வேந்தர்க்கு வேண்டும் குணம்
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 226

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது! – குறள்.
(குறள்- கதைப்பாடல்)
வேந்தர்க்கு அழகு!
கிளைகள் பரப்பி நின்றதோர்
வளைந்த வாகை மரத்தின்மேல்
கிறங்க வைக்கப் பாடிடும்
குயிலு மொன்று இருந்ததாம்!
குயிலின் இனிய குரலிலும்
கொழுத்த உடலின் செழிப்பிலும்
உண்ண விரும்பி நரியொன்று
ஓடி அருகில் வந்தது!
குயிலைப் பார்த்து நரியது
“இனிய உந்தன் குரலினால்
இசையால் உலகைக் கவர்கிறாய்
என்று சொல்லி வஞ்சமாய்….
பாடு வோர்கள் என்றுமே
மூடிக் கொண்டு கண்கள்
பாடு வது போலநீ…
பாடு மூடிக் கண்களை!
என்று சொல்லக் குயிலது…
நாடும் நரியின் எண்ணத்தை
நன்கு தெரிந்து கொண்டது!
என்னைத் தின்னும் முன்னர்நீ
எல்லாம் வல்ல இறைவனை
கண்ணை மூடிக் கும்பிட்டு
கடவுளைத் துதித்துக் கொள்ளென
நம்பி யந்த நரியுமே
கண்ணை மூடிக் கடவுளை
வந்த னையும் செய்கையில்
அந்தக் குயிலும் மறைந்தது!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வரம்
மணிராம் கார்த்திக்
July 5, 2026
கழுதையும் நானும்…
இளையவேணி கிருஷ்ணா
July 2, 2026
அவசரம்
மணிராம் கார்த்திக்
July 2, 2026
