வேரூன்றிய வைராக்கியம்
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 14, 2026
பார்வையிட்டோர்: 8,979

மலையோரக் கிராமத்தில் ஒரு முதியவர் அரிய வகை மரக்கன்றுகளை தனது தோட்டத்தில் வளர்த்து வந்தார். தோட்டத்திற்கு வந்த அவரது 18 வயது பேரன், ஒரு செடியை காட்டி, “தாத்தா, இந்தச் செடி நட்டு மூன்று மாதங்களாகியும் ஒரு அங்குலம் கூட வளரவில்லையே? மற்றவை எல்லாம் உயரமாகிவிட்டன, இதை மட்டும் பிடுங்கி எறிந்துவிடலாமா?” என்று கேட்டான்.
தாத்தா புன்னகையோடு, “இல்லையப்பா, இது வளரவில்லை என்று நினைக்காதே, அது தனது வேரினை பூமிக்குள் செலுத்தி தன்னைத் வலுவாக தயார் செய்கிறது” என்றார். அடுத்த சில வாரங்களில் அந்தச் செடி அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. சில மாதங்களிலேயே மற்ற மரங்களை விட உயரமாக வளர்ந்தது.
பேரன் ஆச்சரியத்துடன் கேட்டபோது தாத்தா விளக்கினார்: “கடந்த மூன்று மாதங்களாக அது மேலேயுள்ள கிளைகளை வளர்க்கவில்லை; பூமிக்கடியில் ஆழமான வேர்களை ஊன்றிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய புயல் வந்தாலும் சாயாத அளவுக்குத் தன் அடித்தளத்தைப் பலப்படுத்தி கொண்டிருந்தது என்றார்.
அதுபோல் உன் முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைக்காதபோது சோர்ந்துவிடாதே. நீ வாழ்வில் வெற்றி பெறவில்லை என்று உலகம் சொல்லும் நேரத்தில்தான், நீ உனக்கான அடித்தளத்தை செவ்வனே உருவாக்கிக் கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம். தன்னம்பிக்கையுடன் உங்கள் திறமையை வைராக்கியமாக வளர்த்துக் கொண்டால், உன் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
பேரனின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. அவன் தன்னம்பிக்கையுடன் வீடு திரும்பினான்.
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கொட்டு மேளம்
தி.ஜானகிராமன்
September 12, 2026
பிடிவாதம்
இரா.கலைச்செல்வி
September 9, 2026
புத்தகம் சுமக்க வேண்டிய கைகள்
எஸ்.மதுரகவி
September 9, 2026
