விஸ்வரூபம்…!





வில்வத்தை விடவும் மார்க் கம்மிதான் காமேஸ்வரன். படிப்பு வேலை இப்படி எல்லா விஷயத்திலயும் காமேஸ்வரன் கம்மிதான். ஆனால் ஏனோ தெரியவில்லை வில்வத்துக்கு அவன் மேல் அப்படியொரு துவேஷம். ஏன்னே தெரியலை!.

சிலபேர் அப்படித்தான் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு நெனைக்கறது. இது என்ன மனப்பான்மை. ஏன் இப்படி மனம் சிந்திக்கிறது? சிலருக்கு!. விடை தெரியாமலேயே விடிந்துவிடுகிறது ஒவ்வொவரு நாள் பொழுதும்.
ஒரு நாள் வில்வத்தைக் காமேஸ்வரன் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. அப்போது அங்கே, கூடப் படிச்ச எல்லாரும் கூடியிருந்தார்கள்.
‘ஏண்டா ரெண்டு பேரும் இப்படி ‘எலியும் பூனையுமா’ எப்போதும் இருக்கீங்க?! ரெண்டு பேரும் ஒரே ஊர். ஒரே ஸ்கூல் ஒரே தெரு, ஒரே வகுப்பு, இருந்தும் ஏனிந்த வகுப்பு வாதம்?’ கேட்டான் தேவராஜ்.
அன்னைக்குத்தான் அந்த ஆத்ம ரகசியத்தை அவிழ்த்துவிட்டான் வில்வம்.
‘அது வேற ஒண்ணுமில்லைடா நான் படிக்கும் போது ஒருநாள் அந்த ஊமக்குத்து வாத்தியார் இருந்தாரே.. சிலுவைப் பிச்சை, அவர்ட்ட இவன் எனக்கு அடி வாங்கிக் குடுத்துட்டாண்டா! நான் ஒண்ணுமே பண்ணலை! ஆனா, இவன் ஏன் எனக்கு ஊமக்குத்தாண்ட்ட என் முதுகுல குத்துவாங்கிக் குடுத்தான்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை!’ என்றான் வில்வம்!.
காமேஸ்வரனுக்கு ஒண்ணு புரிந்தது…’நமக்கே தெரியாம எதுக்கோ அடி வாங்கிக் கொடுத்திருக்கோம் அவனுக்கு! இவன் மார்க்கும் வேலையும் முன்னேற்றமும் இன்ன பிற வளர்ச்சியும் பெரிதாய்த் தெரியாத அவனுக்கு ஊமக்குத்துத்தான் அவன் முதுகுல அடிச்சதுதான் முத்திரையாப் பதிஞ்சிட்டுது.
வாழ்க்கை இப்படித்தான் நேரடியாக மோதினவர்களை மன்னித்துவிடுகிறது அவர்கள் தப்பை மறந்தும் விடுகிறது. ஆனால் எப்போதும் யாராலும் மறக்க முடியா வடுவாய் நிற்பது ஒன்றே ஒன்றுதான் உலகில் அது…முதுகுகில் குத்தும் குத்துதானே?!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |