விசுவாசி






குருவுக்கு வேறு வேலை கிடைக்காததால் இந்த விசுவாசி பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்தான்.
பணத்தை வாங்கிக் கொண்டு பொய் செய்திகளை போடுவதை அவன் விரும்பவில்லை அதனால் அடிக்கடி அவனுக்கும் முதலாளிக்கும் கருத்து மோதல் ஏற்படும்.
அதைப் பார்த்த முதலாளி மனைவி,
“ஏங்க நீங்க போடுற உப்பைத் தின்னுட்டு உங்களையே எதிர்க்கிறான், அவனை இன்னும் வைச்சிருக்ணுமா?”
“பின்னே என்னடி, அவனை வெளியில் விட்டா பத்திரிக்கை நுணுக்கம் தெரிஞ்சிகிட்ட அவன் ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சு நம்மைத் தூக்கிடுவான். அது புரியாம பேச வந்துட்டே பைத்தியம்”.
ஓ! இதிலே இப்படியொரு கோணம் இருக்கா?. தெளிந்தாள் மங்கா.
பெயர்: சரஸ்வதி ராஜேந்திரன் புனை பெயர்: மன்னை சதிரா ஊர்: மன்னார்குடி இந்த வலைப்பூவில் எனது சின்ன சிறுகதைகள் வலம் வரப்போகிறது நிண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம், அந்த காப்பி இன் தரத்திற்காக. காப்பிஇன் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்ன சிறுகதைகளில் தரம், மனம், சுவை…மேலும் படிக்க... |