மெளனசாமியும் மதம் பிடித்த யானையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 3,174 
 
 

அம்மா வீடு என்றால் எப்பவுமே புறம் போக்கு நிழல்களை மறந்து விட்டு அமானுஷ்ய இருப்பிடமமான கோவில் இருப்பிடம், ஒன்றே கண்களுக்குள் களை கட்டித் தோன்றும் பசியோடு யார் வந்தாலும் சோறு இல்லையென்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை அம்மாவின் இருப்பு மட்டுமல்ல அவளின் கைகளும் அத்துணை புனிதமானது தோண்டத் தோண்ட வரும் கற்பக விருட்சம் மாதிரி அவள் வாழ்ந்த வீடு அவள் பிள்ளைகளில் இதை நன்கு அறிந்து வைத்திருப்பவள் மதுரா ஒருத்தியே அவள் ஊர் சங்கதிகதிகளை விட, இது வே அத்துபடி அந்தக் காலத்தில் சாமிமாரின் வருகை சகஜமாகவே நட்ந்தேறும் அவர்கள் பசிக்கு உணவளிக்கிற நித்ய கைங்கரியம் அம்மாவினுடையது அவளுக்கு இதிலேயே வயிறு நிறைந்து விடும்.

எனினும் இதனை ஊர் கணக்கெடுப்பதில்லை, அவளுக்கு செய்காரியம் ஒன்றும் தெரியாது. பிள்ளைகளுக்கும் பழக்கவில்லை இதுவே ஊர் வம்பளக்கிற புதினமாகி, காற்றில் கரைந்து போவதாய் மதுராவின் காதுகளுக்கு எட்டிற்று அவளுக்குக் கல்யாணமானாலும் இது தான் நடக்கும் இதற்காகவே அவளைக் கழுவிலேற்றிக் கொன்று புதைத்து விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள் அத்துனை கொரூரமானது இவ் வுலகின் சங்கதிகள் இதிலிருந்து மீண்டு உயிர் பிழைத்து எழுவதே பெரும் தவம் மாதிரி.

விட்டெறிந்த, கல்லெல்லாம் அவள் போலும் அம்மாவைப் போலும் அன்பு வழிபாடு ஒன்றையே உயிர் நிலையாகக் கொண்டிருந்தால், மட்டுமே மடியில் கனக்கிற, கற்களெல்லாம் பூக்களாகவே மலர்வது மட்டுமல்ல பிறரை வாழ்விக்கவும் செய்யும்.

இந்த மெளனசாமியார் ஒருநாள் அபூர்வமாக, வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இப்படி எத்தனை சாமிமார்களை சந்நியாசிகளை, இந்த வீடு தரிசனம் கண்டிருக்கிறது, இது இரு தலைமுறைக்கு முன்னால் நடந்தேறிய கதை. இப்போது எல்லாம் சுத்தம். சாமிமார்களே இல்லை சந்நியாசிகளையும் காணோம். முற்றம் காலியாகிப் போன ஒரு வெறுமை கண்களைச் சுட்டெரிக்கிறது ஏன் அம்மா கூட இல்லைத் தான், இங்கு மதுரா தனித்துப் போனாள்.

சுடுகாடு. சுற்றிலும் சுடுகாடு இதைக் கணக்கில் எடுக்காமல், வாழ்கிற வாழ்க்கை மனிதர்களெல்லாம் எங்கோ அந்தரத்தில் சொர்க்கத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்க, மதுராவுக்கு மட்டும் ஏன் இந்த பழைய பஞ்சாங்க பார்வையிடல், முழுவதுமாய் வழித்துப் போட்ட பின்னுமா? கட்டிப் பிடித்து வாழ்க்கையின் வெறுமையையல்ல நிலையாமை பற்றி அறைகூவல் விடுத்து அழுவதற்குமே ஆட்கள் இல்லாமல் போன, வெறுமை நெருப்பில் தான் இப்போது அவள்.

இருந்தாலும் ஒரு குளிர்ச்சித் தடாகம், அம்மாவின் முகம் அவளுடன் வாழ்ந்த மனிதர்கள் சாதராண மனிதர்களா அவர்கள்? சந்நியாசிகளென்றால், அப்படியொரு குளிர் நிலா. இந்த சுகானுபங்கள் அவளுக்கு மட்டும் தான் நிஜம்.

போலிகள் பற்றி சிந்திக்க மனம் மறுத்தது போலியான இந்த உலகத்தில், அம்மாவின் இருப்பு ஒன்று மட்டுமே நிஜமானதாய் அவளின் ஒளிர்தலில் இளைப்பாறிப் போகிற சந்நியாசிக் கூட்டத்தின் முன் துரும்பைப் பற்றிக் கொண்டு அலைகிற மனிதரெல்லாம் தூசு என்றே பட்டது.

அன்று ஒரு யுகத்திற்கு முன்னால், மதுரா வாழ்ந்த கதை ஏட்டில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒன்று அவள் அம்மா பராசக்தி அவள் பிறந்த போது யாரோ சாமி வந்து அவரின் திருவடி தீக்க்ஷை பெற்றே அவள் பராசக்தியாக மாறி, இந்த உலகை வாழ்விக்க வந்ததாக, ஒரு புராணம் கூட உண்டு.

இந்த மெளனசாமியோடு கொஞ்சநாள் பழக்கம், தான் அவர் பூர்வீகம் பற்றி அறிய முடியவில்லை அவர் வாய் திறந்து பேசினால், தானே இதையெல்லாம் அறிய முடியும்? அவர் பேசாவிட்டால் என்ன. அவர் ஒளி மிகுவிழிகளே ஆயிரம் கதை சொல்லும். ஆத்மாவைப் பற்றிக் கூறும் அவர் மிக ஒல்லியாக, கறுப்பாக இருந்தாலும் முகத்தின் களை கொண்டு பிரகாசிக்கும் தேஜஸ் முன்னால், சர்வ புலன்களும் வசப்பட்டு விடுவது போல அம்மாவும் அவ்வாறே ஆகிப் போகியிருந்தாள்.

அதனால் அவர் வீட்டிற்கு வந்தாலே சமையல் அமோகமாக நடந்தேறும் ஒரு ஞாயிறன்று இப்படித்தான் அம்மா அவரை வாழையிலை போட்டு உபசரித்துக் கொண்டிருந்த, போது, அவளின் முகுக்குப் பின்னால் தெறிக்க விடுகிற மாதிரி ஒரு குரல் கேட்டது .

அது வேறு யாருமில்லை பக்கத்து வீட்டு ராஜரத்தினம். அவனுக்கும் நல்ல பசி. வீட்டிலே அப்பா சிறு விவசாயம் செய்வதால், ஒழுங்கான சாப்பாடு கூட இல்லாமல், பசியாற அவன் இங்கு தான் அடிக்கடி வந்து, போவான் புத்தி வளர்ச்சி குன்றிய ஓர் அரைக் கிறுக்கன் மாதிரி அவன் எனினும் அம்மாவின் அபிரித அன்பு எழுச்சிக்கு முன்னால், அவனும் பசியாறிப் போவதே நிதர்ஸனமான உண்மை ஏனோ இந்த மெளசாமியின் வருகைக்குப் பின்னால், அவனிடம் பலத்த மாறுதல் தெரிந்தது அவர் மீது புகார் கூறுமளவுக்கு அவன் வயிறு எரிவதை ஒரு எதிர்மறை நிகழ்வாகவே மதுரா எதிர் கொள்ள நேர்ந்தது.

அபிரித அன்பு எழுச்சிக்கு முன்னால், அவனும் பசியாறிப் போவதே நிதர்ஸனமான உண்மை ஏனோ இந்த மெளசாமியின் வருகைக்குப் பின்னால், அவனிடம் பலத்த மாறுதல் தெரிந்தது அவர் மீது புகார் கூறுமளவுக்கு அவன் வயிறு எரிவதை ஒரு எதிர்மறை நிகழ்வாகவே மதுரா எதிர் கொள்ள நேர்ந்தது.

அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை என்று ஞாபகம் சாமி சாப்பிட வரும் என்று தெரிந்து முதல் நாளே அப்பா சுன்னாகம் சந்தைக்குப் போய் பாசிப்பயறு அதாவது தோல் நீக்கிய மஞ்சள் நிறத்திலான உடைத்த பயறு மட்டுவில் கத்தரிக்காய் வெள்ளை நிறத்தில் குண்டாக இருகும் கத்திரிக்காய் எல்லாம் வாங்கிப் போட்டிருந்ததால், சமையில் அமர்க்களம் பருபுக் கறியும் கத்தரிக்காய் பால் கறி மசியலும் மிக அருமை இதஉடன் சுவை சேர்க்க தக்காளிப் பழ குழம்பு வேறு/ பாயாசம் கூட அம்மா காய்ச்சியிருந்தாள்.

மெளன சாமியார் வந்தால், நாக்கிலே ஜலம் சிட்ட இலையை வழித்து வழித்து சாப்பிடும் அழகை நாள் பூரா ரசிக்கலாம் அம்மா இதற்காகவா அவருக்குச் சாபாடு போடுகிறாள் ? இல்லை இது அவளின் இயல்பு பசியுடன் ராஜரட்னம் வரும் போதும் இதே நிலை தான்.

அவனுக்கு இது தெரியவில்லையே மெளனசாமியைப் பார்க்க, அன்பு மேலோங்குவதற்குப் பதிலாக எரிச்சல் தான் வந்தது அன்றும் அப்படித் தான் வழக்கமாக படிக்கட்டில் அமர்ந்து தான் அவன் சாப்பிடுவான் அன்று மெளன சாமியைக் கண்டதும் கோபம் தலைக் கேற தன்னை மறந்து உள்ளேயே வந்து விட்டான் முன் வராந்தா வாசலில் மெளன சாமியார் அமைதியாக அமர்ந்து சாப்பிடுவதைக் கண்டதும் ஓடிப் போய் இலையை இழுத்து எறிந்த பிற்பாடு தான் அவன் தலை நிமிர்ந்தான் சாந்தி பெற்றான் அங்கு ஒரு பிரளயமே நடந்தேறி விட்டதைக் கண்ட பிறகும் சிரிப்பு நிலவாய் தெய்வீக இருப்பிலே அவர் நிலை நீடித்த மெளன விரதம் தந்த பரிசாய் அவரின் அமைதி ததும்பிய சாத்வீக தரிசனக் கோலம் அம்மா அவரிடம் மனிப்புக் கேட்கும் பாவனையில் கையெடுத்து அவரைக் கும்பிட்டவாறே , பதறியடித்துக் கொண்டு ஓடிவருவதை இமைகள் தெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா. பின்னர் சகஜமாகக் குரலை உயர்த்தி சொன்னாள்.

விடுங்கோ அம்மா நடக்கக் கூடாதது நடந்து விட்டது வேறு வழியில்லை மதம் பிடித்த யானை இவன் மட்டுமல்ல உலகம் பூரா நிறைஞ்சிருக்கு சாமி காலிலை விழுந்து நான் மன்னிப்பிக் கேக்கிறன் இந்த ராஜரத்தினத்துக்கு இவ்வளவு இவர் மீது என்ன அப்படியொரு வயித்தெரிச்சல் பூமி பிளக்குது இவனுக்கு நீங்கள் சாப்பாடு போட்ட அதே கை தான் எனக்குத் தெரியும் உங்கள் அன்பிலே மாற்றமில்லை ஆனல் இதை இவன் போய் வெளியிலை வேறு விதமாகவும் கதைக்கலாம் இவர் ஒரு மதம் பிடிச்ச யானை முற்றிலும் மாறுபட்டவன் துவேஷி சீ இவன் முகத்தில் விழிக்கிறதே பாவம் இனிமேல் இஞ்சை இவனை அணைக்க வேண்டாம்.

அவன் என்ன நினைத்தானோ? விடு விடென்று திரும்பி வாசலை நோக்கி அவன் திரும்பி நடந்த போது, கேட்டும் விழி பிதுங்கிற்று அதைப் பார்த்து விட்டு இரக்கம் மேலிட அம்மா சொன்னாள்.

பாவம்.

ஆர் பாவம்? இந்த மதம் பிடிச்ச யானையா?

பாவம் அவன் புத்திக் கோளாறிலை செய்ததை பெரிசாய் நான் எடுக்கேலை இனி வந்தாலும் இவனுக்கு நான் சோறு குடுப்பன் இதைக் கேட்டு அருளாசி கூறுவது போல மறை பொருளாகிப் போன இறைபாஷையில் மாறாத புன்னைகையுடன் சாமி ஏதோ சொல்வது போல உணர்ந்தாள் மதுரா எதிரே நிற்கும் மதம் பிடித்த அந்த யானையைக் கூட அடக்கத் தெரிந்த அங்குசமாய் அவர் முகம் அப்போது கூட ஒளி விட்டுப் பிரகாசிபதைக் கண்டு, அவள் வெகுவாகப் புல்லரித்துப் போனாள் அந்த எதிர்பாராத பிணத்தையே உயிர் பெற்று எழச் செய்யும் நேர் மறை நிகழ்ச்சி அரங்கேற்றத்துக்கு முன்னால், எதிர்மறையாக சிந்திப்பது கூட பாவம் என்று பட்டது. அவளுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *