நான்….ஈ!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 1,860
(கதைப்பாடல்)
ஒருநாள் குப்பைக் கூளத்தில்
குந்தி யிருந்தது ஒரு ஈயாம்!
தெருநாய் ஒன்று அதைக் கவ்வ
திருமபத் திரும்ப முயன்றதுவாம்!
ஈயோ நாயின் பின்புறத்தில்
அமர்ந்து கொண்டது அழகாக!
நாய்க்கு இதுவோ பிடிக்கவில்லை!
நன்றி காட்ட விரும்பவில்லை!
‘உன்பேர் என்ன?’ எனக்கேட்க,
தன்பேர் அறியா அவ்வீயோ
தவித்துக் கண்ணீர் வடித்ததுவாம்!
பேரைக் கேட்கப் பறந்ததுவாம்!
உலக உயிர்கள் பலவிடத்தும்
உரைக்கச் சொல்லத் தன்பேரை
ஒருவரும் சொல்லாக் காரணத்தால்
உள்ளம் நொந்து வருந்தியதாம்!
மெய்மிக வருந்தி அதுசென்று
மேய்ந்த குதிரை ஒன்றிடத்தில்
மெல்லக் கேட்கத் தன்பேரை
மெதுவாய் ஈயைப் பார்த்துவிட்டு,
பற்கள் தெரிய பரிகசித்து
‘ஈஈ’ இதுகூடத் தெரியாதா?
‘தன்பெயர் தெரியா தண்டம்நீ!’
என்றே சிரித்தது நெடுநேரம்!
குதிரை ஈயென் இளித்ததனால்
இதுதான் பேரெனத் தெரிந்துகொண்டு
ஆகா… ‘நான் ஈ’ அறிந்துகொண்டேன்
அசுவா நன்றி என்றதுவாம்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
