தந்தை தாய்ப் பேண்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 9
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரில் ஒரு பிச்சைக்காரச் சிறுவன் இருந்தான். அவனுடைய அப்பாவும், அம்மாவும் கிழவர்கள். கண் தெரியாதவர்கள். சிறுவன் தினந்தோறும் பிச்சை எடுத்துக்கொண்டு வந்து தாய் தந்தையருக்கு இட்டுவிட்டு மிகுந்ததைத் தான் சாப்பிடுவான்.
ஒருநாள் பிள்ளை யில்லாத ஒரு முதலாளி அச்சிறுவனைத் தம் வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டார். அவன் வீட்டு வேலையைக் கவனித்துக் கொண்டே தாய் தந்தையரையும் காப்பாற்றி வந்தான். ஆனால் அவன் தாய் தந்தையர் இருப்பது முதலாளிக்குப் பிடிக்கவில்லை.
ஒருநாள் முதலாளி சிறுவனைப் பாத்த்து உன் தாய் தந்தையரை எங்கெயாவது அனுப்பிவிடு. நான் உன்னை எனக்குச் சுவிகாரப் பிள்ளையாக ஆக்கிக்கொள்கிறேன் என்று சொன்னார். ஆனால் அவன் ஓத்துக்கொள்ளவே யில்லை. உடனே அவர் அவனைத் துரத்திவிட்டார். சிறுவன் பழையபடியே பிச்சை யெடுத்துத் தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தான். முதலாளிக்கு அவன்மேல் ஆச்சரியமும் அன்பும் உண்டாயின.
முதலாளிக்கு நோய் வந்தது. சிறுவனை அழைத்து, அவனுக்குச் சொத்து சுதந்திரங்களை எழுதிவைத்துவிட்டு இறந்துபோனார். சிறுவன் தன் தாய் தந்தையரோடு வசதியாக வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் அவ்வூரில் வெள்ளம் வந்தது. எல்லோரும் சாமான்களை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். சிறுவன் தாய் தந்தையரையே தூக்கிக்கொண்டு ஓடினான். எல்லோரும் அவனைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். (ஆகையால்)
தாய் தந்தையரைக் காப்பாற்ற வேண்டும்.
எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அறம் செய விரும்பு
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஆறுவது சினம்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஈவது விலக்கேல்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
