை கொடுத்தார். புத்தகம் கிழிந்து போனதற்காக அவன் தகப்பனாரும் நன்றாக அடித்தார். நடனம் தங்கத்தின் மேல் பொறாமையாகப் பேசியதால் புத்தகத்தையும். இழந்தான். தண்டனையும் பெற்று வருந்தினான். (ஆகையால்) 

பொறாமை பேசினால் தனக்கே கெடுதி வரும். 

எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *