ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 3,022
மாலை அஞ்சு மணி இருக்கும். லலிதா மாமி மாடிப் போர்ஷனிலே ஒரே ஆர்ப்பாட்டம்..
மாமி, மாதுவைப் பார்த்து, “ஏண்டி இன்னிக்கு காலேஜ் லீவ்-னா, கொஞ்சமாவது ஆத்திலே எனக்கு ஒத்தாசை பண்ணப் படாதா?”ன்னு கத்தினாள். அச்சமயம் பார்த்து, சுந்தரம் மாமா கூப்பிட்டார், “ஏண்டிமா! லலிதா இங்க வா, ஆத்துக்கு யாரோ வந்திருக்கா போல இருக்கு!”
மாமி, எட்டி பார்த்தாள். வாசல்லே ஒரு ஆசாமி…கூட ஒரு மாமி.
எழுந்து வந்த சுந்தரம் மாமா, “இவா தான் நம்ம கணேஷ் அய்யர் சொன்னவா.”
மாமிக்கு ‘பகீர்’ன்னு ஆயிடுத்து. “அடடா! ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லக் கூடாதா? ஆத்திலே பால்கூட இல்லையே!”
“வாங்கோ, வாங்கோ! உள்ளே வாங்கோ!”
“இல்ல. நாங்க வந்து…” கூறுவதற்குள்.
“எல்லாம் தெரியும். வாங்கோ. மாது ஆத்துல தான் இருக்கா.”
மாமி, மெதுவா ஹாலுக்கு வந்து, “மாது, நன்னாவே பாடுவா. பையன் வரலையோ . மாது நீ அந்தச் பாட்டை பாடிக்காட்டிண்டே இரு, நான் வந்துடுறேன்!”ன்னு சொல்லி, பக்கத்து வீட்டிற்கு பால் வாங்க சென்றாள்.
வந்தவாளுக்கு மாமியோட பாவனையும், மாதுவோட பாட்டும் ஒண்ணும் புரியலை.
“அய்யர்வாள் நாங்க இன்னும் நிறைய வீட்டுக்கு போகணும்” எனக்கூறி,நன்கொடை வசூல் புத்தகத்தை நீட்டியவுடன், சுந்தரம் மாமா திடுக்கிட்டார்.
“நீங்க… மாதுவை பெண் பார்க்க வரலையோ.”
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ரயில் செல்வியும்… WAP 7 என்ஜினும்…
உரு.வளவன்
September 12, 2026
ராப்பிச்சை
மா.வீ.தியாகராசன்
September 12, 2026
மரணம் நம்மைப் பிரிக்கும் வரை
இரா.துரைமாணிக்கம்
September 12, 2026
