மரணவாசலில் ஒரு மகத்தான தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2026
பார்வையிட்டோர்: 2,344 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

அமுது சுரந்தது அன்பே சிவமானது. உலகம் போகிற போக்கு, வாழ்கிற வாழ்க்கை, எதுவும் ஒட்டவில்லை. மாது ஒரு தனித் துருவமாகத் தான் அங்கு வந்து சேர்ந்தாள் , இது அப்பன் மடியல்ல, அன்பு செய்ய ஆளின்றி மடிந்து போதலும் மண் கவ்வி வீழ்தலும் எத்துணை கொடுமை. இந்தக் கொடுமையின் நிழல், ஒரு சகாப்த காவியத்தையே படைத்து விட்டு, போயிருப்பதாய் நினைவு கூரும் போதெல்லாம் சாதாரண மரண நிகழ்வு கூட மாதுவின் மனதில் எவ்வித தாக்கத்தையும், ஏற்படுத்தாமலே மறைந்து போய் விடுகிறது.

அப்படித்தான் மனநலம் கெட்டுப் போய் உயிர் விட்ட மகள் இழப்பிலும் நேர்ந்தது. மறக்க முடியாத, அவளின் சோக வரலாறு அவள் மனம் திருந்த மட்டுமல்ல உலகிற்கே வேதம் சொல்கிற கதைதான் இதுவும் நன்றாக பூத்துக் குலுங்க, வேண்டிய ஒரு அபூர்வ மலர் அவள், வன்மம் பிடித்த வாழ்க்கை மனிதர்களின், தலையீட்டினால், அவள் வாழ்க்கை கெட்டது. மனமும் கெட்டது இதை விளக்கி எழுதப் போனால், இந்தக் கனவு வாழ்க்கையின் சுவடுகளே விட்டுப் போய் பாலைவன நெருப்பில் கருகி வீழ்ந்த அவள் கதை ஒரு நிலை பெற்ற துன்ப காவியமாகவே, வேதம் சொல்லி அழ வைக்கும் .அப்படி மாது அழுது தீர்த்த கதையின் காலடிச் சுவடுகளை பற்றி, எழுவதாகவே, மாதுவின் இன்றைய ஒவ்வொரு நகர்வும் முதுமை நெருப்பில் கருகி அழிந்து போனாலும் அந்த ஆறாத ரணங்களின் வலி சுமக்கும் நாயகியாகவே இன்னும் அவள் இருக்கிறாள்.

அவளுக்குத் தெரியும், அவள் வீட்டு மற்றத்தில் ரோஜா பூக்கவில்லை மாறாக முட்கள் தான் தைத்தன. அதுவும் அவள் கணவனும் அவன் சார்ந்த உறவுகளுமே, மனதில் சுமந்து கொண்டு வந்த முட்கள் அங்கு பலிக்கடாவாக்கப் பட்டு ஒரு யுகமே போய் விட்டது, இப்போது அவனுமில்லை அவன் வாரிசுவையும் இழந்து விட்ட பின் இனியென்ன புது வேதம்.

மகள் இறந்து போவதற்கு முதல் நாள் மாலை, அவள் தேகமே சுட்டது. அதற்குப் பனடோல் கூடக் கொடுக்கவில்லை, இனி மருந்து தான் தாங்குமா அவளுக்கு?நடக்கவே முடியாமல், போன வெறும் நடைப் பிணம் தான் அவள் இப்போது காலம் கடந்த உண்மை.

அருமை அப்பாவை அழிக்கிற அப்பாவாய்க் கண்ட பின் நடை என்ன, பேச்சும் போனது. கடைசியாக மூச்சும் நின்றது.

அவள் உயிர் விட்டுக் கிடந்த சோக நாள். அழிக்க வந்த ஒரு மனிதனை பற்றியதாகவே, தொடர்ந்து கொண்டிருந்த, அவளின் நிழல், வாழ்க்கையின் ஓட்டம் அன்றோடு முடிந்தது. மூளை செத்தால் என்ன நடக்கும்? தலை கீழான நடத்தைதான், சாந்தி இழப்புத் தான் அது என்ன வகையான இழப்பு? பலிகளின் சண்டை குறித்த பயம், அவள் சாக்க்டையில் தள்ளி விட்ட மாதிரியே ஒரு நிகழ்வு , சாதாரணமாக பொலிஸைக்ண்டாலே குலை நடுங்கும் இவள் என்ன செய்தாள் தெரியுமே?

ஒரு நாள் மங்கிய மாலை நேரம் போல் தெஹிவளை பொலிஸ் ஸ்டேசனிலிருந்து போன் வந்தது, மாதுவிடம் சொன்னார்கள். உங்கள் மகள் இஞ்சை வந்து நிற்கிறாள் வந்து கூட்டிப் போங்கோ என்ற போது மாதுவிற்கு தலை சுற்றியது. இந்தக் காணாமல், போதல் அடிக்கடி நிகழும் கேட் திறந்திருந்தால், இஷ்டத்துக்கு அவள் வெளியே போய் விடுவாள், அப்பாதான் அரை மனதோடு தேடிக் கண்டு பிடித்து எழுத்து வருவாள்.

அன்றும் அப்படித் தான் நடந்தது. அவருக்கு நன்ராக சிங்களம் தெரியும். சிங்களம் படித்த உயர் அதிகாரிஅன்று அவளைக் கொண்டு வந்து விட்ட பின் எரிச்சலோடு சீறினார்.

மூதேவிஅங்கை ஏன் போனனீ?

சண்டையை நிப்பாட்டச் சொல்லிக் கேட்கத் தான்

ஆர் போடுற சண்டை?

புலிகள் பிடிக்கினமே அது.
அதைக் கேட்டு, வீடே குழம்பிக் கிடக்கு அன்பில்லாமல் எல்லாம் அழிச்சாட்டியம் எல்லாத்துக்கும் காரணம் நீங்கள் தான் அவளை விடுங்கோ.
எப்படி விடுறது? கட்டி வைச்சு அடிச்சால் தான் திருந்துவாள்.
நிறுத்துங்கோ! மூளை நல்லாய் இருக்கிற நீங்களே வழிக்கு வரேலை இதைச் சொல்லப் போனல், என்னை அடிப்பியள், இந்தக் கூத்திலேதான் இவளையும் காப்பாத்த முடியாமல், போச்சு முதலிலை நாம் திருந்துற வழியைப் பாப்பம், பிறகு நாட்டை பற்றி யோசிக்கலாம்.
எப்படியாவது நாசமாய் போங்கோ எனக்கு என்ன வந்தது?
அப்ப தாலி கட்டினது எல்லாம் பொய்க்குத் தானே?
அதற்குப் பதில் சொல்லி வாதம் காக்கிற ஒரு ரட்சகனல்ல அவன். மெளனமாகவேபோய் விட்டான். அது பூதமாகவே வெளிப்பட்ட பின், அதற்கு சான்று பரிகரமாக இப்படியொரு நிகழ்வு ஒரு மரணத்தை நேரில பார்த்த அனுபவம் அவள் வாழ்க்கயையே புரட்டி போட்டு விட்டது.
இனியென்ன? இது இழப்பா? அன்றி வாழ்வா? இதில் வாழ்க்கை எங்கே வந்தது? வானமும் வரவில்லை. ஊனமே சுமந்து உயிர் விட்ட மகளுக்காக நான் கதறி அழுது இருக்க வேண்டுமே. ஊரைக் கூட்டி கதை சொல்லும் நிலையில் மாது இருந்திருந்தால் அது தான் அது நடந்திருக்கும்.
இது நடந்து இரு நாட்கள் கழித்து, இறந்த மகளின் இறுதிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு அவள் தங்கை தேவி லண்டனிருந்து புறப்பட்டு வந்திருந்தாள். மாத்த மகன் த்ஹான் ஏர் போர்டிற்குப் போய் அவளை அழைத்து வந்திருக்கிறான். வான் வந்ததும் அவன் சாமான் பிரயாணப் பெட்டி எல்லாம் இறக்கி வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
தேவி வாசலைக் கடந்து வரும் போது மாதுவே அவளை வரவேற்றாள். மகளின் ஜடம் வெறித்த உடல், இப்போது கரை ஒதுங்கிப் போய் விட்ட நிலையில் வீடும் பிணக்காடாகவே வெறித்தது. ஆனால் அம்மா, இன்னும் உயிர் ஒளி மங்காத நிஜ தேவதையாகவே அவளின் இருப்பு நிலையும் இனிய தரிசனமும் பார்க்க தேவிக்கு பெரும் திடுக்கீடாய் இருந்தது. சின்ன மூண்டது. மாதுவைப் பார்த்த வுடன் அவள் கேட்டமுதல் கேள்வி.
என்னம்மா இப்படி நிக்கிறியள்?
வேறு எப்படி நான் நிக்க வேணுமென்று நீ சொல்ல வாறாய்?
நீங்கள் அலறி, அழுதால் இந்த ஊரே நடுங்கும், உங்களை கட்டிப் படிச்சு நானும் கதறுவன், ஒன்றும் நடக்கேலையே! ஒரு தாயாய் உங்களைப் பாக்க முடியேலையே!
அதைக் கேட்டு விட்டு மாது சொன்னாள், நான் என்ரை பதவியையை இழந்து ஒரு யுகமே முடிஞ்சிட்டுது. நான் தாயாகவும் பேயாகவும் இருந்திருந்தால், இந்தப் பூமியே பிளந்திருகும், வீடு நரகமாயிருக்கும். நான் நெருப்பில் நடந்த கதைக்கு, இதுவே சான்று சொல்லியிருக்கும். உன் அக்காவின் இழப்பை நேரில் பார்த்த பின்னும் நான் உடைஞ்சு போகாமல் இருப்பதற்குக் காரணம் என் பேரறிவிலான விழிப்பு நிலை ஒன்ரு மட்டும் தான் இப்பவும் என்னை ஒரு தெய்வீகக் கவசம் மாதிரி என்னைக் காத்துக் கொண்டிருப்பதாய் நான் நம்புகிறன்.
நீ என்ன சொல்கிறாய்?
நான் என்ன சொல்லுறது, நீங்கள் பூதமாக இல்லாமல் ஒரு வேத தேவதையாய் உங்களை பாக்கிற போது எனக்கு அழுகைக்குப் பதிலாக ஆனந்தக் கண்ணீர் தான் வடிக்கிறன்.
அதைக் கேட்டு மாது பெருமையுடன் நினைவு கூர்ந்தாள். அன்பையே வழிபாட்டுத் தலமாக, பற்றிய எனக்கு, இதை விட வேறு என்ன பெருமை வேண்டும். மரண வாசலிலும் இழப்புளை மறந்து, இறையாக என்னால் இருக்க முடிந்ததே, என் வெற்றி சாம்ராசியத்தின் இறுதி நிலையாகவே, இதை நான் கொண்டாடுவேன். இந்த பேருண்மையை வாய் விட்டு சொன்னால், தேவி என்ன ஊரே கொண்டாடுமென்று, இப்போது அவளுக்குப் பட்டது.
ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *