வைகறைத் துயில் எழு
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 8
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு குக்கிராமத்தில் ஒரு வீட்டில், பொன்னன், பொடியன் என்று இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். பென்னன் மூத்தவன். முழுச் சோம்பேறி. காலையில் எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பான். பொடியன் இளையவன். விடியற்காலம் ஐந்து மணிக்கே எழுந்து விடுவான். கைகால் கழுவிக் கடவுளேத் தொழுவான். பாடங்களைப் படிப்பான். எட்டு மணிக்கெல்லாம் பள்ளிக்கூடம் போய் விடுவான்.
ஒருநாள் விடியற்காலயில் அவர்களின் தாய் தந்தையர் பட்டணம் பார்க்கப் புறப்பட்டார்கள். பொன்னனை எழுப்பினார்கள், எழந்திருக்கவில்லை. பொடியினை மட்டும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். பொன்னன் எழுந்து ஏமாந்து போனான்.
மற்றொருநாள் பள்ளிக்கூடத்தில், காலை எட்டுமணிக்குத் திடீரென்று அதிகாரி வந்துவிட்டார். பிள்ளைகளைப் பார்வையிட்டார். எல்லாம் பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு கதைப் புத்தகம் இனாம் கொடுத்துவிட்டுச் சென்றார். பொன்னன் அப்போதுதான் தூக்கத்தை விட்டு எழுந்தான். ஆர அமர, ஒன்பது மணிக்குப் பள்ளிக்கூடம் வந்தான். எல்லாப் பிள்ளைகளும் கதைப் புத்தகம் வைத்திருப்பதைப் பார்த்து ஏமாந்து போனான். விடியற் காலையில் எழுந்திருக்காததால், அவனுக்குச் சுறுசுறுப்பும் உண்டாகவில்லை. பாடமும் பதியவில்லை. எல்லோரும் அவனை முண்டம் என்று ஏளனம் செய்தார்கள். (ஆகையால்)
விடியற்காலையிலேயே தூக்கத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும்.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கேள்வி முயல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கைவினை கரவேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கொள்ளை விரும்பேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
