வாக்களிப்புக் காத்தல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2024
பார்வையிட்டோர்: 810
(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்
ஒருவன் பிறருக்கு யாதொன்றினைப் பற்றியாவது வாக்களிப்புச் செய்தால், அதனை அவன் காப்பாற்றிக் கொள்வானென்று எதிர் பார்த்து அவர்கள் தங்கள் வேலை களை அதற்குத் தகவே ஒழுங்குபடுத்தி வைக்கின்றனர். அவன் தான் சொன்ன சொற்படி நடந்துகொள்ளாவிட் டால்,வாக்களிக்கப்பட்டவர்கள் ஏமாற்றமடைந்து போவ துந் தவிர, அவர்கள் செய்ய எண்ணிய வேலைகளெல்லாந் தாறுமாறாகப் போய்விடுகின்றன. இளமையிலாகட்டும் முதுமையிலாகட்டும் நாம்பிறர்க்கு ஒருவாக்குக் கொடுத்து விட்டால், அது நமக்கு நற்பயன் தராததொன்றாயினும், அதனை நாம் எவ்விதமாவது கவலையுடன் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். நாம் கொடுக்கும் சிறிய வாக்குக்களை யும் நிறைவேற்றாமல் நாம் பராமுகஞ் செய்துகொண்டு வருவோமானால், பிறகு அது முதன்மையான வாக்குக் களையும் அவ்வாறே எளிதாக எண்ணிவரும்படி செய்து -விடும். அதனால் நம்மை யறிந்தவர்களெல்லாரும் நம்மீது வெறுப்புற்று நம்மை ஏசவும் செய்வார்கள்.
1. மூரனும் ஸ்பானியனும்
பன்னூறாண்டுகட்கு முன்பு ஸ்பெயின் நாட்டை ஆப்பிரிக்க மூர்குலத்தார் கைப்பற்றிக் கொண்டிருந்தனர். அந்நாட்களில் ஸ்பானியன் ஒருவன் மூர்குலத்தாரின் ஓர் இளமகனைச் சிறு சண்டையில் கொன்றுவிட்டான். அந்த ஸ்பானியன் ஓடிப்போய் ஒரு தோட்டத்தின் மதிற்சுவரேறிக் குதித்துத் தன்னை துரத்தி வந்தவர்களுக்குத் தெரியாமல் ஓரிடத்தில் ஒளிந்துகொண்டான். அத்தோட்டம் ஒரு மூரனுடையது; ஆனாலும், ஸ்பானியன் அவனைத் தனக்கு அடைக்கலங் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டான்.
எவன் ஒருவன் தம்முடன் உண்டிருந்தானானால் அவனைக் காப்பாற்றிவிடுவது மூரர்களுக்குள் ஒரு வழக்கமாக இருந்தது. ஸ்பானியனுக்குத் தன்மீது நம்பிக்கை உண்டாகும்படி மூரன் அவனிடம் ஒரு கோவைக்கனியைக் கொடுத்து உண்ணச்செய்து, தன் தோட்டத்திலிருந்த கோடைக்கால விடுதியில் அவனை இருக்கச் செய்து, இருட்டானவுடன் தான் அவனை அதற்கு மேலும் மறைவான இடத்துக்கு அனுப்பிவித்து விடுவதாகவும் சொன்னான்.
இவ்வாறு அம்மூரன் ஸ்பானியனுக்குச் சொல்லிவிட்டு வீட்டுக் குட்போய் உட்கார்ந்துகொண் டிருந்தான். அப்போது ஒரு ஸ்பானியனால் கொல்லப்பட்ட அவனுடைய பிள்ளையின் பிணத்தினைத் தூக்கிக்கொண்டு ஒரு பெருங்கும்பல் அழுகைக்குர லுடன் அவன் வீட்டண்டை வந்து நின்றது. உடனே அம்மூரன் சிறிது பொழுதுக்கமுன் தான் அடைக்கலமீந்த ஸ்பானியனே தன் மகனைக் கொன்றவனென அறிந்தான். எனினும், வாக்குத் தவறி நடக்க அவன் எண்ணங் கொள்ளவில்லை. அவன் யாரிடமும் ஒன்றும் பேசாமலிருந்து இருட்டு வந்தவுடன் தோட்டத்தறைக்குச் சென்று, ஸ்பானியனைக் கூப்பிட்டு, அவனை விரைவிற் செல்லும் ஒரு குதிரையின்மேலேற்றி, ”கிறித்தவனே! நீ கொன்றவன் என் பிள்ளை; அதற்காக நீ கொடுந்துன்பம் நுகரவேண்டும். ஆனால், நீ என்னிடம் உறவு கொண்டிருக்கின்றாய்; ஆகையால் நான் வாக் குக் காப்பற்றிக்கொள்ளவேண்டும். நீ இருட்டிருக்கும் வரையில் பறந்து செல்லவேண்டும்; விடியுமுன் நீ இந்த இக்கட்டினின்றும். விலகிவிடுவாய்! என் மைந்தனைக் கொன்ற கொலைக்குற்றம் உன் மீதிருந்தபோதிலும், அதனை யான் நேரில் அறியாமற் போனதற் கும், என் வாக்குப் பழுதுபடாமல் நிறைவேற்றினதற்கும் யான் ண்டவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்,” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டான்.
2. பிரான்சிய அரசன் ஜான்
பிரான்ஸ் அரசன் ஜான் என்பவன் ஒரு காலத்தில் இங்கி லாந்து அரசன் எட்வர்ட் என்பவனால் போரிற் சிறைபிடிக்கப்பட்டு இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்டான். பின் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டான். ஜான் இவ்வாறு நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்துவந்தான். தான் சொல்லும் சில ஏற்பாடுகளுக் குட்பட்டு, தன்னுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொள்ளும்படி ஜன் பிரான்சியரை ஒப்பச் செய்யவேண்டும் என்கிற கட்டுப் பாட்டின் பேரில் எட்வர்ட் அவனை விடுதலைசெய்து அனுப்பி விட்டான். அவ்வேற்பாடுகளில் இடுதண்டமாக எட்வர்டுக்கு நூறிலட்சம் கிரௌன்கள் பிரான்சியர் கொடுத்துவிட வேண்டு மென்பது ஒன்று. இதற்குப் பிரான்சியர் ஒத்துககொள்ளாதபடி யால் உடன்படிக்கை நிறைவேறவில்லை.
தன் குடிகள் விடுதலைத்தொகையைக் கொடுக்க இணங்காமற் போகவே ஜான் தன்னாட்டிலேயே இருந்துவிட மனமொவ்வாதவா னாய்த் தானே இங்கிலாந்து சென்று எட்வர்டிடமே தன்னை ஒப் படைத்துக்கொள்ளத் தீர்மானித்துவிட்டான். பிரான்சு அரசனின் உடனாளிகள் அவன் எண்ணத்துக்கு மாறான சூழ்ச்சிகளெல்லாஞ் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், ஜான் அவைகள் ஒன்றுக்கும் ணங்கிவிடாமல், நாணயமும் அரசப்பற்றும் இவ்வுலகத்தை விட்டு ஒழிந்துபோய்விடுமானாலும், அவை அரசன் மனத்தின்கண் கோயில் கொண்டிருக்கவேண்டும்,” என்று சொல்லிவிட்டான்.
ஜான் தான் உறுதிகொண்டபடியே இங்கிலாந்துக்குச் சென்று, தன் ஆயுள்வரையில் அங்குச் சிறைப்பட்டே கிடந்தான்.
பதினைந்தாவது சங்கீதம் (கடவுள் முன்னிலையில்)
எண்ணத்திலும் செயலிலும் நன்மையையே தழுவி இருப்பவனும்; தன் மனத்துக்கு ஒவ்வாததொன்றைத் தன் நாவினாற் சொல்ல வெறுப்புக் கொள்பவனும்; தன் அயலானின் பெருமையைச் சிறுமைப்படுத்த முயலாதவனும்; அயலான்மேல் சொல்லப்படும் பழிச்சொல்லுக்குக் காதுகொடுத்துக்கேட்டுத் தூற்றாதவனும்; தீமையை அசட்டை செய்து தள்ளுபவனும்; உடையாலும் உருவத்தாலும் இழிந்தவர்களைப்போலக் காணப் படும் உண்மைத் துறவிகளுக்குத் தக்கவாறு பணிவிடை செய் யவனும்; தானே செய்துகொண்ட ஆணையில் நிலையாய் நிற்ப வனும்; தன் பணத்தை மிகைவட்டிக்குக் கொடுக்காதவனும்; குற்றப்படாதவர்களைக் கைக்கூலி வாங்கிக்கொண்டு கெடுக்காத வனும் ஆகிய இப்படிப்பட்டவர்கள் உன் முன்னிலையில் மகிழ்ச்சி யோடு வாழ்ந்துகொண்டிருப்பார்கள்; அவர்கள் மகிழ்ச்சி உறுதிப் படுத்தப்பட்டிருக்கின்றது; உலகம் நிலை கலங்கினாலும் இவர்கள் உன்னடியிலேயே ஊறுபாடின்றி உறைவார்கள்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.