கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 2,740 
 
 

பஞ்ஞமி கோயில் போய் அர்ச்சனையை கொடுத்து விட்டு ஓர் ஓரத்தில் அமர்ந்தாள், நடந்து வந்தது அசதியாக இருந்தது அவளுக்கு. என்ன தான் வயதை மறைக்க,தலைக்கு டை அடித்து, கொஞ்சம் மேக்கப் போட்டு இருந்தாலும்,இந்த மாதிரி சமையங்களில் வயதை காட்டி கொடுத்து விடுகிறது. இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்தவள், தற்போது நான்கு பேரக் குழந்தைகளுக்கு பாட்டி, அவர்களும் வளர்ந்து விட்டார்கள், பிறகு எப்படி பஞ்ஞமிக்கு வயது போகவில்லை என்று சொல்வது, பார்ப்பதற்கு ஒல்லியாக தான் இருக்காள், முகத்தில் கொஞ்சம் சுருக்கம்,மாநிறம் இளமையான காலத்தில் அழகாகவே இருந்திருப்பாள் என்று அவளை பார்ப்பவர்களுக்கு நினைக்கத் தோன்றும். இல்லை என்றால் பார்த்தவுடனே எனக்கு பிடித்திருக்கு, இவளையே திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று கதிர்வேலன் தன் பாட்டியிடம் பிடிவாதமாக சொன்னதால் நடந்த திருமணம் இது. பெற்றோர்களுடன் கோயில் வந்திருந்த பஞ்ஞமியை,பாட்டியுடன் வந்திருந்த கதிர்வேலன் பார்த்துவிட்டு, தன் பாட்டியின் காதுக்குள்,கோயிலுக்கு ஒரு அழகான பொண்ணு வந்திருக்கு பாரேன் என்றான்.

இப்ப அதற்கு என்ன என்றாள் பாட்டி.உனக்கும் வயது போகிறது,எவ்வளவு நாட்கள் தான் எனக்கு சமைத்து போடுவ என்றான்.அது எல்லாம் நான் சமைத்து போடுவேன்,உனக்கு அந்த பொண்ணை கட்டிக்கனும் அது தானே என்றாள் பாட்டி. பாக்க அழகாக தான் இருக்காள்.உடனே போய் பொண்ணு கேட்க முடியுமா,விசாரிக்க வேண்டாமா குலம் கோத்திரம் எல்லாம் என்றாள் பாட்டி.உனக்கு இதே தான், உன் பேரன் கல்யாணம் கட்டாமல் அழையப் போறான்.அப்ப உன் வம்சமே வளராமல் போகப் போகுது, இப்படியே ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டு இருந்தால் என்று பயம் காட்டினான் பாட்டியை.சரி விடுடா,நான் பேசி பார்க்கிறேன் என்று பேரனை சமாதானம் படுத்தினாள் பாட்டி.முடிந்தால் அவளை கட்டி வைத்து விடு என்று பாட்டியிடம் பிடிவாதமாக சொன்னான் அவன்.கோயில் வந்திருந்த பஞ்ஞமி குடும்பத்தினரின் அருகில் போய் நின்றுக் கொண்டாள் பாட்டி.மெதுவாக பஞ்ஞமி அம்மாவைப் பார்த்து சிரித்த பாட்டி,உங்களை இதற்கு முன்பு எங்கோ பார்த்த மாதிரியே இருக்கு எனக்கு என்றாள் அவள். அப்படியா உங்களை நான் பார்த்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லையே என்றாள் பஞ்சமி அம்மா.

அதற்கு என்ன இப்போது அறிமுகம் ஆகிக்குவோம் என்று மெதுவாக பேச்சி கொடுத்தாள் சுபலட்சுமி, அதன் பிறகு பஞ்ஞமி அப்பா,பஞ்ஞமி இவளிடம் நன்றாகத் கதைத்தார்கள், அவர்கள் இருக்கும் இடத்தையும் தெரிந்துக் கொண்டாள்.எனக்கு ஒரே பேரன் கதிர்வேலன் என்று அறிமுகம் படுத்தி வைத்தாள்.அவன் மரியாதையுடன் வணக்கம் என்று கூறிவிட்டு, ஒதுங்கி கொண்டான். அவர்கள் மகளுடன் வந்து இருக்கும் போது,இவன் அதிகமாக கதைத்தால் அவர்கள் இவனை தப்பாக நினைப்பார்கள்,பிறகு பொண்ணு கொடுக்காமல் போய் விட்டுவார்கள் என்ற பயத்தில் அமைதியாக இருந்தான் அவன்.சுபலட்சுமி உங்கள் குடும்பத்தை எனக்கு மிகவும் பிடித்திருக்கு,ஒரு நாளைக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று பஞ்ஞமி அம்மாவிடம் கூறினாள்.கட்டாயம் வாருங்கள் என்று கூறிவிட்டு பஞ்ஞமி குடும்பம் சென்று விட்டார்கள்.அவர்கள் போனப் பிறகு கதிர்வேலன் பாட்டியிடம் என்ன பாட்டி சொன்னார்கள் அவர்கள் என்றான்.ம்..பொண்ணு பாக்க வரசொன்னார்கள் அப்படியே முகத்தில் இரண்டு போட்டேனா நீ அடங்குவ என்றாள் பாட்டி.ஏன் பாட்டி என்ன தான் சொன்னார்கள் அவர்கள் என்றான் கதிர்வேலன்.கொஞ்சம் பொறுமையாக இருடா, இப்ப தானே அவர்களிடம் அறிமுகமே ஆகியிருக்கேன் எடுத்தெடுப்பில் பொண்ணு கேட்க முடியுமா.ஒரு நாளைக்கு அவர்கள் வீட்டுக்கு போக வேண்டும்.உன்னைப் பற்றி எடுத்து கூறவேண்டும் என்றாள் பாட்டி.எனக்கென்ன பாட்டி,அழகாக இருக்கேன், நீ என்னை படிக்க வைத்திருக்க,இதைவிட வேறென்ன பாட்டி என்றான் அவன். நீ பாட்டியிடம் வளர்ந்தவன். அதற்கு காரணம் கேட்பார்களே என்றாள் பாட்டி.

கதிர்வேலன் அமைதியாக இருந்தான்.சரிசரி நாங்கள் அவர்கள் வீட்டுக்கு ஒருத்தடவை போய் வந்தப் பிறகு அதை முடிவு பன்னலாம்.இப்ப வா வீட்டுக்கு போகலாம் என்று அழைத்தாள் பாட்டி.ஒரு நாள் சுபலட்சுமி பேரனுடன் அவர்கள் வீட்டுக்குப் போனாள்.வயதாகி விட்டது தனியாக எங்கும் போக விட மாட்டேங்கிறான் பேரன்,அதனால் தான் அவனையும் அழைத்துக் கொண்டு வந்தேன் என்று சமாளித்தாள் அவள்.அதற்கென்ன நம்ம வீட்டுக்கு தானே என்று பஞ்ஞமி அம்மா சொன்னப் பிறகு தான் நிம்மதியாக இருந்தது அவளுக்கு.மெதுவாக பேச்சி வாக்கில், பஞ்ஞமிக்கு மாப்பிள்ளை பார்க்கும் வயது தானே என்றாள் பாட்டி, ஆமாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். நல்ல குடும்பமாக,நல்ல பையனாக கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்றவுடன், கதிர்வேலன் முகம் சுருங்குவதை பாட்டி கவனித்தாள்.

நல்ல பையன் கிடைத்தால் போதுமே,இந்த காலத்தில் அதுவே பெரிய குதிரை கொம்பாக தானே இருக்கு என்றாள் பாட்டி.அதுவும் ஒரு வகையில் சரிதான் என்றார் பஞ்ஞமி அப்பா. என்னிடம் தான் வளர்ந்தான் என் பேரன் நன்றாகத் தானே இருக்கான் என்றாள் பாட்டி.ஏன் உங்களிடம் வளர்ந்தார், அவர் பெற்றோர்கள் என்றாள் பஞ்ஞமி அம்மா.அவர்கள் இருந்தும் இல்லாத மாதிரி தான் இவனுக்கு.அவர்களுக்கு ஒத்துப்

போகவில்லை,பிரிந்து தனிதனியாக வேறு துணையோடு வாழ்கின்றார்கள்,மகனை பார்த்துக் கொள்வதற்கு இருவரும் போட்டிப் போட்டார்கள்,நான் தான் அவன் என்னுடன் இருக்கட்டும், நீ என் வயிற்றில் பிறந்தவளே இல்லை,இனி என் வீட்டுப் பக்கமே வந்து விடாதே என்று மகளிடம் கத்திவிட்டு,மருமகனிடம் உங்களுக்கு எல்லாம் எதற்கு பிள்ளை, இனி ஒரு நாளும் இவன் எங்கள் குழந்தை என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டு என் வாசலை மிதிக்க கூடாது என்று ஆவேசத்துடன் கூறிவிட்டேன், ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் இவனை தூக்கி கொண்டு வந்து விட்டேன்.

பிறகு இவனை வளர்பதற்கு கொஞ்சம் சிரமபட்டேன்.எப்படியும் தன்றாக படிக்க வைத்து விட வேண்டும் என்ற என் வைராக்கியம்,தற்போது நல்ல உத்தியோகத்திலும் இருக்கான் என்றதும்,பஞ்ஞமி அப்பா கதிர்வேலனை பார்த்தார்.அவன் தலையை குனிந்தப்படி உட்கார்ந்து இருந்தான்.பஞ்ஞமி பெற்றோர்களுக்கு கதிர்வேலன் குடும்ப விடயம் தெரிந்தப் பிறகு, பெண்ணை கொடுக்க விரும்பம் படமாட்டார்கள் என்று பாட்டிக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும்,அவர்கள் செய்த பிழைக்கு,இவன் என்ன பன்னுவான்,இவன் பாவம் தங்கமான பையன்,உங்க பொண்ணை கட்டி கொடுக்க சொன்னால் நீங்கள் சம்பதிப்பீங்களா என்றாள் பாட்டி கதையோடு கதையாக.இதை எதிர்பார்காத பஞ்ஞமி குடும்பம் சற்று தடுமாறிப் போனார்கள்.அது எப்படி எதையும் யோசிக்காமல் சட்டென்று சரியென்று சொல்ல முடியுமா,யோசிக்கனும் என்றார் பஞ்ஞமி அப்பா, சரி நீங்கள் யோசித்து நல்ல முடிவாக சொல்லுங்கள் என்று புறப்பட்டு விட்டார்கள் கதிர்வேலனும்,பாட்டியும்.

இதை எல்லாம் கேள்வி பட்டப் பிறகு பஞ்ஞமி பெற்றோர்கள் பெண்ணை கட்டி கொடுப்பதற்கு விரும்பவில்லை,பஞ்ஞமி வீட்டுக்கு பாட்டி சுபலட்சுமி நடையாக நடந்து,என் பேரன் நல்லவன்,நல்ல உத்தியோகத்தில் இருக்கான்,நன்றாக சம்பாதிக்கிறான் என்றெல்லாம் கூறி அவர்களை திருமணத்திற்கு ஒத்துக்க வைக்க பெரும் பாடு பட்டுப் போனாள் சுபலட்சுமி,அவர்களும் கதிரவனை விசாரித்து பார்த்தப் போது, அவனை நன்றாகவே சொன்னார்கள், அரை மனத்தோடு பஞ்ஞமியின் திருமணமும் நடந்து முடிந்தது

பஞ்ஞமி, கதிர்வேலன்,பாட்டி மூவரும் சந்தோஷமாக இருந்தார்கள், பஞ்ஞமிக்கு பாட்டியை நன்றாக பிடித்திருந்தது, நாட்கள் ஓடியது, நல்லதொரு வாழ்க்கை அமைந்தது என்று பஞ்ஞமி பெற்றோர்கள் சந்தோஷ பட்டுக் கொண்டார்கள். பஞ்ஞமி முதல் குழந்தையை பெற்றெடுத்தாள். சுபலட்சுமி பேரக் குழந்தையை நன்றாகத் கவனித்துக் கொண்டாள். கதிர்வேலனுக்கு அளவில்லாத சந்தோஷம், நினைத்த வாழ்க்கை அமைந்து தற்போது அப்பாவும் ஆகிவிட்டேன், என்பதை நினைக்கும் போது பெருமையாகவும் இருந்தது அவனுக்கு.இரண்டாவது குழந்தை பெற்றெடுக்கும் போதும் பாட்டி ஓரளவிற்கு நன்றாகத் தான் இருந்தாள்.பேரக் குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது, பாட்டி சந்தோஷமாக கண்ணைகளை மூடி விட்டாள்.கதிர்வேலனுக்கு அதை தாங்கவே முடியவில்லை.பாட்டியிடம் வளர்ந்தவன்,தற்போது பாட்டியும் தனக்கு இல்லை என்றவுடன் உடைந்து போனான். பஞ்ஞமி அவனை சமாதானம் படுத்தி,நான் இருக்கேன் என்று ஆறுதல் படுத்தினாள்

காலம் எல்லாவற்றையும் மறக்க செய்தது.இயல்பு நிலைக்கு திரும்பி விட்டான் கதிர்வேலன். சில நாட்களில் குடித்து விட்டு,வீட்டுக்கு வர ஆரம்பித்தான் கதிர்வேலன். பஞ்ஞமி அதை கண்டித்தாள்.அவன் அதை கேட்பதாக இல்லை. அவள் சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை,அப்பா அவருக்கு கொஞ்சம் குடி பழக்கம் இருக்கு என்று கண்ணை கசக்கி கொண்டு போய் நின்றாள் பெற்றோர்களிடம் பஞ்சமி,அவள் பெற்றோர்கள் அவளை சமாதானம் படுத்தி அனுப்பி வைத்தார்கள். கதிர்வேலன் குடி பழக்கம் அதிகமாகி கொண்டே போனது,நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதை வழமையாக்கி கொண்டான்.

அவன் வாங்கும் சம்பளம் போதும் வாழ்க்கை நடத்துவதற்கு,குடி பழக்கம் இருப்பதால் கதிர்வேலனுக்கு அது போதவில்லை,அதனால் வேலைகளை உடனுக்குடன் முடித்து கொடுப்பதற்கு லஞ்சம் வாங்க ஆரம்பித்தான்.இதை அறிந்த பஞ்ஞமி அப்போதும் பெற்றோர்களிடம் தான் ஓடினாள்.அவர் குடிப்பதற்கு லஞ்சம் வாங்குகிறார் என்றதும், இது எல்லாம் இந்த காலத்தில் சகஜம் என்று கூறி பெற்றோர்கள் சமாதானம் படுத்தினாலும் மனதில் சுருக்கென்றது,எப்படி இதையெல்லாம் மாப்பிள்ளையிடம் சொல்வது என்று தெரியவில்லை,நாட்கள் ஓடியது,பஞ்ஞசமி கணவனிடம் மெதுவாக எடுத்து சொன்னாள்.குடி பழக்கத்தையும்,லஞ்சம் வாங்கும் பழக்கத்தையும் விட்டு விட்டால் நல்லது.இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ஆகிவிட்டீங்கள்.பாட்டி வளர்த்த பிள்ளை,அது தான் இப்படி இருக்கீங்கள் என்று மற்றவர்கள் குறை கூறுவார்கள் என்றாள்.

கதிர்வேலனுக்கு சுள்ளென்று கோபம் வந்து விட்டது,உனக்கு யார் சொன்னது நான் லஞ்சம் வாங்குவதாக,நான் வேலை செய்து கொடுப்பதற்கு பணம் கேட்பது இல்லை,அவர்களாகவே தரும் போது நான் ஏன் அதை வேண்டாம் என்று மறுப்பதும் இல்லை,அது லஞ்சம் கிடையாது அவர்கள் எனக்கு கொடுக்கும் அன்பளிப்பு என்றதும்,பஞ்ஞமிக்கு சிரிப்பு தான் வந்தது,அடக்கி கொண்டாள், மேலும் கதிர்வேலன் சொன்னது அரச நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பணம் வாங்கினால் தான் அந்த

வேலை சரியாக நடக்கும் என்று மக்கள் மனதில் தப்பான எண்ணம் இருக்கும் மட்டும் யாராலும் இதை மாற்ற முடியாது என்றான் அவன் மற்றவர்கள் எப்படியாவது இருந்துவிட்டு போகட்டும்,கொடுக்கும் பணத்தை நீங்கள் வேண்டாம் என்று சொல்லலாம் தானே என்றாள் பஞ்ஞமி.அது எப்படி முடியும்,நான் ஒருத்தன் மட்டும் நல்லவனாக வாழ முடியாது,பணம் வேண்டாம் என்றால் இவன் ஒழுங்காக வேலை செய்ய மாட்டான் என்று தான் நினைப்பார்கள் மற்றவர்கள்.

இந்த காலத்தில் நேர்ம்மையாக வாழ்வது எல்லாம் சாத்தியம் இல்லை,உனக்கு இதுவெல்லாம் புரியாது என்றான்.ஆமாம் நமக்கு எதுவும் புரியாது உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் புரியும் லஞ்சம் வாங்குவது முதற் கொண்டு பஞ்ஞமிக்கு மனதில் ஓடியது,கதிர்வேலன் சொன்னான் நல்லது கெட்டது எல்லாம் எனக்கு தெரியும், மற்றவர்கள் பணம் வாங்கும் போது நான் மட்டும் வாங்க மாட்டேன்,குடிக்க மாட்டேன் என்றால் ஆபிஸில் என்னை மதிக்கவும் மாட்டார்கள் பத்து பேர் சேர்ந்தால் சிலவற்றை வேண்டாம் என்று ஒதுக்க முடியாது இதுவெல்லாம் உனக்கு புரியாது இந்த மாதிரி விடயத்தில் இனி நீ மூக்கை நுழைக்காதே என்று ஒரே போடாக போட்டு விட்டான் அவன்.பஞ்ஞமிக்கு தற்போது தான் ஒன்னும் புரியவில்லை கதிர்வேலன் பேச்சை கேட்டு அமைதியாக இருந்தாள்

பெற்றோர்கள் பஞ்ஞமியை பார்க்க வரும் போது எல்லாம் கணவனின் குறைகளை கூறி வருத்தப் படுவாள்.எப்படி அப்பா நேர்மையாகவே வாழனும் என்று கற்றுக் கொடுத்த உங்களுக்கு இப்படியொரு மருமகன் எல்லாம் என் தலையெழுத்து என்று அவளே ஆறுதலும் அடைந்து கொள்வாள்.பஞ்ஞமி கணவனிடம் என்னங்க நீங்கள் ஏன் தனியாக தொழில் தொடங்க கூடாது என்றாள். இப்போது வரும் வருமானம் போதும் பல சலுகைகள் இருக்கு அரச ஊழியர்களுக்கு அதையெல்லாம் விட்டு விட்டு தனியாக தொழில் செய்வது எல்லாம் நமக்கு சரிவராது என்று பிடிவாதமாக மறுத்து விட்டான் கதிர்வேலன்,ஆமாம் காலையில் போய்,ஏதாவது ஒன்னு இரண்டு வேலைகளை பார்த்து விட்டு,சாப்பிட போறோம்,டீ குடிக்க போறோம் என்று ஆபிஸ் கேன்டீனில் அரட்டை அடித்து விட்டு,மிகுதி நேரத்தில் எவனாவது அவசர வேலையாக வருகிறானா,அவனிடம் பணத்தை பறிக்கலாம் என்று உட்கார்ந்து நேரத்தை போக்கும் உங்களுக்கு தனியாக தொழில் தொடங்கவும் முடியாது, அதற்கு தைரியமும் இல்லை என்று சொல்ல முடியாதே பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள் அவள்.

கல்யாணி, குகன் வளரந்து விட்டார்கள்.கதிர்வேலனுக்கு அடுத்தடுத்து பதவி உயர்வு வேறு,இவர்களுக்கு எல்லாம் எப்படி பதவி உயர்வு

கொடுக்கின்றார்களோ தெரியவில்லை என்று பஞ்ஞமி மனதில் நினைத்துக் கொள்வாள்,அரசாங்கமே ஊழல்,அரச ஊழியர்களும் அப்படி தானே இருப்பார்கள் என்று முடிவே பன்னி விட்டாள் அவள்.பஞ்ஞமியின் பெற்றோர்களும் ஒருவர் பின் ஒருவராக போய் சேர்ந்து விட்டார்கள்.மகன் குகனநினைக்கும் போது பஞ்ஞமிக்கு பயமாக இருக்கும்,இவனும் அப்பாவை போல் லஞ்சம் வாங்குவது எல்லாம் தப்பில்லை என்று நினைத்து விட்டால் அதனாலையே அவனுக்கு எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் பொய் களவு கூடாது,மற்றவர்களிடம் எதற்கும் பணம் வாங்க கூடாது என்று கொஞ்சம் அதிகமாகவே சொல்லி தான் வளர்த்தாள் பஞ்ஞமி

ஆபிஸில் வேலை செய்யும் மாணிக்கத்திற்கும் கதிர்வேலனுக்கும் எப்போதும் ஒத்து போகாது,அடிக்கடி வேலை விடயமாக ஏதாவது தகராரு ஏற்படும்,மாணிக்கம் கதிர்வேலனை பழிவாங்க நினைத்தான்.கதிர்வேலன் லஞ்சமாக பணம் வாங்குவதை ஒருவனை வைத்து படம் பிடித்து கதிர்வேலனை மிரட்ட சொன்னான். அவனும் அதை செய்ய தொடங்கினான்.படத்தை மேல் அதிகாரியிடம் காட்டி வேலை இல்லாமல் பன்னி விடுவேன் இல்லை என்றால் காவல் அதிகாரிகளிடம் கொடுத்து சிறையில் கழி சாப்பிட வைத்து விடுவேன், என்று ஒவ்வொரு நாளும் மிரட்ட தொடங்கினான் அவன்.கதிர்வேலனுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.லஞ்சம் என்ற பெயரில் எவ்வளவு சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்று தற்போது வருந்தினான்.பஞ்ஞமியிடம் சொல்வதற்கும் பயந்தான்.நான் பணம் தருகிறேன்,நீ எனக்கு அந்த படத்தை தந்து விடு என்று பேரம் பேசினான் கதிர்வேலன்.

பணம் என்றால் பிணமும் வாய்திறக்குமே,அவன் மாணிக்கத்திடம் இதைப் பற்றி சொன்னான்.சரி நீ கொஞ்சம் அதிகமாகவே பணத்தை கேட்டு மிரட்டு,கிடைப்பதில் ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்வோம் என்று திட்டம் போட்டார்கள்.அவனும் அதிகமாகவே பணத்தை கேட்டான் கதிர்வேலனிடம்,அவன் கதிகலங்கி தான் போனான், வேலை இல்லாமல் போய்விடும்,ஜெயில் தண்டனை வேறு கிடைக்கும்,வெளியில் தெரிந்தால் அவமானம்,படம் எடுத்தவன் கையில் அவன் கேட்க்கும் தொகையை கொடுத்து படத்தை வாங்கி இந்த பிரச்சினையில் இருந்து வெளிவந்து விடலாம் என்று யோசித்தான்.மெதுவாக நடக்கும் பிரச்சினையை பஞ்ஞமியிடம் சொன்னான்.அவள் ஆடிப் போனாள்.நான் அப்போதே சொன்னேன், நீங்கள் பிடிவாதமாக இருந்தீங்கள் என்று அழுது தீர்த்தாள். முதல் முறையாக லஞ்சம் வாங்கியது எவ்வளவு பெரிய பிழை என்று உணர்ந்தான். காலம் கடந்து ஞானம் பிறந்து வேலை இல்லையே.பஞ்ஞமிக்கு தலையே சுற்றியது. பெற்றோர்கள் வாழ்ந்த வீட்டை பஞ்ஞமிக்கு தான் எழுதிவைத்திருந்தார்கள்.அதை வாடகைக்கு கொடுத்து இருந்தாள் பஞ்ஞமி. அந்த வீட்டை விற்று பணத்தை கொடுப்போம் என்று முடிவுப் பன்னினார்கள் இருவரும். வீட்டு புரோக்கரிடம் வீட்டை விற்று தரும்படி தகவலும் கூறிவிட்டார்கள்

இதற்கிடையில் பணம் கேட்டு மிரட்டியவனிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை.ஒவ்வொரு நாளும் பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தவனிடம் இருந்து தற்போது ஒரு தகவல்களும் இல்லை என்றதும் கதிர்வேலனுக்கும் பஞ்ஞமிக்கும் திக்கென்றது.என்ன நடந்திருக்கும் என்று குழப்பமாக இருந்தது.கதிர்வேலன் ஆபிஸ் போனப் போது தான் பேச்சி அடிப்பட்டது,யாரோ ஒருத்தன் அரச ஊழியர்கள் பணம் வாங்குவதாக படம் எடுத்து,அவர்களை மிரட்டி பணம் கேட்பதையே தொழிலாக வைத்து இருந்திருக்கான்,அதில் நம்ம ஆபிஸில் வேலை செய்பவர்களும் சம்பந்தப் பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு என்றதும் கதிர்வேலனுக்கு திக்கென்றது.

தற்போது காவல் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டான்,நம்ம ஆட்களும் கவனமாக இருங்கள்.இனியும் பிரச்சினைகள் வராமல் வேலை இடத்தில் வேலை செய்வது நல்லது என்று எச்சரிக்கை வேறு,ஏதோ அந்த வகையில் கதிர்வேலன் தப்பினான்,இல்லை என்றால் ஜெயில் வாழ்க்கையை நினைக்கும் போதே அவனுக்கு தலையே சுற்றியது,கடவுளே என்னை காப்பாற்றி விட்டாய் இனி எக் காரணம் கொண்டும் லஞ்சம் வாங்கவே மாட்டேன் என்று தீர்மானம் எடுத்துக் கொண்டான்

உடனே பஞ்ஞமிக்கு விடயத்தை கூறினான்.அவளுக்கு அப்போது தான் தப்பினோம் என்றிருந்தது.அவன் வீட்டுக்கு வந்தப் பிறகு,அவனிடம் இனி எப்போதும் லஞ்சம் வாங்காதீங்கள்,நமக்கு வரும் வருமானம் போதும்,வாடகை பணமும் கிடைக்கின்றது,பிள்ளைகளும் படிப்பை முடித்து வேலைக்கு போய்விட்டால் நமக்கு எந்த கஷ்டமும் இல்லை என்றாள். கதிர்வேலன் சரியென்று ஒத்துக் கொண்டான்.பணத்தை கொடுத்து வேலையை உடனே செய்து முடித்துக் கொள்ளலாம் என்ற மனநிலையுடன் வருபவர்களிடம்,நீங்கள் கொடுத்து விட்டு போங்கள்,செய்து தருகிறேன் பணம் ஏதும் வேண்டாம் என்று கூறும் கதிர்வேலனை ஆச்சிரியமாக பார்த்து விட்டு போவார்கள் அவர்கள், பஞ்ஞமி குறுக்கு வலியில் பணம் சம்பாதிக்க கூடாது என்பதை உணர்த்தி நேர்மையான வழியில் பிள்ளைகளை வளர்த்திருந்தாள் அவள்

பிள்ளைகளும் வேலைக்கு போக ஆரம்பித்தார்கள்,எந்த பிரச்சினையும் இல்லாமல் ஓடியது வாழ்க்கை,தற்போது பிள்ளைகள் இருவரும் திருமணம் முடித்து அவர்களுக்கும் பிள்ளைகள் என்றாகிவிட்டது,கதிர்வேலனுக்கு உடம்பு முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டான். நான் செய்த பாவம் தான்,தற்போது எனக்கு முடியாமல் இருக்கேன் என்று அடிக்கடி கூறி வருத்தப் படுவான் அவன்.வயதாகி விட்டது என்பாள் பஞ்ஞமி. இல்லை நான் செய்த பாவங்கள் என்னை வாட்டி வதைக்கின்றது என்று கவலைப் படுவான். அவனுக்காக கோயில் போய் வேண்டுவதே பஞ்ஞமிக்கு வேலையாகி விட்டது தற்போது எல்லாம். லஞ்சம் என்ன அவ்வளவு பெரிய குற்றமா என்று பலர் நினைப்பார்கள் குற்றம் தான் என்று அடித்து சொல்வாள் அவள். தற்போதும் கடவுளிடம் அவர் செய்த பாவங்களை மன்னித்து விடு என்று வேண்டிக் கொண்டு, மெதுவாக எழுந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் பஞ்ஞமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *