வாடகை வீடு – ஒரு பக்கக் கதை






வீட்டு வாசலில் இருந்த ‘டூ லெட்’ போர்டை அகற்றிக் கொண்டிருந்த சாம்பசிவத்தைப் பார்த்ததும் ஆச்சரியமானார் சங்கரன்.
‘’மாடி போர்ஷனுக்கு ஆள் வந்துட்டாங்களா,..நீங்க கண்டிஷன் போட்ட மாதிரியே வெஜிடேரியன்தானே சாம்பு’’ என்றார்.
பதில் சொல்லாமல் சிரித்தார் சாம்பசிவம்.
‘’என்ன அர்த்தம் இந்த சிரிப்புக்கு’’
‘’சைவம் சாப்பிடறவங்களுக்குத்தான் வீடுன்னு சொன்னேன். இப்ப வந்திருக்கிறது அசைவம் சாப்பிடறவங்கதான். காரணமாதான் ‘என்வி’க்கு வீடு விட்டேன்.
‘’சுத்தமா புரியலை’’
காய்கறி விக்கற விலையிலே வெஜ் சாப்பிடறவங்களால வாடகை ஒழுங்கா கொடுக்க முடியுமான்னு தெரியலை. அதே நான் வெஜ்காரங்கன்னா ரெண்டு முட்டையை உடைச்சி குழம்பு வச்சிக்கூட சாப்பாட்டை சிக்கனமா முடிச்சுடுவாங்களே. அதான் ரகசியம் என்றதும் திகைத்துப் போனார் சங்கரன்
– 2-2-11