எது வரம்
கதையாசிரியர்: ஜி.விஜய்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 15, 2026
பார்வையிட்டோர்: 117

பிள்ளைகள் வேண்டும் பெற்றோருக்கு கருவாய் உதித்தல் வரம்.
கரு உருவான நாள் முதல் குழந்தையாய் வெளிவரும் நாள் வரை நல்ல ஆரோக்கியத்துடன் தாயின் கர்ப்பத்தில் தங்க முடிவது வரம்.
கருவுற்ற நாள் முதல் நம்மை பேணிக்காக்கும் பெற்றோர் கிடைப்பது வரம்.
சுயமாக இவ்வுலகில் அந்த குழந்தை காலூன்றும் வரை பெற்றோர் இருவரும் உடன் இருந்து குழந்தையை வளர்ப்பது வரம்.
சிறுவயதில் கல்வி அறிவு பெறுவது வரம்.
சொந்த வீட்டில் பிறப்பது வரம்.
பெற்றோருக்கு அந்த குழந்தைகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மேலாக செல்வம் அமைவது வரம்.
தொழில் காரணங்களால் குழந்தைகளை பிரியவேண்டி வராமல்
இரு பெற்றோரும் உடனிருந்து அக்குழந்தையை கவனிப்பது வரம்.
அந்தக் குழந்தை தேர்ந்தெடுக்கும் பாதையை அனுமதிக்கும் பெற்றோர் கிடைப்பது வரம்.
நல்ல பள்ளி, ஆசிரியர்கள் கிடைப்பது வரம்.
தந்தை வழி தாய் வழி நல்ல உறவுகள் கிடைப்பது வரம்.
நல்ல உடன்பிறப்புகள் கிடைப்பது வரம்.
சிறுவயதில் ஒரே ஒரு நல்ல நண்பனாவது கிடைப்பது வரம்.
மேற்படிப்பு வரை படிக்கும் வாய்ப்பு வரம்.
தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரிலேயே ஒரு வேலையோ ஒரு சுய தொழிலோ செய்ய முடிவது வரம்.
காதல் வரம்.
தன்னுடைய துணையை தானே தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் பெற்றோர் கிடைப்பது வரம்.
இரு வீட்டார் சம்மதத்துடன் அந்த காதல் திருமணத்தில் முடிவது வரம்.
தன்னைப் புரிந்து வாழ்க்கை துணை அமைவது வரம்.
இளமையில் எந்த கொடிய வியாதிகளும் அண்டாது இருப்பது வரம்.
தன் பெற்றோர் உடலை வருத்தாமல் சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் வரம்.
தன்னுடைய குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வரை தன் பெற்றோர் நலமாக இருப்பது வரம்.
உதவி செய்யும் உறவினர்கள் வரம்.
எந்த விபத்திலும் சிக்காமல் வயதான காலத்தை அடைவது வரம்.
வயதான காலத்தில் உற்ற துணையுடன் நேரம் செலவிடும் வாய்ப்பு வரம்.
எல்லா கடமைகளும் முடித்து வயதான காலத்தில் வரும் மரணம் வரம்
மரண நேரத்தில் உற்றத் துணையின் கைகளை பிடித்துக் கொண்டு குடும்பத்தாரும் உற்ற உறவினர்களும் உற்ற நண்பர்களும் சூழ அவர்களுடன் உரையாடி விடை பெற்று செல்லும் வாய்ப்பு வரம்.