உங்கள் கருத்து

 

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


 
 
 
 
 
 
 
210 entries.
karuvai su pugazhenthi from karuppur wrote on February 12, 2013 at 9:08 am
நல்ல முயற்சி தொடரட்டும் உங்கள் பணி - புகழ்
மடிப்பாக்கம் ரவி from மடிப்பாக்கம், சென்னை wrote on February 11, 2013 at 1:43 pm
தற்பொழுது எந்த தமிழ் பத்திரிக்கையும் புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு இடம் கொடுப்பதே இல்லை. இப்படி இருந்தால் தமிழில் புதிய முயற்சி என்பதே இல்லாமல் போய் விடாதா? உங்களுடைய இந்த தளம் மிகவும் அருமையான இலக்கியத் தொண்டை செய்வதாகவே நான் நினைக்கிறேன். மாதத்திற்கு இரண்டு சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தருமாறு புகழ பெற்ற எழுத்தாளர்களைக் கேட்டுக் கொள்ளலாம் என்பது எனது அபிப்ராயம்.
R.Nagarajan from Tuticorin wrote on February 8, 2013 at 3:39 pm
It is really amazing. I love this web.
சங்கர் கோட்டாறு from நாகர்கோவில் wrote on January 29, 2013 at 6:06 pm
இந்த இணையதளம்- வாசகர்களுக்கு, சிறுகதைகளின் களஞ்சியம். கதாசிரியர்களுக்கு, தங்களதுபடைப்புகளை எளிதான, தரமான, மிகுந்தபேர் காணும்படியான,மதிப்பிடும்படியான முறையில் அமைந்துள்ள அற்புதமான தளம். மேன்மேலும் புகழுற வாழ்த்துக்கள்.
தாரமங்கலம் வளவன் wrote on January 28, 2013 at 4:19 pm
தமிழ் சிறு கதை வரலாற்றை பின்னாளில் எழுதும் போது தங்களுடைய பணி கண்டிப்பாக குறிப்பிடப்படும்
தேமொழி wrote on January 24, 2013 at 4:28 pm
வாரப் பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படிக்க வசதி இல்லாத அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணையவழி கதைகள் படிக்க இத்தளம் உதவும்.
அத்துடன் இளம் எழுத்தாளர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது, this is the icing on the cake.
தங்கள் சேவைக்கு நன்றி.
..... தேமொழி
அமைதிச்சாரல் from மும்பை wrote on January 24, 2013 at 8:54 am
சிறுகதைகளுக்கென்றே ஒரு தளம் இருப்பதும், எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேமிக்கப்பட்டு மக்களின் வாசிப்பை மேம்படுத்துவதில் மிகவும் சிறப்பாகச்செயல்படுவதும் மகிழ்ச்சிக்குரியதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும்.

என்னுடைய கதைகளையும் இங்கே தொகுப்பில் இணைத்துக்கொண்டமைக்கு நன்றி. சில நாட்களாய் கதைகளை இங்கே பதிவு செய்வதில் சற்றுச் சிரமம் ஏற்படுகிறது. கவனிக்கவும்.
பி.தமிழ் முகில் நீலமேகம் wrote on January 22, 2013 at 3:13 am
இளம் எழுத்தாளர்கள் மற்றும் கதாசிரியர்களை ஊக்குவிக்கும் அருமையானதோர் தளம்.சிறுகதைகளுக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளம் மிக நன்றாக உள்ளது.
manovasant from Chennai wrote on December 25, 2012 at 2:49 pm
என்னுடைய சில கதைகளை பதிப்பித்திருக்கிறீர்கள். என் கதைகளைப் பார்வையிட்டோர் எத்தனை பேர் என்று பார்ப்பதற்காக நான் உள்ளே நுழையும் போதெல்லாம் என்னையும் ஒரு பார்வையாளராகப் பதிவு செய்து விடுகிறது. கதையாசிரியரின் நுழைவை, பார்வையாளர் எண்ணிக்கையில் இருந்து நீக்க இயலுமா ?
எஸ்.ராஜகுமாரன் from வயலூர் கிராமம்,திருவாரூர் மாவட்டம் wrote on December 20, 2012 at 9:34 pm
வணக்கம்.எனது முதல் ரேடியோ பாடிய வீடு சிறுகதையை இந்த வலைத்தளத்தில் பதிவிட்டமைக்கு நன்றி.எழுத்தாளர் பற்றிய விவரக்குறிப்பில்,இக்குறிப்புகளை இணைக்க வேண்டுகிறேன்.

எஸ்.ராஜகுமாரன்

திருவாரூர் மாவட்டம் வயலூர் கிராமம்,தொட்டில் மண்.கலையும் இலக்கியமும் தொழிலும் வாழ்வும்.மேகவீடு சிறுகதைத் தொகுப்பு,நதியோடிய காலம் கவிதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்க நூல்கள்.எழுத்தாளர் தி.க.சி குறித்த 21-இ சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன் மற்றும் பழந்தமிழ் நாட்டுப்புற இசைக்கலையான லாவணி பற்றிய ஆவணப்படம்,முக்கியமான கலையாக்கங்கள்.எழுத்தும் இசையும் அன்பும் நட்புமாக ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்வெனும் மகாநதி...
எஸ்.ராஜகுமாரன் from வயலூர் கிராமம்,திருவாரூர் மாவட்டம் wrote on December 20, 2012 at 9:09 pm
வணக்கம்.இந்த சிறுகதை வலைத்தளம் நல்ல தொகுப்பு.வாழ்த்துகள்.ஓராண்டுக்கு முன் ஆனந்த விகடனில் வெளிவந்த என்,முதல் ரேடியோ பாடிய வீடு சிறுகதையின் பிரதி என் கைவசமில்லை. அல்லது என் வீட்டு காகிதப் புதருக்குள் அதைத் தேடி எடுக்கும் பொறுமை என் வசமில்லை.சரி சும்மா தமிழ்க் கூகுள் கடலில் தேடல் தூண்டிலை வீசி பார்ப்போமே என எண்ணி,கதைத் தலைப்பைத் தட்டினேன்.இன்ப அதிர்ச்சியாக இங்கே வந்தேன்.நனறி.இந்த நல்ல முயற்சி மேலும் செம்மையுறட்டும். நேசமிகு எஸ்.ராஜகுமாரன் - உலகம் அழிந்து விடாத 21-12-2012 அதிகாலையில்...
தி.தா.நாராயணன் from செய்யாறு wrote on December 18, 2012 at 11:09 am
வணக்கம்,
ஒரு படைப்பாளிக்கு தன் கதையைப் படித்தவர்களின் கருத்தை அறியும் ஆவல் இருக்கும்.பெரும்பாலும் வாசகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவதில்லை.அடுத்து தன் எழுத்தை எவ்வளவு பேர்கள் படித்தார்கள்?.என்று அறியும் அவா இருக்கும்.அந்த வசதியை தங்கள் தளத்திலிருந்து நீக்கிவிட்டிருக்கிறீர்கள். இதில் எழுத்தாளனுடைய ஆர்வம் குறைகிறது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.நன்றி.
பார்வதி இராமச்சந்திரன் from இந்தியா wrote on December 3, 2012 at 4:36 pm
என் சிறுகதையை வெளியிட்டமைக்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. ஆனால், கதைக்கு என் நண்பர்கள் சிலர் பதிவு செய்த கருத்துக்கள், பதிவாக மறுக்கிறது. தயவு செய்து சரிசெய்து உதவவும். மிக்க நன்றி.
amaran from malaysia wrote on November 1, 2012 at 3:24 pm
மேடை பேச்சு, சொற்பொழிவு, சிறுகதை, மற்றும் சிரிப்பு கதைகளை என்னுடைய அகபக்கதிற்கு அனுப்பு வைத்தல் சிறப்பாக இருக்கும் .
ஹேமா from சிங்கப்பூர் wrote on September 30, 2012 at 6:24 am
அன்பு மகள் என்ற கதையில் நடுத்தர குடும்பத்து அப்பாவின் பாடுகளை நகைச்சுவையோடு கூறியிருக்கிறார், கதாசிரியர் சூர்யா. நன்றாக இருந்தது. நல்ல சிறுகதைகளை தொகுத்தளிக்கும் உங்களுக்கு என் பாராட்டுகள்.
கோ.வினோத் ராஜ் from செங்கல் பட்டு wrote on September 22, 2012 at 4:55 pm
என் பெயர் கோ.வினோத் ராஜ். நான் உங்கள் இணையத்தில் மூன்று சிறுகதைகள் எழுதியுள்ளேன். எனக்கு 17 வயது தான் ஆகிறது. நான் தாம்பரம் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.எஸ்ஸி (இயற்பியல்) முதலாம் ஆண்டு படிக்கின்றேன். என்னைப் போன்ற சிறு எழுத்தாளர்களின் கதைகளையும் பிரசுரம் செய்யும் சிறுகதைகள் இணையத்திற்கும் தள ஆசிரியர் கார்த்திக் அண்ணனிற்க்கும் நன்றி!!!
தி.திருக்குமரன் from யாழ்ப்பாணம் wrote on September 11, 2012 at 2:20 pm
மிகவும் ஆரோக்கியமான இலக்கியத்தளம், என் போன்ற வாசகர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கிறது
நன்றி
Ganesan Ramanathan from Melbourne wrote on September 11, 2012 at 5:15 am
சில மாதங்களுக்கு முன் நான் எனது கதை ' விளம்பர அழகி' யின் pdf கோப்பை அனுப்பியிருந்தேன். கதை பதிவானதா என்று தெரியாது.
நித்யா from ஈரோடு wrote on August 25, 2012 at 1:09 pm
கடந்த நான்கு வருடங்களாக இலக்கியத்தில் மீது எனக்கு காதல் அதிகமாகவே உள்ளது. அந்த காதலின் காரணமாகவே சிறுகதைகளை எழுத துவங்கியுள்ளேன். இலக்கியம் என்பது எனக்கு சுவாசமாகவே உள்ளது. நம் தமிழ் சூழலில் முழு நேர இலக்கியவாதியாக இருப்பது என்பது குதிரை கொம்பான விசியம் இருந்தும் என் மனம் அதையே நாடுவதற்கு காரணம் இலக்கியம் என் சுவாசமாகவே உள்ளது. இன்னும் நிறைய கதைகளோடு உங்களை சந்திக்கிறேன்.
RAMANUJAM K from MADURAI wrote on August 5, 2012 at 1:55 am
this web site will grow popular. your efforts is precious. thanking you!