ராஜ பார்வை
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 4,048
திரு.வளர்கவி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 250வது சிறுகதை. குறுகிய காலத்தில் இவ்வளவு கதைகளை வெளியிட்ட முதல் கதாசிரியர் இவர் தான். ஜனவரி 2024 முதல் இந்நாள் வரை, 250 கதைகள் வெளியாயின. இது ஒரு பெரிய சாதனை. வாழ்த்துக்கள் ஐயா.
அந்த ‘மெமூ’ லோகல் டிரெயின் ஓடிக்கொண்டிருந்தது. ‘ கீ ஸ்யின், செல் கவர், ஹேர்பின், அகர்பத்தி, கிளிப், கிளிப்’ என்றபடி பார்வை இழந்த ஒருத்தர் கைநிறைய பொருட்களை அடுக்கிக்கொண்டு ஓடும் ரெயிலில் தன் விற்பனைக்கு விளம்பரம் செய்து கொண்டிருந்தார்.
உட்கார்ந்திருந்த உமாபதி ‘ இதென்ன விலை?’ ஸ்டிக்கர் பாக்கெட்டைக் காட்டிக் கேட்டான்.
‘டுவெண்டி ருபீஸ்!’ அழகாய் ஆங்கிலத்தில் அசத்தினார் அவர்.
உமபதி விடவில்லை… ‘இது…?’ என்றான் இன்னொன்றைக் காட்டி..!
அவர் அதன் விலை சொல்ல, ‘செல்போன் கவரைக் காட்டி இது?’ என்றான்.
அவர் விலை சொல்ல..!
‘இதெல்லாம் வித்தா என்ன பெருசா கிடைக்கப்போகுது?!’ என்றான் குத்தலாக.
அவர் இப்பக் கொஞ்சம் கடுப்பாயிருக்கக் கூடும். ரயிலில் பயணிப்போர் எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்க அவர் உமாபதி பக்கம் திரும்பி, கொஞ்சம் உக்கிரமாகவே..
‘சார்.. சும்மா.. ஒண்ணொன்னாக் கேக்கறீங்க?! எதையும் வாங்கறதாத் தெரியலையே?!’
உமாபதி திகைத்துப்பார்க்க…!
‘நீங்க, சும்மா டைம்பாசுக்காக கேக்கறீங்க!. ஆனா, நான் லைஃப் பாஸுக்காக விக்கறேன்!’ என்றபடி நகர்ந்தான்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
