ம்… – ஒரு பக்க கதை





மெயின் ரோட்டு வளைவில் ராஜேஷ் திரும்பிய அடுத்த நொடி மின்னல் வேகத்தில் எதிரே வந்த கார் அவனை அடித்துவிட்டுச் சென்றது.
அந்தக் காட்சியுடன் தொடரும் என்று நாடகத்தை முடித்துவிட்டான். நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த பூர்ணிமா…
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த குணா, தன் மனைவியிடம் “என்னாச்சு பூர்ணிமா ஒரு மாதிரி இருக்கிற?”
“என்னங்க! பாசம் நாடகத்தில் சுந்தரி மகனை கார்காரன் அடிச்சிட்டுப் போயிட்டான். ஆண்டவா அவனுக்கு எதுவும் ஆகிடக்கூடாது.” என்றாள் சோகத்துடன்
குணா பைக்கில், பூர்ணிமா பஜாருக்குச் சென்று கொண்டிருந்த நேரம், ரோட்டில் ஒரு வாலிபன் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான், இந்தக் காட்சியைக் கண்ட குணா பைக்கை நிறுத்தினான்.
“உயிர் இருக்கு ஆஸ்பத்திரிக்குப் போனால் பொழச்சிக்குவான்” என்றான்
“என்னங்க நமக்கு எதுக்குங்க வீண் பிரச்னை ஏதாவது ஆயிடிச்சினா கோர்ட்டு கேசுன்னு நாம அலையணும். வண்டியை எடுங்க நாம போகலாம்” என்றாள்.
– ராஜ்வரன் (அக்டோபர் 2011)