செய்ந்நன்றி அறிதல்
கதையாசிரியர்: ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 3,842
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்
கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டை அரசு செய்தவன் அனபாயன். இவனிடம் மந்திரியாய் இருந்தவர் சேக்கிழார். இவர் மன்னன் அருகசமயக் கதையாகிய சீவகசிந்தாமணியைக் கேட்டு இன்பம் அடைவதை அறிந்தார். பின்னால் வரும் மக்கள் தம்மைப் புகழ்வார்கள்; அல்லது அப் . போது உள்ள மக்கள் தம்மை மதிப்பார்கள். அல் லது அரசனிடம் பெரும்பொருள் பெறலாம் என்ற பயன்களில் எதையும் எண்ணாமல், அரசே! சைவ சமய நாயன்மார்கள் கதை 63 உள்ளன. அவை இக்கதைகளை விட இன்பம் தரும்”, என்று அவற்றில் சில கதைகளைச் சொன்னார். இவற்றைக் கேட்ட அரசன் இக்கதைகளைத் தாங்களே நூலாகப் பாடித் தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். அவன் வேண்டுகோளின்படி அவன் உத்தரவு பெற்றுச் சிதம்பரம் வந்து சித்திரைத் திருவாதிரை யில் தொடங்கி மறுவருட சித்திரைத் திருவாதிரை யில் பாடி முடித்துப் பெரிய புராணம் என்ற திருத் தொண்டர் புராணத்தை அரங்கேற்றி எல்லா மக்களும் அறியும்படி செய்தனர். எவ்வித பயனையும் எதிர்நோக்காமல் சைவ உலகிற்குச் சேக்கிழார் செய்த அன்புடைமையை ஆராய்ந்தால் அவ்வன்பு டைமை கடலைக்காட்டிலும் மிகப்பெரியது ஆகும்.
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
பயன் தூக்கார் = (இன்னார்க்கு இன்ன உதவி செய்தால் நமக்கு இன்ன நற் பயனுண்டாகுமென்று தமக்கு ) ஒருபயனையும் போக்காதவராய்
செய்த = இயற்றிய
உதவி நயன் = உபகாரமாகிய அன்புடைமையை
தூக்கின் = ஆராய்ந்தால்
நன்மை = அதன் நன்மை
கடலின் = சமுத்திரத்தைக் காட்டிலும்
பெரிது = மிகப் பெரியது ஆகும்
கருத்து: கைம்மாறு கருதாது செய்த உதவி கடலி னும் பெரியது.
கேள்வி: கடலைக்காட்டிலும் பெரியது எது?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026