வெருவந்த செய்யாமை
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பிறர் அஞ்சத்தக்க காரியங்களைச் செய்யாதுவிடல்
“பெருங்குன்றூர் கிழார்” என்ற புலவர் தம் வறுமை நீங்கப் பரிசிலை விரும்பிச் சேரமான் குடக் கோச் சேரலிரும்பொறையிடம் சென்று தம் வருகையை அறிவித்தார். சேரன் தனக்குப் பேசுதற் குரிய சமயம் இல்லை என்று கொடுமையான பார் வையுள்ள முகத்துடன் கூறினான். அப்போது புலவர், அறமில்லாத பார்வையுடனே கூடி நும் போல்வார் யாவரும் இதற்கொத்த அறிவையுடைய வராய் அருள் மாறுவாராயின் எம்போல்வார் இவ்வுலகத்துப் பிறவாதொழியக் கடவர் என்றார். இதனால் உன் செல்வம் பேயால் காணப்பட்டுக் காக்கும் செல்வதிற்கு ஒப்பாம் என்ற கருத்தை அடக்கிக் கூறிச் சென்றார். வள்ளுவரும், ‘காண்பதற்கு முடி யாதவனும் கடுகடுத்த முகத்தையும் உடையவனது செல்வம் பேயின் கையில் உள்ள செல்வம் போல் எவர்க்கும் பயன்படாது” என்று கூறியுள்ளார்.
அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ்செல்வம்
போய்கண் டன்ன துடைத்து. (41)
அரும் செவ்வி = தன்னைக் காணவேண்டும் என்பவர்க்கு அரியதாகிய காலத்தையும்
இன்னா முகத்தான் = கண்டால் இனிமை இல்லாத கடு கடுத்த முகத்தையும் உடையவனது
பெருஞ் செல்வம் = மிக்கபொருள்
பேய் = பேயால்
கண்டு அன்னது = காணப்பட்டது போன்றதொரு குற்றம்
உடைத்து = உள்ளதாகும்
கருத்து: எளிதில் காணக்கூடாதவனாகவும், கடிய முகத்தையுடையவனாகவும் இருக்கும் அரசனது செல்வம் பேயின் கையில் உள்ள செல்வம் போல் எவர்க்கும் பயனில்லை.
கேள்வி: எத்தகைய அரசனது செல்வம் எவர்க்கும் பயன் அளித்தல் இல்லை?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.