வலி அறிதல்
கதையாசிரியர்: ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 2,875
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
அரசன் வினைவலிமை, தன்வலிமை, பகைவன்வலிமை, துணைவலிமை ஆகிய நால்வகை வல்லமைகளையும் அறிதல்
நமது சென்னை அரசாங்கம் மதுவிலக்குச் சட் டத்தை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது. இத னால் பொருள் வருவாய் சுருங்கியது. குறைந்தாலும் பேரறிவுள்ள நம் அமைச்சர்கள் அதற்கேற்ற முறையில் சில செலவுகளைக் குறைத்துக் கொண் டார்கள். இதனால் நமது அரசியல் எவ்வித குறை யும் இல்லாமல் நடந்து வருகிறது.
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
ஆகு ஆறு = (அரசனுக்குப் பொருள்) வருகின்ற வழி
அளவு இட்டிதாயினும் = அளவு மிகச் சிறியதாய் இருந்தாலும்
போகு ஆறு (அளவு) செலவாகின்ற வழியின் (அளவு)
அகலாக்கடை = அதனில் அதிகப்படா விட்டால்
கேடு இல்லை = அதனால் வரும் துன்பம் இல்லை.
கருத்து: அரசனுக்குப் பொருள் வரும்வழி குறைவாக இருந்தாலும் செலவுமிகாவிடில் கெடுதியில்லை.
கேள்வி: வருவாய் சுருங்கிய அரசன் யாதுசெய்தல் வேண்டும்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.
தொடர்புள்ள சிறுகதைகள்
அன்புமிக்க அரசன்!
வளர்கவி
May 10, 2026
மின்மினிப்பூச்சிகள்!
வளர்கவி
May 4, 2026
படகு பயணம்!
பே.செல்வ கணேஷ்
May 1, 2026