அச்சம் என்பது மடமையடா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 2,030 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(பழைய கதை புதிய பாடல்!)

இனிய நகரம் ஒன்றிலே
இரண்டு எலிகள் வாழ்ந்தன
இரண்டும் உறவு எலிகளாம்
இருந்தும் தனித்து வாழ்ந்தன!

ஓன்று மரத்தின் பொந்திலே
மற்றது செல்வர் வீட்டிலே
என்ற போதும் இரண்டுமே
இதயம் மகிழ்ந்து இருந்தன!

செல்வர் வீட்டு எலியையே
உள்ளன்போடு விருந்துக்கு
உண்ண வேண்டி அழைத்தது
ஒளிந்து வாழ்ந்த சுண்டெலி!

செல்வர் வீட்டு எலியுமே
சென்ற தந்த விருந்துக்கு
உள்ளே மரத்தின் பொந்துக்குள்
உள்ள உணவைத் தின்றதும்

செல்வர் வீட்டுப் பெருமையை
உள்ளம் மகிழ்ந்து காட்டிட
உண்ண வேண்டி விருந்துக்கு
ஒருநாள் வரவே அழைத்தது

பொந்தில் வாழ்ந்த சுண்டெலி
தொந்தி வயிறு பசித்திட
அந்தச் செல்வர் வீட்டுக்கு
அன்னம் உண்ணச்சென்றதாம்!

செல்வர் உணவு உண்கின்ற

செவ்வக வடிவ மேசைமேல்
சிதறி இறைந்து கிடந்தன
சிறந்த உணவு வகைகளே!
கொஞ்சம் அந்தச் சிதறலை

குனிந்து தின்னும் வேளையில்
குலை நடுங்க வைக்குமோர்
கர்ஜிக்குமொலியும் கேட்டதாம்
என்ன சப்தம் என்றது

ஏழை மரப் பொந்தெலி
வீட்டைக் காவல் காத்திடும்
வேட்டை நாயே என்றதும்
உயிரைக் காக்க ஓடியே

ஒளியும் இடத்தைத் தேடின!
ஓடும் போது பொந்தெலி
உறக்க ஒன்றைச் சொன்னது!
அச்சம் என்பது மடமைதான்

ஆன போதும் ஒன்றுணர்
மச்சு வீட்டைக் காட்டிலும்
மறையும் பொந்தே மேலதாம்
எலியின் வளையே ஆயினும்

தனிவளையே உயர்வெனும்
தத்துவத்தைச்சொல்லியே
தனது வீடு பாய்ந்தது!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *