வில்லாளன் ஓரி
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,296
ஒரு வேடன், காட்டிலே ஓர் யானையைக் கண்டான். அது, அவனைக் கொல்ல ஓடி வந்தது. அவன் அதன் எதிர் நின்று தன் வில்லை வளைத்து, ஓர் அம்பை யெறிந்தான். அது, யானையின் வயிற்றிற் புகுந்து சென்றது. அம்பு அத்துடன் வேகம் அடங்காது யானையைக் கொல்லக் காத்திருந்த புலியின் மேற் பாய்ந்து ஊடுருவியது. அதற்குமேல் அவ்வழியில் ஓடி வந்த புள்ளிமானைக் கொன்று, அதன் உடலையும் கிழித்துக் கொண்டு சென்று கடைசியில் உடும்புப் புற்றிற் பாய்ந்து உடும்பைக் கொன்று சினம் தணிந்தது.
அத்தகைய வில் வித்தையைக் கற்ற அவன் யார் அவன்தான் ஓரியோ?
ஆம், அவனாகத்தான் இருக்க முடியும்…..
பாணர்களே , முழவுக்கு மண் அமையுங்கள். யாழிலே பண் அமையுங்கள்….. பெரும் வங்கியத்தை வாசியுங்கள் … கல்லியை எடுங்கள்… சிறு பறையை அறையுங்கள்… பதலையின் ஒரு முகத்தை மெல்லக் கொட்டுங்கள்… கரிய கோலைக் கையிலே தாருங்கள்… யான் பாடுவேன்… என்றார் வன்பரணர்.
ஓரி இசை வெள்ளத்தில் மிதந்தான். பாணர் குழாம். பொருள் வெள்ளத்திலே மிதந்தது!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026