ஆயிரம் புளுகன்
கதையாசிரியர்: வீ.அய்யனார்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 2
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு புளுகன் இருந்தா. புளுகுறதுக்கு, ஆளுக் கெடைக்காம, சீமைக்கு வாரர். நம்ம டொம்புச்சேரியப் போல வந்து, இந்த ஊர்ல, பெரிய தனக்காரு. வீ டெதுண்டு கேட்டா. அங்ஙன பாத்தவங்க, இந்த வீடுதாண்டு காட்டுனாங்க. காட்டவும், வீட்டுக்குள்ள போனா, போயி, அந்தப் பெரியதனத்துக் காரங்கிட்ட, இந்த ஊர்ல, எங்கூடப் புளுகுறதுக்கு சோடி இருக்காண்டு கேட்டா. புளுகுறவனுக்கு ஆள் இருந்தா, ஆயிரம் ரூவா பந்தயங் கட்டச் சொல்லுங்கண்டு சொல்றா. புளுகுறதுல் மெசாரிட்யாப் புளுகுறவனுக்கு, அந்த ஆயிரம் ரூவாயக் குடுத்திறலாம்ண்டு அள்ளி விடுறா.
அப்ப, பெரியதனத்துக்காரு, இந்த ஊர்ல, ஒங்கூடப் புளுகுறதுக்கு ஆளு இல்ல. மேற்க கொஞ்ச தூரந் தள்ளிப் போனா, ஏலுவலப் பட்டில ஒருத்த இருக்கா. அவந்தா, ஒங்கூடப் புளுக லாயக்ககானவ, அவன இங்க வரச்சொல்லி, புளுகுப் பந்தயத்த வச்சிக்வோம்ண்டு, பெரிய தனத்துக்காரு சொல்றாரு.
இப்டி சொல்லிக்கிட்டிருக்கயில, ஆயிரம் புளுகன், அந்த ஊருக்கு ஒரு வேலயாப் போயிட்டா. அப்ப, இந்தா வந்துட்டான்ல, ஆயிரம் புளுகண்டு சொன்னாங்க. சொல்லவும், நாட்டாமக்காரு, ஏப்பா! ஆயிரம் புளுகா! இந்தாளு புளுகுறதுல, சோடிக்குக் கூப்புடுறாரு. நிய்யி தயாராண்டு கேட்டாரு.
யோசிச்சுப் பாத்திட்டு, சரித்தாண்டு சொல்லிட்டா. கை அடுச்சுப் பந்தயங் கட்டி, வெள்ளிக் கெழமண்ணக்கிப் புளுகு போட்டி நடக்கும்ண்டு ஊர்ல தமுக்கடுச்சு, தண்டக்காரன விட்டுச் சாட்டச் சொல்லிட்டாங்க.
வீட்டுக்கு வந்தா. வந்து, அவ, புளுகுறதுக்கு சோடி கெடைக்காம கெழக்குச் சீமயில இருந்து வந்திருக்கா. அவ, புளுகுறதுல், பெரிய ஆளா இருப்பர் போல, அவங்கூட நம்மளால் புளுக முடியுமா? தோத்துப் போனா, ஆயிரம் ரூவாயும் போயிருமே, ஆயிரம் புளுகண்டற பேரும் போயிருமேண்டு நெனச்சு, புளுகப் போகாம மண்டயில பத்த அரச்சுப் போட்டுக்கிட்டு, மண்டவலிண்டு சொல்லிட்டுப் படுத்துக்கிட்டா. அண்ணக்கி வெள்ளிக்கெழம, ஆயிரம் புளுகன். புளுகுறதக் கேக்குறதுக்காக பக்கத்து ஊர்ல, இருந்து வந்து நெறயாக் கூடிக் கெடக்காங்க. கூட்டங் கூடிக் கெடக்குது. இங்க, ஆயிரம் புளுகன், புளுகப் போகாம வீட்ல படுத்துக் கெடக்குறா.
படுத்துக் கெடக்கயில், ஆயிரம் புளுகனுக்கு ஒரு மகன் அப்ப வீட்டுக்குள்ள வந்தா. வந்தவ, அப்பன் படுத்துக் கெடக்குறதப் பாத்தா. என்னாப்பா! புளுகப் போகலயாண்டு கேட்டா . போகல், போயித் தோத்துப் போனா ஆயிரம் ரூவா போயிருமேண்டு நெனச்சு, படுத்துக்கிட்டேண்டு சொல்றா.
என்னாப்பா! அந்த ஆயிரம் ரூவாய எங்கிட்டக் குடுப்பாண்டு வாங்கிக்கிட்டு, ஆயிரம் புளுகனோட புளுகுறதுக்குப் போறா. கூட்டம் கூடிக் கெடக்குது.
இவ போகவும், எங்கடா? ஒங்கப்பண்டு கூட்டத்துல இருந்தவங்க கேக்குறாங்க. அதுக்கு இவ சொல்றா. முந்தா நாத்து மானம் (வானம்) ரெண்டாப் பொளந்துகிருச்சு. ஒரு இய்யப் புடுச்சு, தோல உருச்சு, மானத்தச்சிட்டு, மிச்சத் தோலக் கொண்டு போயி, சின்னமனூரு சந்தயில வித்திட்டு அண்ணைக்கே பாதி ரூவாய வாங்கிட்டு வந்திட்டாரு. மீதி ரூவாய வாங்க, இண்ணக்கிப் போயிருக்காருண்டு சொன்னா.
சொல்லவும், சனமே ஆச்சரியப்பட்டு, அடியாத்தா!…. இவனே… இந்தப் புளுகுப் புளுகுறானே, இவங்கப்பன் – என்னா புளுகுப் புளுகுவானோண்டு நெனச்சுப் பயந்து, புளுக வந்தவ புளுகாமப் பெறப்பட்டா.
இந்தப்பய, கூட்டத்துல இருந்தவங்களப் பாத்தா. பாத்து, என்னாயா? இந்தப் புளுகு போதுமா? இன்னும் புளுகணுமாண்டு கேட்டா.
கேக்கவும், கூட்டத்ல் இருந்தவங்க, இன்னொரு புளுகு புளுகுடாண்டு சொன்னாங்க.
எங்கப்பாவுக்கும் – எங்கம்மாவுக்கும் கல்யாணம் நடக்கயில, நாங் கூடவே இருந்தே. கல்யாணம் முடுஞ்ச பெறகு, வீட்டுக்குள்ள போயி பாயில ஒக்காந்தாங்க. அப்ப, ரெண்டு பேருக்கும் எடயில, நா ஒக்ககாந்திருந்தே. ஒக்காந்திருக்கயில, ஊருக்குப் பெரியதனத்துக்காரங்க வந்தாங்க. வந்து, செய்யுற சோலிகளச் செஞ்சுட்டு, கடசியாத் தேங்காய ஒடச்சாங்க. ஒடைக்கவும், மே மூடி பறந்து போயி, மானமாப் போச்சு. கீழ மூடி விழுந்து பூமியாப் போச்சு. அவங்க திகிலடுச்சுப் போயிட்டாங்க. நா பாத்துக்கிட்டே இருந்தேண்டு சொன்னா.
அடேயப்பா! நிய்யி புளுக வேணாம்டா. இந்த ரூவாய எடுத்துக்கிட்டுப் போடாண்டு சொல்லிட்டாங்க. ரெண்டாயிரம் ரூவாயயும் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வாரா.
வீட்ல வந்து, அப்பங்கிட்டக் குடுத்தா. இதென்னடா? அதிசயமாயிருக்கு. இந்தப் புள்ள உசுரோட இருக்கப் பிடாதுறாண்ட்டு கையயும் – காலயுங் கெட்டி, கெணத்துக்குள்ள போட்டுட்டு வந்திட்டா.
போடவும், விடிய – விடியக் கெணத்துக்குள்ள கெடக்கர். விடியக் காலத்ல, தோட்டக்கார், போயலைக்குத் தண்ணி எரைக்க வந்தா. எரைக்கயில சாலப் புடுச்சுக்கிட்டு மேல வர்ரா. புண்ணுக் கழுத்து லம்பாடி மாடுக, டமக் டமக்ண்டு மிதிச்சுக்கிட்டுப் போகுதுக.
மேல வந்தவ, ஐயா! ஆயிரம் புளுக சாலப்புடுச்சுக்கிட்டு மேல வாரா. தலவாரில, மாட்ட நிப்பாட்டிட்டு என்னய வந்து தூக்கி விடுண்டு சத்தம் போட்டா. என்னாடா மனுசன் சத்தங் கேக்குதுண்ட்டு வாரில, மாட்ட நிப்பாடிட்டு, வந்து பாத்தா, ஆயிரம் புளுக் மக், கையப் புடுச்சுக் தூக்கிவிட்டா. தூக்கி வெளிய விடவும், நேரா வீட்டுக்கு வந்தா. வந்து, அப்ப பக்கத்துல போயிப் படுத்துக்கிட்டா. ஒரக்கத்துல தடவிப் பாத்தவ். ஆருடாண்டு கேட்டா. என்னப்பா! நாந்தேண்டு சொன்னா.
அடப்பாவி! எப்டிடா? கெணத்துக்குள்ள கெடந்து வந்தேண்டு கேக்கவும், நிய்யி கெணத்துக்குள்ள போட்டுட்டயா, அப்பப் பாத்து தோக்லா வரத்துச் சாரலு, சோண்டு பேஞ்சுச்சு. அந்தத் தூத்தலப் புடுச்சு அந்தத் தூத்தலப் புடுச்சு வந்திட்டேப்பாண்டு சொன்னா.
சொல்லவும், இனி, இவனத் திருத்த முடியாதுண்ட்டு, அவ் போற போக்குல விட்டுட்டானாம். அதுக்குப் பெறகு பெரிய புளுகனா இருந்தானாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.
தொடர்புள்ள சிறுகதைகள்
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
வக்கணை
வீ.அய்யனார்
August 9, 2026
பங்கு – பாகம்
வீ.அய்யனார்
August 9, 2026