ரோல் நம்பர் 27

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 2,478 
 
 

சூரியன் தன் ஆயிரம் கைகளை விரித்து உயிர்களை அன்னையின் விரல் நுனியில் வருடுவது போன்று வருடி கொண்டு இருந்தது. சட்டென்று திரண்ட மேகங்கள் நகரின் ஒரு பகுதியில் மட்டுமே மழையை பெய்தது. சாலைகள் நிறம் மாறியிருந்தது. தண்ணீர் எங்கும் தேங்கவில்லை.

மழையில் தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன். எப்போதும் ஒரு கதையுடன் காத்திருப்பாள் அபி. உள்ளே நுழைந்தவுடன். வந்துட்டீங்களா? உங்களுக்காக தான் காத்திருக்கேன்.

இன்று பூமிபோல் கொந்தளிப்பு கொஞ்சம் அதிகம். கேட்காவிட்டால் பூகம்பம் வந்து விடும்.

சொல்லுங்க கேட்போம்

ஆத்திரமாக வருகிறது. யாரிடமாவது சொன்னால் நல்லது. கொஞ்சம் இங்க உட்காருங்க.

இன்னைக்கி யார் மாட்டுனா.

சொல்லரேன் மறந்து விடுவேன் குறுக்க பேசாதீங்க.

அது சரி.

ஒரு புது கதையை சொல்ல ஆரம்பித்தாள். இன்று நான் பாப்பாவ பள்ளியிலிருந்து அழைக்க சென்றேன்.

அதான் தினமும் நடக்குதே அதற்கு என்னாங்க.

குறுக்க பேசாதீங்க என்று செல்லமாக சிவந்த உதடுகளை மடித்து கடிந்து கொண்டாள்.

சரி சரி சொல்லுங்க.

எல்லோரும் பள்ளி வளாகத்தின் முன்பு கூட்டமாக நின்றோம். மாதா கண்ணாடிக்குள் கருணையின் வடிவமாக நீலத்தில் நின்று கொண்டு சிறு புன்னகையுடன் இருந்தாள். பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது அலைகள் வீசுவது போல். முடிந்தவுடன் மணி ஓயாமல் பத்து முறை அடித்தது. நிற்பதற்குள் கூட்டத்துடன் கலந்து உள்ளே சென்றேன் நடை மாரத்தான் ஓட்டம் போன்று.

நேராக ஆதுல் வகுப்புக்கு சென்றேன். என்னுடன் நாலைந்து பேர் வந்தார்கள். அவரவர் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல. நான் செல்லும் ஆட்டோ அதன் ஓட்டுனர் அறிவு. அவருடைய மகளும் ஆதுல் வகுப்பில் தான் படிக்கிறாள். நன்றாக படிப்பாள். படு சுட்டி. ஆதுல் வெளியில் அமைதி வீட்டில் புலி. ஆதுல் வகுப்பின் வாசலில் அறிவு நான் இன்னும் இரண்டு மூன்று பெற்றோர்கள் நின்றிருந்தோம். எப்போதும் ஏதாவது அறிவுறுத்தல்கள் கொடுத்த பின்பு தான் ஆசிரியை சுந்தரி அனுப்புவார். முதலில் ஆட்டோ ஓட்டுனரின் மகள் சந்தியாவை அழைத்தார். அதன் பிறகு ஆதூலை அழைத்தார். அழைத்தவுடன் ஆசிரியை யாருமே எழுத்து பயிற்சியை சரியாக செய்யவில்லை என்றார். அறிவு ஆதுலை தான் சொல்கிறார் தன் மகளை சொல்லவில்லை என்று எண்ணி கொண்டு பெருமித்ததுடன் கொஞ்சம் நகர்ந்து விலகினார். எனக்கு ஒரு மாதிரி எரிச்சல் வந்தது. அவர் நகர்ந்தது என்னுடைய குழந்தையை குத்தி காட்டுவது போல் இருந்தது.

உடனே ஆசிரியை அறிவை பார்த்து நில்லுங்க உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் எல்லோருக்கும் சேர்த்து தான் சொல்கிறேன். எல்லா பெற்றோர்களும் வீட்டிலும் பயிற்சி கொடுங்கள் என்றார். நான் அறிவை பார்த்து நல்லா கேட்டு கோங்க அண்ணா.

அவருக்கு ஒரு மாதிரி ஆனது. சரிங்க மேடம். எனக்கு உள்ளூர எரிச்சல் இருந்தாலும் கொஞ்சம் அணைந்தது போல் இருந்தது.

சுந்தரி பொதுவாக சொன்னது நல்லது. ஆனால் தினமும் ஒவ்வொரு குழந்தையை பற்றி ஏதாவது ஒரு குறை கூறுவார். தன் குழந்தையை பற்றி கூறினால் அன்று முழுவதும் ஒரே எரிச்சல் வந்துவிடும். அதை எப்போதும் ராஜாவிடம் தான் காட்டுவேன். ராஜா புரிந்து கொண்டு எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.

ஆட்டோ எல்லோரையும் ஏற்றி கொண்டு நகர்ந்தது சாலை கூட்ட நெறிசலில். ஒருவர் கூறினார் பாலம் சரியா பிளான் இல்லாமல் அவசரமாக கட்டி விட்டார்கள். அதனால் தான் கூட்ட நெரிசல்.

கொஞ்ச தூரம் சென்றவுடன். சந்தியா ஆன்டி ஆதுல் இன்று பரீட்சை சரியா எழுதவில்லை என்றாள். அதற்குள் ஒரு சிறுமி வீடு வந்து விட்டது. அவள் இறங்கி செல்வதற்குள். அறிவு சந்தியாவிடம் கொஞ்சம் அதட்டலாக நீ எல்லாவற்றையும் சரியா எழுதி விட்டாயா என்றார். சந்தியா அப்பா எல்லா விடையும் சரியாக எழுத்திட்டேன் என்றாள்.

நான் ஆதுலிடம் என்ன எல்லாம் எழுதினியா.

அம்மா நீங்க சொல்லி கொடுத்தத சரியாக எழுதிட்டேன். எனக்கு நம்பிக்கை இல்லை.

ரீபோட் கார்டு பரீட்சை தாள் வரட்டும் பார்க்கலாம்.

இதுதான் நடந்தது.

என்று ஒரு குட்டி கதையை சொல்லி முடித்தாள்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா. தூக்கி போட்டுட்டு வேலைய பாருங்க. சரி சரி பார்த்து கொள்ளலாம்.

அறிவுக்கு அவன் மகள் படிக்கிறாள் என்ற திமிரு. இதில் தனி வகுப்பு வேறு அனுப்புகிறார். ஆதுலையும் தனி வகுப்புக்கு அனுப்பலாம்.

நீங்க சொல்லறத பார்த்தா. எனக்கு ஒரு பழமொழி தான் நியாபகம் வருது.

சொல்லுங்க.

சொன்னா நீங்க இன்னும் கோபப் படுவீங்க.

பரவால சொல்லுங்க.

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை!

ஆதுல் படிக்க மாட்டுரா எழுத மாட்டுரா என்ன செய்றது. நீங்க சொல்லுங்க. அந்த ஆட்டோ காரர் அறிவு எனக்கு புத்தி மதி வேறு சொல்லுரார்.

முதல்ல அந்த அறிவு சொல்லறத காதுல வாங்காத . பிள்ளைங்க படிக்கலைனா பரவால என்று சத்தமாக சொல்லு.

சரி சரி.

நீ சாய் பாபா கோயிலுக்கு போற. அங்க என்ன போட்டுருக்கு.

தெரியலயே.

“நம்பிக்கை மற்றும் பொறுமை” என்று தங்க நிற தகடில் அரக்கில் மின்னும் அழகான அறிவான பொன் மொழிகள். ஆதுல் படிப்பா. நீங்க அவரசபடாதீங்க.

பிள்ளையார் கோயிலை கடக்கும் போது பூசைகள் தொடங்கி விட்டன மணி ஓசைகள் கேட்டன மலர்களின் மணம் வீசியது பிரசாத மணமும் மூக்கை தொட்டது.

நான் வீடு திரும்பி கொண்டு இருந்தேன். எனக்கு குரல் செய்தி வந்தது. பார்த்தால் அபியிடம் இருந்து வந்தது.

சாய்ந்து கொண்டு இருந்த முக்கோண பொத்தானை தட்டினேன்.

அபி சத்தமாக பேசினாள். பாப்பா ரிப்போட் காட் கொடுத்தாங்க பார்த்தேன் எல்லாம் ஏ கிரேட் ஒன்று இரண்டு பி கிரேட். பரீட்சை தாள் பார்த்தேன் எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள். எனக்கு பார்த்தவுடன் ஒரே பரவசம். உங்களுக்கு அனுப்பியிருக்கேன் பாருங்க. ஏதாவது வாங்கிட்டு வாங்க.

வித விதமான பூக்களை பரிசாக வாழ்த்துகளாக திரும்ப அனுப்பினேன்.

அவள் குரல் மகிழ்ச்சியில் ஆடியது. நான் எல்லா பாடங்களின் தாளையும் பார்த்தேன் அதிக மதிப்பெண்கள். பொது அறிவு பாடம் தாளில் ரோல் நம்பர் 27 என்றும் மதிப்பெண்கள் 60 க்கு 60 என்றும் சிவப்பு மை பேனாவில் எழுதியிருந்தது.

மகிழ்ச்சி.

பாம்பே ஸ்வீட்ஸ் நோக்கி வண்டி சென்றது.

“நம்பிக்கை மற்றும் பொறுமை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *