வெற்றி





“என்ன பிரபா, காலையிலேயே ஆரம்பித்து விட்டாய்” என்று தன் மனைவியிடம் கேட்டான் சேகர். கையில் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டு.
“சாரி சேகர், சேர்வாரோடு சேர்ந்து ஆரம்பித்த இதை அவ்வளவு சுலபமாக விட முடிய வில்லையே சேகர்.”

“நேற்றே சொன்னேன் இது பெண்களுக்கு அழகல்ல என்று.”
“ஆண்களுக்கு அழகு தந்த ஜீன்ஸ் பெண்கள் அணிந்த போது அப்படித்தான் சில பத்தாம் பசலிகள் சொன்னார்கள். இப்பொழுது? ரசிக்கிறார்கள். வேஷ்டி கட்டிற எங்கப்பாவும், 12 முழ சேலை கட்ற எங்கம்மாவும் எங்களை அந்த ட்ரஸ்ஸிலே பார்த்து பூரித்துப் போகிறார்கள்.”
“சாரிடா, ஆபிசுக்குப் போகப் போகிற நீ அங்கையும் இதைத் தொடர்ந்தால் எல்லோரும் உன்னை ஒரு விதமாய் பாப்பாங்க டியர்.”
“பார்க்கட்டும்! அதனால் எனக்கு என்ன ஆயிடும்? உங்கள் உடம்புக்கு இது நல்லதில்லை, என்று சொன்னால் மட்டும் ‘சாரிடா, கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொல்கிறேன்’ என்று சொல்லி விட்டு தினம் மூனு பேகிட் சிகரெட்டை ஊதித் தள்ளுகிறீர்கள். நாங்க புகைச்சா ஆ… ஊ… என்று அலட்டிகிறீங்க”
“சாரிம்மா… இனி நான் சிகரெட் பிடிக்க வில்லை. உன் கையிலிருக்கிறதை எறி” என்றவன் தன் கையிலிருந்த சிகரெட்டை தூக்கி எறிந்தான்.
பிரபாவும் வீசி எறிந்தாள் குறுஞ்சிரிப்போடு.