அகல் – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,852
மனைவி சரஸ்வதி, “ஏங்க வடபழனி மார்க்கெட் போய், அகல் விளக்கு வாங்கிட்டு வாங்க’ என்று தன் கணவன் குமாரிடம் கூறினாள்.
“அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க’ என்று கூறி அனுப்பினாள்.
குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ஒரு வயதான பெண்மணியிடம் “அகல் விளக்கு கொடும்மா, எவ்வளவும்மா’ என்று
விசாரித்தான்.
“இது ஒண்ணு இரண்டு ரூபா, இது ஒரு ரூபாய்’ என்று கூறினார் அந்த வயதான பெண்மணி.
“இதென்ன ரெண்டு ரூபாய், இது ஏன் ஒரு ரூபாய்’ என்று கேட்க, அந்த பெண்மணி விவரித்தாள்.
“ஒரு ரூபாய் விளக்கெல்லாம் கையால் செய்தது, இரண்டு ரூபாய் விளக்கெல்லாம் அச்சால செய்தது’ என்று கூறினாள்.
குமார் உடனே, அந்த ஒரு ரூபாய் விளக்கை முப்பது கொடும்மா என்று வாங்கிக் கொண்டு வீடு வந்தான்.
மனைவி சரஸ்வதி அகல் விளக்கைப் பார்த்து, ”என்னங்க இது அச்சு விளக்கு வாங்கிட்டு வரசொன்னேன், இப்படி மண் அகல் விளக்கை வாங்கிட்டு வந்துட்டீங்களே’
என்று கேட்டாள்.
குமார், “சரஸ், இந்த விளக்கு எல்லாம் கையால் செஞ்சதாக சொன்னாங்க. சாதாரண பூ கட்டவே கையெல்லாம் வலிக்கும், இந்த அகல்விளக்கை நாம் வாங்கியது, அந்த கைகளுக்காகத்தான். அந்த தொழிலாளர்கள் கைகள் வலிக்க இதை செஞ்சிருப்பாங்களே, அதான் அச்சு விளக்கு வாங்காமல் இந்த கைகளால் செஞ்ச விளக்கை வாங்கிட்டு வந்தேன். நாம் அவர்களின் உழைப்புக்கு செய்த மரியாதை இது’ என்று கணவன் கூற சரஸ்வதி நெகிழ்ச்சியாய் கட்டிக் கொள்கிறாள்.
– சங்கை ஜி. குப்புசாமி (திசெம்பர் 2013)
தொடர்புள்ள சிறுகதைகள்
அந்நியம்
மேலாண்மை பொன்னுச்சாமி
September 24, 2026
மனமாற்றம்
கல்பனா ராஜகோபால்
September 24, 2026
கூண்டை விட்டு வெளியே வா
ஸ்ரீ.தாமோதரன்
September 24, 2026