ரயில் செல்வியும்… WAP 7 என்ஜினும்…
கதையாசிரியர்: உரு.வளவன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2026
பார்வையிட்டோர்: 142

“தண்டவாள தியாகங்கள்”
அப்பா விழுப்புரம் ரயில்வே சந்திப்பு வந்துட்டு, என்று சொன்னாள் ரயில்செல்வி.
இங்க நல்ல சமோசா கிடைக்கும், வாங்கியாறேன் என்று சொல்லி இறங்கினார் ரயிலரசன்.
நீங்க கேக்குறதுக்கு முன்னாடியே சொல்லிடுறேன். பேரெல்லாம் தண்டவாளத்துல ஓடற மாதிரி இருக்கே? அப்படின்னு நீங்க யோசிக்கிறது, எனக்கு கேட்டுட்டு சார்.
அதாவது அப்பா ரயிலரசன், இந்தியாவிலேயே ரயில் எப்படி இருக்கும் என்று தெரியவே தெரியாத ஊர்கள் சில இருக்கு இல்லையா? அப்படிப்பட்ட ஊர்களில் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர்.
அப்படிப்பட்ட ஊரிலிருந்து ஒருவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்து விட்டார். அவர் எப்போதாவது விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது, ராணுவ சீருடையில் கம்பீரமாக வருவார். அவர் தூக்கிக்கொண்டு வரும் பெரிய பெட்டி, படுக்கைகளை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். அவர் வந்தால், ஊரில் எல்லோரும் மிலிட்டரி தம்பி என்று மரியாதை கொடுப்பார்கள். அவர் நல்ல முறுக்கிய மீசை, மழமழவென்று சவரம் செய்து ஓட்ட நறுக்கிய தலைமுடியுடன், உடல் வலுவுடன் இருப்பார். அவரைச் சுற்றி ஒரு இளைஞர் பட்டாளம் இருக்கும். அவர் நிறைய சாகச கதைகளை சொல்வார். அவர் புறப்பட்டு ஒரு வாரம் ரயில் பயணம் செய்து நம்ம ஊருக்கு வந்ததாக சொல்வார். அதுவும் மூன்று ரயில்கள் மாறி வந்ததாக சொல்லும் போது, நம் கதாநாயகனுக்கு மனதில் புகைவண்டி ஓடும் சத்தம், தொடர்வண்டி நகரும் சத்தம், இரயில் ஓடும் சபதம் என்று மாறி மாறி ஓடும். அதுவும், சினிமாவில் ரயில் காட்சிகள் வரும் போதும், அதில் ஒன்றிப்போய், சேர்ந்தால், ரயில்வே வேலையில் சேர வேண்டும் என்று தனது பெயரை ரயிலரசன் என்று வைத்துக் கொண்டார். ஆனால், இவரது துரதிர்ஷ்டம், இவரால் ரயில்வே வேலையில் சேர முடியவில்லை. அதன் பின் இவர் இந்திய ரயில்வே துறையை பற்றி ஆராய்ச்சி செய்யாத குறையாக, ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தார்.
ஒரு காலகட்டத்தில், வீட்டில் ஏதாவது விற்ற பணம் வந்தால், அதை எடுத்துக் கொண்டு, ஊர் ஊராக ரயில் பயணம் செய்து வருவது, இவரது வாடிக்கை. இப்படி இருந்த இவருக்கு ஒரு ரயில் சினேகிதி கிடைத்தாள். அவளும் இவரைப் போலவே, ரயில் பைத்தியம். அவள் பெயர் ரயிலரசி. அந்த பேர் ஒன்றே போதும் என்று, ஒற்றைக் காலில் நின்று அவளை மணமுடித்து, வீட்டிற்கு அழைத்து வந்தார்.
வீட்டார்கள் அவரை துடைப்பதுடன் வரவேற்றனர். இரண்டு ரயில்களும் கவலைப்படவே இல்லை. அவர்கள் புறப்பட்டு ரயில் பயணம் செய்து, ஒவ்வொரு ஊராக பயணித்து, கிடைத்த வேலையை செய்து, ஒரு பெண் குழந்தையை பெற்றனர். அந்த குழந்தை தான் ரயில்செல்வி.
இந்த ரயில் குடும்பம் மறுபடி தங்கள் பெற்றோர் சமாதானம் ஆன பிறகு, தண்டவாளங்கள் தடம் மாறியது போல, ஒன்று சேர்ந்தனர்.
ஆனால், அவர்களின் ஒரே இலக்கு ரயில்செல்விக்கு, ரயில்வேயில் ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என்பது தான். இவர்களின் விருப்பத்திற்கேற்ப ரயில் செல்வியும் நன்கு படித்தாள். சென்னையில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்த்து விட்டார் ரயிலரசன். அதில் பயின்று வேலைக்கு விண்ணப்பம் செய்து எழுத்து தேர்வு முடித்து, ரயில்வே லோகோ பைலட் வேலைக்கு, அடுத்த நாள், நேர்முகத் தேர்வு நடக்க இருந்தது. அங்கே தான் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
வழியில் விழுப்புரத்தில் சமோசா சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது, ஒரு ரயில் எதிர் திசையில் சென்றது. அப்போது செல்வி கேட்டாள், அப்பா, அது WAP 7 என்ஜின் தானே என்று?
ஆமாம்மா..! WAP-7 எஞ்சின் தான் இந்திய ரயில்வேயின் மிக சக்திவாய்ந்த மின்சார தொழில்நுட்ப எஞ்சின் ஆகும். இது ஒரு தனித்துவமான எஞ்சின் (Locomotive) ஆகும். ரயிலின் முன்னால் நின்று, பின்னால் இருக்கும் அனைத்து பெட்டிகளையும் (Coaches) இது இழுத்துச் செல்லும். இதன் அதிகபட்ச வேகம் 140 கி.மீ/மணி. இதன் ஆற்றல் 6,350 குதிரைத்திறன் (HP), என்றார் ரயிலரசன்.
அப்படின்னா, வந்தே பாரத் ரயில் எஞ்சின்? இன்னும் வேகமா போகுதே? என்று கேட்டாள் ரயில்செல்வி.
நல்ல கேள்வி கேட்ட, மகளே.!
WAP-7 எஞ்சின், ஒரு தனித்துவமான எஞ்சின் (Locomotive) ஆகும். ரயிலின் முன்னால் நின்று, பின்னால் இருக்கும் அனைத்து பெட்டிகளையும் (Coaches) இது இழுத்துச் செல்லும்.
ஆனால், வந்தே பாரத் ரயிலுக்குத் தனி எஞ்சின் கிடையாது. இது ஒரு சுய-இயக்க தொழில்நுட்பம் கொண்ட (Self-Propelled / Distributed Propulsion Technology) ரயில் அமைப்பாகும். இந்த ரயிலுக்கு ஆற்றல் ரயிலின் நீளம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது (Distributed Power). 16 பெட்டிகளில், 8 பெட்டிகளின் அடியில் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் மோட்டார்கள் இருப்பதால், மிகக் குறைந்த வினாடிகளில் அதிவேகத்தை எட்டும் (High Acceleration). பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 52 வினாடிகளில் தொட்டுவிடும். இதன் செயல்பாட்டு வேகம் 160 கி.மீ/மணி. 16 பெட்டிகள் கொண்ட ரயிலின் ஒட்டுமொத்த ஆற்றல் திறன் சுமார் 9,010 குதிரைத்திறன் (HP) ஆகும்.
அப்பா..! அப்போ எது நல்லது.
இரண்டுமே நல்லது தான்.
WAP-7 எஞ்சின் பொருத்தப்பட்ட ரயிலில் ஒரே ஒரு எஞ்சின் மட்டுமே இருப்பதால், அதில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் ஒட்டுமொத்த ரயிலுமே வழியில் நின்றுவிடும்.
அதேசமயம், வந்தே பாரத் ரயிலில், பல மோட்டார்கள் பகிர்ந்து பொருத்தப்பட்டுள்ளதால், ஒரு பெட்டியில் கோளாறு ஏற்பட்டாலும், மற்ற பெட்டிகளில் உள்ள மோட்டார்கள் மூலம் ரயில் தொடர்ந்து பயணிக்க முடியும்.
அப்படின்னா, நம்ம இந்திய ரயில்வே துறையில் அதிக குதிரைத்திறன் உள்ள ரயில் வந்தே பாரத் தானே அப்பா, என்று கேட்டாள் ரயில்செல்வி.
பயணிகள் ரயிலில் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இருந்த போதிலும், இதுவரை, சிறந்த பயணிகள் எஞ்சின் (Conventional Passenger) என்ற பெயரை WAP-7 தக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால், 6,350 குதிரைத்திறன் (HP) ஆற்றல் கொண்டது. ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற இந்தியாவின் முன்னணி அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்களை இழுக்க, இதுவே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. 24 பெட்டிகள் கொண்ட கனமான ரயிலைக்கூட மணிக்கு 130-140 கி.மீ வேகத்தில் சீராக இழுத்துச் செல்லும் நம்பகத்தன்மை வாய்ந்தது.
நீ கேட்ட கேள்விக்கு பதில், இந்தியாவின் மிக சக்திவாய்ந்த எஞ்சின் WAG-12B என்ஜின் தான். இது 12,000 குதிரைத்திறன் (HP) கொண்ட இந்தியாவின் அதிபயங்கர “பீஸ்ட்” (Beast) எஞ்சின் ஆகும். மிகக் கனமான சரக்கு ரயில்களை (6,000 டன்களுக்கும் மேல்) இழுக்கப் பயன்படுகிறது, என்றார் ரயிலரசன்.
ஆமாம் அப்பா. சிலசமயம், லெவல் கிராஸ் கேட் மூடப்பட்டு இருக்கும் போது, இந்த என்ஜின் பொருத்தப்பட்ட சரக்கு இரயில் ஒரு இடத்தை கடக்க 30-40 நிமிடங்கள் ஆகும், என்றாள் செல்வி.
இவ்வாறு, இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது ஒரு சில மணித்துளிகள் மவுனமாக இருந்தார் ரயிலரசன். என்னப்பா, திடீரென்று மௌனமாயிட்டீங்க, என்று கேட்டாள் ரயில்செல்வி.
உங்க அம்மா நினைவு வந்துட்டுது செல்வி. அவள் அங்க வீட்டை எதிர்த்து, என்னை கல்யாணம் செய்துகிட்டு என்கூடவே பயணம் செய்தாள். நீ பிறக்கும் வரை, எங்க வீட்டிலேயும் சேத்துக்கல. இப்படி எத்தனை பெண்கள் ரயில் இன்ஜின் மாதிரி இந்த குடும்ப பாரத்தை இழுக்கிறாங்க இல்ல, என்றார் ரயிலரசன்.
அது எப்படிப்பா? எனக்கு புரியல, என்றாள் செல்வி.
ஒரு சில பெண்கள் தனியாக அவங்க குடும்ப பாரத்தை இழுக்குறாங்க, WAP-7 எஞ்சின் மாதிரி, ஒரே என்ஜின் எல்லா பெட்டிகளையும் இழுக்குது இல்ல. அப்புறம் புருசன் கூட குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு தானும் வேலைக்குப்போய் குடும்பத்தையும் பார்த்துக்குறவங்க, வந்தே பாரத் எஞ்சின் மாதிரி, இந்த ரயிலுக்குத் தனி எஞ்சின் கிடையாது, Distributed Power, கணவன் மனைவி இருவரும் குடும்ப பாரத்தை சுமப்பதால், ஒரு சீரான வளர்ச்சி இருக்கும். நடுவில் நிக்காது, வந்தே பாரத் ரயிலில், பல மோட்டார்கள் பகிர்ந்து பொருத்தப்பட்டுள்ளதால், ஒரு பெட்டியில் கோளாறு ஏற்பட்டாலும், மற்ற பெட்டிகளில் உள்ள மோட்டார்கள் மூலம் ரயில் தொடர்ந்து இயங்கும் இல்லையா? அப்படித்தான், என்றார் ரயிலரசன்.
அப்படின்னா, நம்ம “பீஸ்ட்” (Beast) எஞ்சின் யாருப்பா? கேட்டாள் ரயில்செல்வி. அவங்கதான்ம்மா, உண்மையிலேயே, பாவம், தங்களோட குடும்பம், மாமனார் குடும்பம், பொறுப்பில்லாத புருஷன், அவங்களோட புள்ள குட்டிங்க, எல்லோரையும் காப்பாத்த 24 மணி நேரமும் உழைச்சு கிட்டே, பல சரக்கு பெட்டிகளை சளைக்காமல் இழுத்துக் கொண்டே இருப்பவர்கள், WAG-12B என்ஜின் போன்றவர்கள். இவர்கள் உழைப்பும் தியாகமும் இந்த “பீஸ்ட்” (Beast) எஞ்சின் சேவை போல, யாருமே கண்டுக்கிறதில்ல, என்றார், ரயிலரசன்.
ஆமாம்பா, சிலரின் வாழ்க்கை, இந்த ரயில் என்ஜின்கள் கூடவே ஒத்துப்போகிறது இல்லையா? என்றாள் ரயில்செல்வி.
இவர்களின் சம்பாஷணையை அமைதியாக, மேல் பெர்த்தில் படுத்திருந்த ஒரு வட நாட்டவர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் ஒரு புன் சிரிப்பை உதிர்த்து விட்டு படுத்துக் கொண்டார்.
மறுநாள், காலையில், ரயில்வே பணியாளர் தேர்வாணையம் சென்றனர், ரயிலரசனும், ரயில்செல்வியும்.
செல்வி உள்ளே சென்ற பின், ஒரு மரத்தடியில் அமர்ந்தார் அரசன். அப்போது, ஒரு கார் வந்தது. அதில் வந்து இறங்கிய நபரை, எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துக் கொண்டே இருந்தார் ரயிலரசன்.
அவர் உள்ளே சென்று விட்டார். நேர்முகத்தேர்வு அறையில் மூன்று அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் நடுவில் இருந்த முக்கியமான அதிகாரி, ரயில்செல்வியைப் பார்த்துக் கேட்டார். நேற்று உன்னோடு ரயிலில் பயணம் செய்த உன் தந்தையாரை கூப்பிட முடியுமா என்று கேட்டார்.
ஏன் சார். அவர் ஏதும் தப்பு பண்ணிட்டாரா? என்று பதட்டத்துடன் கேட்டாள் ரயில்செல்வி.
இல்லை. நீ இரு.
காலிங் பெல் அடித்தார். கடைநிலை ஊழியர் வந்தார். மரத்தடியில் ரயில்செல்வியின் அப்பா இருக்கார். அவரை கூப்பிடுங்க என்றார்.
செல்வி பயந்து நடுங்கி விட்டாள்.
அதே நடுக்கத்துடன், ரயிலரசன் உள்ளே நுழைந்தார்.
நேத்து மேல் பெர்த்துல இருந்தவர் இவர் தானே! நாம் ஒன்னும் தப்பா சொல்லலையே! என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.
அப்போ அந்த அதிகாரி கேட்டார்.
ரயில்வேயின் மூத்த அதிகாரிகளுக்கே தெரியாத தகவல்களை நீங்கள் எப்படி தெரிந்து வைத்துக் கொண்டு, உங்கள் மகளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள், என்று கேட்டார்.
தன்னுடைய சொந்தக்கதையை சொன்னார், ரயிலரசன்.
நீங்கள் கவலைப் பட வேண்டாம். உங்கள் மகள், எந்த ரயில் ஓட்ட வேண்டும் , என்று கேட்டார் அதிகாரி.
அய்யா, நீங்க ட்ரெய்னிங் கொடுத்து அதன் பின் முடிவெடுத்து செய்யுங்க. என் விருப்பத்துக்கு செய்ய முடியமா? பொதுமக்களுடைய உயிர் அந்த லோகோ பைலட் கையில் இருக்கு சார், என்றார்.
Excellent. You are selected. என்று சொன்னார் அந்த அதிகாரி.
மற்ற இரு அதிகாரிகளும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.
நான் பிறகு சொல்கிறேன், என்று சொல்லிவிட்டு, இவர்களை போகச் சொன்னார்.
அந்த அதிகாரி சொன்னார். தன வேலையை உயிரினும் அதிகமாக நேசிக்கும் ஒரு சிலர் தான் நம் நாட்டில் இருக்கிறார்கள். அந்த ஒரு சிலரில், இந்த ரயில்செல்வியின் குடும்பமும் ஒன்று. இவர்களைப் போன்றவர்களால் தான் நம் நாட்டை காப்பாற்ற முடியும், என்றார் அந்த அதிகாரி.
அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு, செய்தித்தாள்களை புரட்டிய அந்த அதிகாரி முகம் மலர்ந்தார். “வந்தே பாரத் ரயில் இயக்கும் ரயில்செல்வி” என்று செய்தி வந்தது.
தொடர்புள்ள சிறுகதைகள்
ராப்பிச்சை
மா.வீ.தியாகராசன்
September 12, 2026
மரணம் நம்மைப் பிரிக்கும் வரை
இரா.துரைமாணிக்கம்
September 12, 2026
புயலில் சிக்கிய பூக்கள்..!
காரை ஆடலரசன்
September 12, 2026