கோவிட் இடைவேளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 26, 2026
பார்வையிட்டோர்: 53 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

ஈழத்து இளைஞர்க்கு சவால்கள் கூடிப் போய் விட்டிருக்கின்றன​, இயல்பாக​ வாழ​ முடியாத​ நிலையிற்கு தள்ளப்பட்டிருக்கிறான், இலங்கை பயங்கரவாத​ பூதமாகவே உருப்பெருத்து விட்டது,எந்த​ மிருகமும் சவால் விடுற​ போது அதை எதிர் கொள்ளவே வேண்டியிருக்கிறது,யாழ் இளைஞர்களுக்கு 77 ம் ஆண்டிலேயே போர்ப்பிரகடனம் விடப்பட்டு விட்டது,திரவியத்திற்க்கு மங்கலான​ எழுத்தில் தெரியத் தொடங்கியது 84ம் பகுதியிலே தான், ‘முடியுமா, சண்டியக்குழுக்களாக​ நிற்கிற​ இலங்கைப்படைகளை எதிர்த்து நிற்க முடியுமா?’, சுய வட்டத்திலே நிற்க​ முடியாத​ அவன்,.. போர்க்கோலம் பூண்டு தைரியமாய் நிற்க​ முடியுமா?’ ‘முடியாது’ என்று சொல்வதை விட​’முடியும்!’என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்பது தான் தர்மம், நிற்கிற​ போதே நிலமையை ஒரு அலசு அலச​ முடியும், இலங்கை சபிக்கப்பட்ட​ படுகொலைகளின் தேசம், நாம் சிங்களவர்களை விரோதமாக​ குரோதமாகப் பார்க்கவில்லை, ஆனால், ‘காணாமல் போனோர்களுக்காக​ நீங்களும் குரல் எழுப்ப​ வேண்டாமா?,..ஏன் எழுப்புவதில்லை’ என்றே ஆச்சரியம்.

இஸ்ரேல் பாலாஸ்தீன​ நிலங்களில் நடத்துற​ தாக்குதலின் போதும் புலம்பெயர்ந்தவர்கள் இதே போலவே இருக்கிறார்கள், சமயத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நடத்துற​ எதிர்ப்பு நிகழ்வுகளுக்கு எதிராக​ கொடி பிடித்து மட்டை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், மன​ அளவிடைகள் சமதரத்தில் இல்லாமல் கிடக்கின்றன​,உளவியல் ரீதியில் சோர்வடையச் செய்யும் வாழ்வின் நீட்சியில் (வாழ்தல் தொடர்பான​) நம்பிக்கைகளை இழந்து விடவே கூடாது, முன் எதிரே, எதிரிக்கெதிராக​ போராட​ வேண்டிய​ அவசியம் என்றுமில்லாது கூடிக் கிடக்கிறது, திணிக்கப்பட்டிருக்கிறது, ‘நமது கையில் ஆயுதங்களை திணித்தவர்கள் அவர்கள் தான்’ என்று தோழமையில் கூறக் கேட்டிருக்கிறான், தொடர்ந்தும் ‘நமக்கு எந்த​ மெசின்களையும் கையாளவும் தெரிய​ வேண்டுமடா!’ என்பார்கள்,அந்த​ நினைப்பில் இங்கே வந்த​ பிறகு ‘வெல்டிங்’ கோர்ஸும் எடுத்திருந்தான், ஆனால், அந்த வேலை தான் கிடைக்கவில்லை, ‘தூக்கிய​ ஆயுதமும் திரும்பி எங்களைத் தான் சுடுகிறது, இதுவும்,..இப்படி’ என்று கூற​, இங்கத்தைய​ நண்பன்’என்ன​ நீ கோழையாய் இருக்கிறாய், பகஃபயர்’இது !,..எல்லாத்திலும் கிடக்கிறது, இதைக்கட்டுப்படுத்தி தான் வெல்ல​ வேண்டும், முதலாளித்துவத்தில் இது அதிகம், கம்யூனிசத்தில் குறைவு, ஆனால், தொழிலாளிக்கு அதிகாரத்தை கொடுக்க​ விரும்புவானா ?, சூழ்ச்சி சதிகளால் அது இனம்,மொழி,..என​ எல்லாவற்றையும் எரிய​ வைத்துக் கொண்டு அந்தப்பிரிவில் பிரச்சனைகளை கூட்டிக் கொண்டேச் செல்லும், இலங்கையன் தமிழனை வாட்டுகிறான், அங்கேயும் தரகு முதலாளித்துவத்துக்கு எதிராகவும்​ போராட வேண்டும்’. ‘தோழர் இங்கே வந்தும் திருந்தவில்லை,..’ என்று சிரிப்பான், ‘டேய், இது தான்ரா நிலமை, நாம​ வென்று தான் ஆக​ வேண்டும், முதல் சந்ததி,’தேற​ மாட்டாது என்றளவில் குத்துப்பட்டு பையித்தியம் பிடித்து அலையுமடா, அது தான் நடக்கிறது, நீயும் ஒரு பையித்தியம்’என்கிறான், அவன் சொல்றதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது தான்,

அவனுக்கு ஈழக்கவிஞரும் சமூக​ நேயருமான​ செழியனின் கவிதை ஞாபகம் வந்தது, அவன் இன்றைய​ நிலைமையை எவ்வளவு தெளிவாகக் கூறுகிறான்.

‘மனிதத்தை துப்பாக்கி முனையில் நடத்திச் சென்று புதைகுழி விளிம்பில் வைத்து சுட்டு விட்டு, புறங்காலால் மண்ணை தள்ளி மூடி விட்டு, தெருவோரச் சுவர்களில் நியாயம் சொல்கிறார்களாம் நியாயம் !இது ஒரு அரசியல் தற்கொலை என​ உங்களுக்கு புரியவே இல்லையா ?

நமது மரணங்கள் நம்மவர்கள் கையால் நடக்கும் என​ தெரிந்திருந்தால் நான் போராடுவதற்கே வந்திருக்க​ மாட்டேன், சுதந்திரதிற்காகப் புறப்பட்டு சுதந்திரம் மறுக்கப்பட்ட​ மககளாக​ எவ்வளவு காலம் தான் வாழ்வது?

நீங்கள் நினைப்பதும் சரி,இப்படி எழுதியவன் வாழ்வு கடைசியில் குடியால் தான் முடிந்தது,அது ஒரு வகை தற்கொலை என்றே அவனுக்குப் படுகிறது,பாரதியும் கூட​ அப்பப்ப​ போதை பாவித்தவனாம், அது கூட​ தற்கொலை முயற்சிகள் என்றே தோன்றுகிறது,

இவன் எழுதிய​’ஒரு மனிதனி நாட்குறிப்பிலிருந்து,..’என்ற புத்தகத்தை கணனி நூலகத்தில் எடுத்து வாசிக்கதவறி விடாதீர்கள், புத்தகமாக வைத்திருந்தால் இலங்கைப் போலிஸார் பயங்கரவாதச்சட்டத்தின் உங்களை கைது செய்வர், திருந்தாத​ ஜென்மங்கள், தற்போது,.. இலங்கையில் பாடகரை கைது செய்த​ போது திரவியம்,’பாடகர், சிங்கள மொழியிலும் இப்பாடல்களை பாடி இருக்க​ வேண்டுமோ ?’என​ நினைத்தான், அந்த​ முயற்சியும் முன்னெடுக்கப்பட​ வேண்டியதொன்று தான், நாயை நடு ஆற்றில் விட்டாலும் குரைக்கிறதை விடாது, ஏன் வீண்வம்பு, அனைவரும் வாசிக்க​ வேண்டிய​ புத்தகம், அவன் கழுகு ரசிகன் இல்லை, ஆனால், பயங்கரவாதச்சட்டத்தில்,..நடப்பதை தான் அறவே வெறுக்கிறான், இதன் கீழே கணக்கு வழக்கில்லாமல் பலபேர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், ‘கதாநாயகர்கள் மேடை, பூங்கா ஒன்றை எழுப்பி விட்டால் எல்லாவற்றையும் சாட்சியமற்றாக்கி விடலாம்’ என​ ஐரோப்பிய​ சமூகங்கள் வேதம் ஓதுகின்றன​, இலங்கையும் அதன் கீழ் இருக்கிற ஒன்று தானே,அவயள் பக்கங்களை… மறைத்தும் எழுப்பியும் வருகிறது, எனவே, அவயளுக்கு தொடர்ந்தும்’பயங்கரம்’என​ காட்ட​ தேவை,. இருக்கிறது, சிங்கள​ அரசியலிடம் ஆயுதம்,அதிகாரம் இருக்கிற​ வரையில் புத்தமும் தர்மமும் காற்றிலே பறந்து கொண்டு தானிருக்கும்.

எவர் ஆயுதம் தூக்கினாலும் சரி, அது தன் குணத்தை தான் காட்டும்,அதன் துளைக்கு எதிரி, மனைவி மக்கள்,நண்பர் எல்லாரும் ஒன்று தான்,’சுடு’என்றால் சுட​ மட்டுமே தெரியும், விடுதலை அடையும் நாடுகள் ஆயுதங்களைப் ஏன் பெருக்கினமோ ? மற்ற​ நாடுகள் தாம் ஆயுதங்களை இவர்கள் கையில் கொண்டு வந்து திணிக்கின்றன​, சரி, இவர்களுக்கும் தான் புத்தி எங்கே போய் விடுகிற​து ?, தனது கொள்கைகளுக்கும் கருத்துக்களுக்கும்,..உலக நடப்புகளுக்கும் தொடர்பு ஏற்படுத்த​ முடியாமல் தவிக்கிறான்.

கோவிட் செய்த​ செய்கிற​ அறுவடையால் உலகமே அழிகிறது என்று சாத்திரிகள் 2000 இல் கூறியது காலம் தப்பி நடக்கிறதாகப் பதற்றம் பற்றி இருந்தது, இருக்கும் வரையில் எம்மை எவரும் ஒன்றும் செய்ய​ முடியாது,… என்றிருந்தத நம்பிக்கை கழன்று விடுமளவிற்கு லூசாகி விட்டிருக்கிறதே,’கோவிட்டை’ஒரேயடியாய் வையவும் முடியவில்லை, இச்சூழல் வரா விட்டால் இந்தப் பயணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க மாட்டாது, வாழ்க்கை இப்படித் தான் ஓடுகிறது என்பதையும் ஏற்றுக் கொள்ளவும்​ வேண்டும்.

கோவிட்டுக்கு முதலே, கண்ணால் பேசும் மகளின் வாழ்வு வரைகோடு சரிந்து இறந்து போய்யிருந்தாள், எனவே எங்கையாவது வெளியில் போய் வாரதே நல்லது எனப்பட்டது, நகரமே ஆமைப்பூட்டு போட்டு மூடியது என​ சுனாமி போல​ ஏற்பட்டு விட்ட​ நிலமை தணியுமா ? என்பதே பெரிய கேள்விக்குறியாய் கிடந்தது, வக்சீன் கண்டு பிடிப்பார்களா ?,.. என​ ஒரு வருசமே ஓடி விட்டது,மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின​, அதிலேயும் பனிப்போர், ரஸ்யா முதலில் கண்டு பிடித்தது, சீனாவும் இரண்டாவதாக​ சேர்ந்தது, அமெரிக்கா, சீனா தான் பரப்பியது என​ பொய் பேசி அதையும் விலத்தியது, அவற்றை விருத்தி செய்ய​ மேற்கும், ஐரோப்பாவும் தயாரில்லை, முதலில், இந்தியாவும் இங்கிலாந்தும் கூட்டாக​ கண்டிருந்ததே உத்தியோகபூர்வ​ வரவாக​ இருந்தது, பிறகான கண்டுபிடிப்புக்களும் பயன்பாட்டுக்கு வர​​…அடுத்த​ வருசமும் கழிந்தது, இவர்கள் கொடுத்ததை விட​ மற்றவர்களே இலவசமாகவும், ..கொடுத்து உடனடியாக​ ஆபிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்குக் கொடுத்து இந்தளவிற்காகவாது கட்டுபடுத்தி இருக்கிறார்கள்.

ஒரு வக்சின் ஏற்றல் நடந்தது,இரண்டாவதை ஏற்றிய​ பிறகு’கனடாவில் பயணிக்க​ முடியும்’என​ பிரதமரின் அறிவிப்பு வெளியாகியது, பதற்றத்தை வெகுவாக​ வக்சின் தணித்து விட்டிருந்தது, இருந்த​ போதிலும் தினமும் கோவிட்டுக்கு பலியாகும் மனிதர்கள் இருந்து கொண்டேயிருந்தார்கள்,பெருமளவில் என்பது குறைந்திருக்கிறது தவிர​ பலிகள் நிற்கவில்லை,இரண்டாவதை ஏற்றிய​ பிறகு, இருவருக்கும் இதயத்தில் சிறு படபடப்பையும் கொண்டு வந்தது, விமானங்களை பறக்க​ அனுமதித்ததில் மனைவியின் வைத்தியர் பச்சைக் கொடி காட்டி விட​, திரவியமும் விஜயாவும் அவனுடைய​ தங்கை மணிமலரின் அழைப்பை ஏற்று வாயுகனடா விமானத்தில் ஏறினார்கள், பறக்கும் யந்திரத்தில் ஏறித்தான் எவ்வளவு காலம் ஓடி விட்டிருக்கிறது.

ஏறத்தாழ​ ஏறியதே மறந்து போய் விட்டது, விஜயா சிறுமி போல​ ஊர்தியின் உள்ளே பார்க்கிறாள், காலம் கரைந்தது கொஞ்சநஞ்சமா என்ன​, இலங்கையில் ஈழத்தமிழர்க்கு விதிக்கப்பட்டிருக்கிற​ சராசரி ஆயுள்காலமே கடந்து விட்டது, ஆற்றோட்டமுள்ள​ சிலர் – மனிதர் வாழ்விலும் கடவுள் இப்படி தான் எழுதி விடுகிறார்,அன்று தொழினுட்பக்கல்லூரி நண்பன் ஒருவன்’ஒவ்வொரு மனிதர்களும் தம்மை கடவுளாக​ நினைக்க​ ஆரம்பித்ததில் இருந்து தான் இந்த​ அவலம் எல்லாம் தொடங்கின​’என்று கூறியது நினைவுக்கு வந்தது, இவ்வளவு காலமும் காயத்திரி பின்னால் ஓடிக் கொண்டிருந்தார்கள், கடவுள் இவளையும் இவர்களோடு சேர்த்து விட்டாரே, மலர்களாக​ சிரித்த​ கண்ணை மூடிவிட்டாலும், உள்ளத்தில் சிரிச்சமுகத்தில் அழகாக​ முளித்துக் கொண்டு தான் இருக்கிறாள், கண்ணால் பேசி… அவன் மடியில் இருப்பது போல​ தோன்றிக் கொண்டேயிருக்கிறது,அதிருஷ்டம் கெட்ட​ பிறவி அவளா,..அவர்களா ?, அவளோடு சேர்ந்து அவன் உயிரும் போய் விட்டது.

‘பிறந்தால் ஊர் நிமிர​ வாழ​ வேண்டும்’என்ற​ அவன் கனவு நனவாகவில்லை,மாணவனாய் இருக்கிற​ போதே ஓரளவு நாயகனாய் உருப்பெற்றிருந்தால் தான் ஒருவேளை சொல்லும்படியாக​ வாழ​ முடியுமா? நாட்டின் அரசியலைச் சொல்வதா, அறிவியலில் நாட்டமற்ற​ சமூகத்தைச் சுட்டுவதா?

குலுக்கலுடன் ஊர்தி தரையிலிருந்து மேலேறுகிறது, இவர்கள் நினைப்பதொன்று,விதி நினைக்கிறது ஒன்று, விஜயா கையைப் பிடித்தாள்,’சுவிங்கம் வேண்டுமா?’என்று கேட்கிறாள், மணிமலரின் மூத்தவள்’காதடைக்கும் அடைப்பை வைத்து சுவிங்கமும் மெல்லுவது நல்லம்’என்று கூறி இருந்தாள்,’வேண்டாம்’என்கிறான். எதையும் தாங்கும் குரங்கு அவன், ஊர்தி கோதுக்குள் குட்டி குட்டி ஜன்னல்களின் அடைப்பை நீக்கி வெளியில் பார்க்கலானார்கள். அலுத்து விட்டதால் சிலர் மூடியும் விட்டிருந்தனர்,ஏறுகிற​ போது நிலத்திலுள்ளவை சிறுசுகளாக​ மாறி விடுகின்றன​, மேகங்களை ஊடுருவி பறக்கிறது, பக்தி திரைப்படங்களில் நிறைய​ வெள்ளை பஞ்சு மேகங்கள் மிதப்பதை காட்டுவார்கள்,கற்பனையில் காட்சிகளை வடிவமைத்திருப்பதாக​ நினைத்திருந்தான், இவற்றைப் பார்க்கிற​ போது தான் புரிகிறது, அகதியாய் ஏறிய​ விமானம் இதை விட​ மடங்கு பெரியது பிரமாண்டம் அதில் ஜன்னல் இருந்ததே ஞாபகம் இல்லை,

தரைக்கு மேலே மிதப்பது அலாதியான​ அனுபவம் தான்,முன் சீட்டில் இருந்தவருக்கு விரைவில் அலுத்து விட்டது, கறுப்பு அடைப்பை இழுத்து மூடி விட்டார், பல​ தடவைகள் பறக்கிறவர் போல​ இருக்கிறது, இந்த​ விமானத்தில் இரு கழிவறைகள் இருந்தன​, பின்னால் இருக்கிற​ ஒன்றையே பயணிகள் பயன்படுத்தினர், ஆகாயத்தில் நடக்க​ வேண்டாமா? கழிவறைக்கு நடந்து சென்றான், கிடக்கிற​ குட்டி அறையிலும் மனிதனால் ஜீவிக்க​ முடியும் என்பதை உணர்த்துகிறது, நாமோ தொடர்மாடி வீடுகளில்’இடம் போதவில்லை’என்று சொல்லி விமர்சிக்கிறோம்,யப்பானியர் குட்டி ஹொட்டல்களைக் கட்டி பயிற்சி எடுக்கிறார்கள்,விண்வெளிப்பயணம் அப்படிப் பிழங்கிறதையே கட்டாயப்படுத்துகிறது, தாயகத்தில் நாம் குடியிருக்க​ ஒரு ஏக்கர் காணி ( வீடு , விவசாயம் செய்ய​,..) இல்லை எனப் போராடுகிறோம், எங்களுடைய​ நிலத்தை’தன்னுடைய​ உடமை’ என்கிறார்களே, அது தான் கொந்தளிக்க​ வைக்கிறது, உரிமை, உடமை தாம் பயங்கரங்கள் என்பதை அறிய​ நாம் ஒருநாளும் ஆன்மீகவாதி ஆகப் போவதில்லை,’பக்திமான்’கைவந்த​ கலை,சாகிற​ வரையில் கெளரங்களுடன் தொடரப் போகிற​ கலை,அவனுள் குமுறல்கள், சுத்தமாக​ இருக்கும் கழிவறையில் கைக்கு சோப் போட்டு கழுவ​ குட்டி நீர்த்தொட்டி கிடக்கிறது,கை துடைக்க​ உலர​ வைக்க​ தான் தேட​ வேண்டியிருந்தது, இல்லாட்டி என்ன​ காற்சட்டையில் துடைக்க​ சொல்லியா தர​ வேண்டும், வந்து சீற்றில் அமர்கிறான், தள்ளு வண்டி ஒன்றில் பானம்,தேநீர், டீ,. திண்பண்டங்கள் வருகின்றன​, இலவசம் இல்லை, முன்னொரு காலத்தில் இருந்தது, பின்னால் வங்கிமட்டை மெசினுடன் அறவிட​ ஒருவர் வருகிறார்,தரையை விட​ பறப்பில் இரண்டு -மூன்று விலை, தரம், வெற்று தண்ணீர்ப் போத்தலைக் கூட​ எறியாது வீட்டில் அழகுப் பொருளாக​ வைக்கலாம்.

இருவரும் ஒவ்வொரு தண்ணீர் போத்தல்கள் வைத்திருந்தார்கள், இரண்டு மணிநேர​ பறப்பு தானே, அதோடு கொறிக்கிறதுக்கு,..சிறிய​ கடலைக கலந்த​ சொக்கிலேற்று நீட்டங்கள் கொண்டு வந்திருந்தாள், விஜயா ஒரு பக்கற்றை எடுத்து அவனிடம் தருகிறாள், மென்று கொண்டு…கொண்டு வந்த​ சஞ்சிகையை எடுத்துப் புரட்டுகிறான், ‘தொடர்ந்தும்,.. எறிகணைகளின் கோரப்பசிக்கு பலியாகி மாண்டனரோ இல்லை முதலை விழுங்க​… படையினரிடம் அகப்பட்டுக் கொண்டனரோ?, களமுனையில் வாகனங்களை ஓட்டியவன் கட்டடவேலைகளில் வாழ்வை ஓட்டுகிறான்,காலங்கள் கரைந்தாலும் காயாத​ நினைவுகளில் தோழமையை மீட்டுகிறான், அழித்து சிதைக்கலாம், ஆனாலும் புதைத்த​ இடங்கள் மறந்து போகாது உயிர்ப்பெற்று… பெற்றோர்களை இழந்த​ (சிறுவர்) அனாதை இல்லங்கள் கணக்கற்றுக் கிடக்கின்றன​,’காந்தி கண் கொண்டு பார்க்க​ காலமும் கருணை கொண்டதாகவும் இல்லை, வெற்றிச்செல்வியின் கவிதையை கட்டுரை அலசுகிறது.

ஒருத்தரின் அனுபவம் சிறுகதையாய் எழுதுற​ போது அவன் மிகப் பெரிய​ உளவியல் சிக்கலை எதிர் கொள்கிறான், சவாலாகவே இருக்கிறது, உண்மையாக​ இருக்க​ வேண்டிய​ நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது, பிறரது பார்வையில் எப்படியோ…, தன்னில் தோல்வியை உணர்கிறான், புனைவுக்குட்படுத்தி எழுதும் போது சிக்கலுக்குள் வேறு விழுந்து விடுகிறான்,எழுதி முடித்த​ பிறகு அவன் இயல்புக்கு வர​ பல​ நாட்கள் எடுக்கின்றன​,சிலவேளை மூளைபிசகி தெருவில் அலையவும் வேண்டி நேரிட்டு விடுகிறது, அவன் பார்ளிமெண்T வெலசி வீதியில் அப்படி ஈழத்தமிழர்களைப் பார்த்து 2,3,.. பேர்களைப் பார்த்து விட்டிருக்கிறான்,’அண்ணே,..’என்று கையை நீட்டுவார்கள், சிறுதடி ஒன்றையும் தோளில் சரித்து வைத்து’பயிற்சி’என்கிறான் ஒருத்தன், மனவறைக்குள் பலவிதமான​ எண்ணங்கள் நுழைந்து கிடக்கின்றன​.

தொடர்ந்தும் புகுவதற்கு அணை கட்ட… கதையாய் எழுதி விட​ வேண்டியதும் அவசியம் ..!

தமிழர்கள் எண்ணற்ற​ அபத்தங்களுடனும் கூடிய​ தாழ்வுச்சிக்கல்களுடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

விமானம் சமன் தப்பி சிறிது​ தளும்புறுது, பலத்த​ காத்து,..வீசுது போல​ வானின் பயமுறுத்தல், விஜயா கண்ணை மூடி,..கும்பிட்டுக் கொண்டிருக்கிறாள், தரையை விட​ காற்றில் மிதப்பதில்,..பயங்கரம் காவித்தான் இருக்கிறது, பிறகு இயல்பாகி இறங்கத் தயாராகிறது, இதிலே வேலை செய்ற​ பணியாட்களுக்கு,..’பயங்கரம் நிதம் நிதம் காவிக் கிடக்கிறது’. அனுதாபம் பிறக்கிறது, நம்மைப் போல அவலங்களை சுமக்கிற​ ​ மக்கள்,..மற்றைய​ நாடுகளிலும் இருக்கிறார்கள், விமானத்தில் ஏறினால் உங்களுக்கும் எல்லா ஞானங்களும் வந்து கரையும், மணிமலர்’விமான​ நிலையத்திற்கு அருகில் இருக்கும் ரிகொற்றனில் நிற்கிறேன், பரிசோதனை முடிந்த​ பிறகு தொலைபேசியில் அழை வருகிறேன்’என​ வாட்ஸ அப்பில் செய்தி வருகிறது, கிங் மாவட்டப்பிரிவிலிருந்து நூறு கி.மீற்றர் தூரத்திற்கு கார் ஓடிவந்து கலிபஸ் விமான​ நிலையத்திற்கு அருகில்… காத்திருக்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *